நகல்வல்லர் அல்லார்க்கு.....
நகல்வல்லர் அல்லார்க்கு..... " நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள் " குறள் : 999 நகல்வல்லர் _பிறரோடு ஒத்திசைந்திருத்தல் அல்லார்க்கு _ இல்லாதவர்க்கு மாயிரு _ மிகப் பெரிய ஞாலம் _ உலகம் பகலும் _ பகலிலும் இருள் _ இருளில் பாற்பட்டன்று _ மூழ்கியது போலாகும் பிறரோடு ஒத்திசைந்து வாழும் நற்பண்பு இல்லாதவர்க்கு, இந்த உலகமானது பகல் பொழுதிலும்கூட இருளாகவே இருக்கும். விளக்கம் : பிறரோடு பேசிப் பழகி வாழ்தல் வேண்டும். அப்படி ஒரு நற்பண்பு வாய்க்கப் பெற்றால் நம்மோடு பேச, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள என்று எப்போதும் நம்மைச் சூழ யாராயினும் இருந்து கொண்டே இருப்பர். யாருடனும் அதிகம் கலவாமல் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் மக்கள் மனதில் மகிழ்ச்சி இர...