நிலத்தினும் பெரிதே
நிலத்தினும் பெரிதே தலைவன் ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கின்றான் . அவளும் அவன் காதலை ஏற்றுக்கொள்கிறாள். இருவருக்குமிடையில் நெடுநாட்களாக காதல் தொடர்கிறது.ஆனால் திருமணம் குறித்து எந்தவொரு பேச்சுமில்லை. இப்படியே எவ்வளவு நாட்கள்தான் காதலித்து கொண்டிருப்பது? இவர்கள் இருவரும் காதலிப்பது அப்பெண்ணின் தோழிக்குத் தெரியும். வெகுவிரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தாள். ஆனால் திருமணம் என்ற பேச்சே நடைபெறுவதாகத் தெரியவில்லை. இப்படியே இருவரும் காதல் செய்து கொண்டிருந்தால் இதற்கு முடிவுதான் என்ன? திருமணம் செய்து கொள்ள வேண்டாமா? கவலைப்படுகிறாள் தோழி. ஒருநாள் தலைவியைப் பார்க்க வந்திருக்கிறான் தலைவன். பிறர் அறியாதவாறு மறைவாக நின்று கொண்டிருக்கிறான். தலைவன் மறைந்து நிற்பதைத் தோழி பார்த்து விடுகிறாள். இதுதான் நல்ல வாய்ப்பு. தலைவனிடம் கேட்டுவிட வேண்டியதுதான். ஆனால் இது சாத்தியமாகுமா? நேரடியாக எப்படி கேட்பது? தலைவன் தவறாகப் புரிந்துகொண்டால் என்ன செய்வது? ஆனாலும் தலைவன் கேட்கும்படியாக தலைவனைப் பழித்துப் பேசுகிறாள் தோழி! தன் அன்பிற்குரியவனை இன்ன...