Posts

Showing posts with the label 'ஏல' திருநெல்வேலி வட்டார வழக்குச் சொல்

'ஏல 'திருநெல்வேலி வட்டார வழக்குச் சொல்

' ஏல' திருநெல்வேலி வட்டார வழக்குச் சொல் அண்மை காலமாக நம் காதுகளில் அடிக்கடி வந்து விழும் ஒரு சொல் 'ஏல. ' என்பதுதான். ஏல...போல...வால.... இது எல்லாமே எங்கள் பகுதியில் பேசப்படும் சொற்கள்தான். ஆனால் இந்த ஏல...ஏல...என்பது மட்டும் தொலைக்காட்சியில்  அடிக்கடி உச்சரிக்கப்படும் சொல்லாகிவிட்டது. திரைப்படங்களால் இந்தச் சொல் தனிக்கவனம் பெற்று வருகிறது. இதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் உண்மையிலேயே அந்தச் சொல் உண்மையான பொருளில் சொல்லப் படுகிறதா...? அல்லது திசைமாறிப் போகிறதா ?என்று  யோசித்துப் பார்த்தேன். என் மனசாட்சிப்படி திசைமாறிப் போவது போன்றே தோன்றியது. ஏல....ஏல....என்று திருநெல்வேலிக்காரர்களை ஏலம் விடுவதைப் பார்த்தால் என்ன சொல்வெதென்றே தெரியவில்லை. திருநெல்வேலிக்காரர்கள்  தூத்துக்குடிக்காரர்கள் அனைவரும் ,ஏல ...'என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள் என்பது  அனைவருக்கும் தெரியும். அதனை எப்போது? எங்கே? யாரிடம்? எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பது அனைவருக்கும் தெரிய வேண்டுமல்லவா! தெரிந்துதான் பேசுகிறார்களா? தெரியாமல்தான் பேசுகிறார்களா? ஒன்றும் புரியவில்லை. கேட்டுவிட்டு சும்மா இருக்கவும் மன...