கிறிஸ்துமஸ் தாத்தா
கிறிஸ்துமஸ் தாத்தா கிறிஸ்மஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்மஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான். அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த உடல் இவற்றோடு முதுமையைப் பிரதிபலிக்கும் வசீகரமான முகம். யாரிந்த கிறிஸ்துமஸ் தாத்தா ? கிறிஸ்துவுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் என்ன தொடர்பு? கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? இப்படி பல கேள்விகள் வந்து இடைமறித்து நிற்கின்றன. கிறிஸ்மஸ் தாத்தா பற்றிய செய்திகள் பைபிளில் இல்லை. பிறகு எங்கிருந்து இந்த கிறிஸ்துமஸ் தாத்தா வந்தார்? கிறிஸ்துமஸ் தாத்தா என்ற கதாப்பாத்திரம் இடையில் நுழைவதற்குக் காரணம் என்ன ? சிறுவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா யார் ? அதற்கான விடையை அறிய வரலாற்றைத் திருப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. கி.பி.4 ம் நூற்றாண்டில் துருக்கி நாட்டின் சிமிர்னா என்ற இடத்தில் நிக்கோலஸ் என்பவர் பேராயராக இருந்தார். இவர் மிகப் பெரிய செல்வந்தர். ஆனால் ஏழைகளுக்கு உதவும் நற்பண்பு கொண்டவர்.குறிப்பாக குழந்தைகள் மே...