Posts

Showing posts with the label தீதும் நன்றும் பிறர் தர வாரா -கட்டுரை

தீதும் நன்றும் பிறர் தர வாரா

தீதும் நன்றும் பிறர் தர வாரா  தீதும் நன்றும் பிறர் தர வாரா" எங்கேயோ கேட்டக் குரல். எப்போதோ படித்த வரி. பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என விட்ட வரி. ஆனால் முதல் வரி மட்டும் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஐநா சபை வாயிலில் நின்று அனைவரையும் வரவேற்கிறது. தமிழின் பெருமையே அந்த ஒற்றை வரியில்தான் அடங்கி இருக்கிறது என்று உரத்தக் குரலில் கூறிக் கொண்டிருக்கிறோம். முதல் வரி என்பதால் அதை உறுதியாகப் பற்றிக் கொண்டோமா? அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் எவ்வளவு கனமான மதிப்புமிக்க கருத்தைச் சுமந்து நிற்கிறது என்பது அடுத்தடுத்த வரிகளை வாசிக்கும்போது புரியும். நான் எந்தப் பாடலைச் சொல்கிறேன் என்பது உங்களுக்குப் இப்போது புரிந்திருக்கும். கணியன் பூங்குன்றனாரின்  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தொடங்கும் பாடலைப்பற்றித்தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பாடலை முழுவதுமாக வாசித்துப்  பாருங்கள். எவ்வளவு கருத்தாழமிக்கப் பாடல் இது. ஒவ்வொரு வரியும் உயிரோட்டம் மிக்க உலக உண்மைகளை உரக்கச் சொல்லி வருவது. காலத்தால் அழியாத கருத்தோவியங்களைச் சுமந்து நிற்பது. பாடல் இதோ யாதும் ஊரே; யாவரும் கேளிர...