குணமென்னும் குன்றேறி நின்றார்...
குணமென்னும் குன்றேறி நின்றார்..... " குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேனும் காத்தல் அரிது " குறள் : 29 குணம் - நற்குணம் என்னும் - என்று சொல்லக்கூடிய குன்று - சிறு மலை ஏறி - ஏறி நின்றார் - நிற்பவர் வெகுளி - சினம் கணமேனும் -நொடிப்பொழுதேனும் காத்தல் - காத்துக் கொள்ளுதல் அரிது - அருமையானது. நற்குணம் என்னும் உயர்குன்றின்மீது நிற்கும் சான்றோர்க்கு வரும் சினம் நொடிப்பொழுதுக்கு மேல் நீடித்து நிற்பதில்லை. விளக்கம் : நற்குணங்கள் கொண்டவரிடம் சினம் ஒருபோதும் அண்டுவதில்லை. அப்படியே சினம் கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்துவிட்டாலும் அது கணப்பொழுதும் நீடித்து நிற்பதில்லை. அதுதான் நற்குணநலன்கள் கொண்டவருக்கான சிறப்பு. எதற்கெடுத்தாலும் சினம் கொள்பவர் எவ்வளவு நற்குணம் கொண்டவராக இருந்தாலும் அவை எல்லாம் அந்தக் கணநேர கோபத்தில் காணாமல் போய்விடும். இல்லை...அந்தச் சினம் மற்ற நற்குணங்களை அழித்துவிடும்.ஆதலால் நற்குணம் என்னும் நல்லுயரத்தை எட்டியவர்கள் சினம் கொள்ளமாட்டார்....