மூவகை மாணாக்கர்
மூவகை மாணாக்கர் உலகில் உள்ள அனைத்துமே ஏதோ ஒரு விதிக்கு உட்பட்டுதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எழுத்து சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐவகை இலக்கணம் கூறிய பெருமை தமிழுக்கு உண்டு. உயிர் உள்ளவற்றிற்கு இலக்கணம் உண்டு. உயிர் இல்லாதவற்றிற்கும் இலக்கணம் உண்டு. இலக்கணம் என்றதுமே இலக்கண நூல்களான தொல்காப்பியம் , நன்னூல், யாப்பருங்கலக் காரிகை,தண்டியலங்காரம் இவை யாவும் நம் மனதில் வந்து போகும். கவிதை எழுதுபவர்கள் மட்டுமே இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும் என்பதல்ல. அனைவருமே இலக்கணம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அனைவருக்கும் இலக்கணம் எழுதிய பெருமை இலக்கண ஆசிரியர்களுக்கு உண்டு. நன்னூலார் உங்களுக்கும் எனக்கும்கூட இலக்கணம் எழுதி இருக்கிறார். எங்களுக்கா....ஆச்சரியமாக இருக்கிறதா ? நீங்கள் கட்டுரையைப் படிக்கிறவர்தானே! அப்படியானால் உங்களுக்குத்தான். உங்களுக்குத்தாங்க... மாணவர்களுக்குத்தாங்க... நாங்கள் மாணவர்கள் இல்லையே ! நாங்கள் எப்போதோ படித்து முடித்து விட்டோம் என்கிறீர்களா? படித்து முடித்து விட்டவர் எவருமிலர். வாழ்நாள் முழுவத...