Posts

Showing posts from May, 2021

கான முயலெய்த அம்பினில்....

    கான முயலெய்த அம்பினில்.... " கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது."                        குறள் :  772 கான - காட்டின்கண் முயல்  - முயல் எய்த - குறி தப்பாமல் எய்திய அம்பினில் - அம்பை ஏந்துவதைவிட யானை - வேழம், ஆனை பிழைத்த - தவறிய வேல் - கையால் எறியும் ஈட்டி ஏந்தல் - தாங்குதல் இனிது -நன்றானதாகும் காட்டில் ஓடும் முயலை நோக்கி குறிதப்பாமல் எய்தும் அம்பை ஏந்துவதைவிட நின்று கொண்டிருக்கும் யானைமீது எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறப்புடையதாகும். விளக்கம் : ஒருவன் காட்டில் பதுங்கிப் பதுங்கி ஓடும் முயலைக் குறி தப்பாமல் எய்திய அம்பை கையில் ஏந்தி வருகிறான் மற்றொருவனோ வெட்டவெளியில் நின்று கொண்டிருக்கும்  யானையை எய்திய வேலை கையில் ஏந்தி வருகிறான். இவை இரண்டனுள்ளும் எது சிறப்புடையது எனில் யானையை எய்திய வேலை ஏந்தி வருதலே  சிறப்புடையதாகும். முயல் கையால் பிடித்துவிடக்கூடிய அளவுக்கு சிறிய உருவம் கொண்ட விலங்கு. அது இயல்பாகவே பயந்து பதுங்கிப் பதுங்கி ஓடும். அதனை எய்தும் அம்பை ஏந்துவதால் அந்த வீரனுக்கு...

தாலந்து பற்றிய உவமை

    தாலந்து -உவமை திறமைசாலி யார் என்று கேட்டால் ஆளாளாளுக்கு ஒரு கருத்தைக் கூறுவர். தாங்கள் சொல்லும் கருத்துதான் உண்மை என்று மெய்ப்பிக்கவும் முற்படுவர். உண்மையுள்ளவன் யார் என்று கேட்டால் .... நான் என்று யாரும் துணிந்து சொல்வதில்லை. எப்போதாவது ஒருமுறை பொய் சொல்லி இருப்போம் . நம் மனசாட்சியே நமக்கு எதிராக சாட்சி சொல்ல கிளம்பிக் கொண்டிருக்கும். அதனால்தான் நமக்கு அந்த துணிவு வருவதில்லை. முடிவாக யாருமே இவ்வுலகத்தில் உண்மையுள்ளவுங்க இல்லைங்க...என்று  சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவோம். சிலர் உண்மையாக இருந்து என்னத்தைக் கண்டோம் என்று சலித்துக் கொள்வதும் உண்டு. உண்மையுள்ளவன் என்னத்தைக் காணமுடியும் என்றுதானே கேட்கிறீர்கள்? உங்கள் கேள்விக்கான பதிலை ஒரு  உவமை மூலமாக தெரிந்து கொள்வோம். வாருங்கள். எப்போதுமே ஏசு கிறிஸ்து உவமைகள் மூலமாக தான் சொல்ல வந்த கருத்தை மக்கள் மனதில் பதிய வைப்பார். அவர் கூறும் உவமைகள் எல்லாம் பெரும்பாலும் கேள்வி கேட்டு அதற்கான பதிலாகவே அமைந்திருக்கும். நீங்களும் கேள்வி கேட்டுவிட்டீர்களல்லவா? அதற்கான பதில் கிடைக்க வேண்டாமா ? இதோ  உங்கள் கேள்விக்கான பதில்: ஒரு எஜ...

தாயன்பு

              தாயன்பு  திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தன் இரண்டு பிள்ளைகள் மற்றும் தாய் பொன்னம்மாளோடு ஆட்டோவில் வந்து இறங்கினாள் கமலம். ஆட்டோவில் இருந்த சாமான்களைக் கீழே இறக்கி வைத்தார். சாமான் எல்லாம் எடுத்துவிட்டோமா? ஏதாவது கீழே விழுந்து கிடக்கிறதா என்று ஆட்டோவுக்குள் தலையை விட்டுத் துழாவிப் பார்த்துக் கொண்டிருந்தார். "அக்கா நீங்க விடுங்க...நான் பார்க்கிறேன்....சீக்கிரம் எனக்கு காசு கொடுங்க... அடுத்த சவாரி போகணும்" அவசரப்படுத்தினார் ஆட்டோக்காரர். "இருப்பா...வந்த அவசரத்துல அப்படி அப்படியே அள்ளிப் போட்டுட்டு வந்தோம். எதுவும் விழுந்துகிழுந்து கிடக்கப்பிடாதுல்ல" என்றபடியே ஆட்டோக்குள் இருந்து தலையை வெளியில் எடுத்தார் கமலம். "ஏல ...எல்லா சாமானும் இருக்கா என்று எண்ணி பார்த்துகிட்டியளா... இரண்டு சூட்கேசு, இரண்டு அட்டைப்பெட்டி ஒரு குட்டிச்சாக்கு, இரண்டு சோத்துப் பை தண்ணி கேனு ஒண்ணு, கைப்பை ஒண்ணு மொத்தம் ஒன்பது உருப்படி. நல்லா எண்ணிகிட்டியளா...."என்று மகன்களைப் பார்த்துக் கேட்டார். "எம்மோ அண்ணன் பள்ளிகூடத்துப் பை ஒண்ணு......

அறிவினான் ஆகுவ துண்டோ....

"அறிவினான்  ஆகுவ துண்டோ  பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை "                           குறள் :   315 அறிவினான் - அறிவினால் ஆகுவது - ஆகும் செயல் உண்டோ - உளதோ பிறிதின் - மற்றவருடைய நோய் - துன்பம் தம் - தமது நோய் - துயரம் ,இன்னல் போல் - போன்று போற்றாக்கடை - கருதப்படாவிடத்து பிறர் உயிர்கள் படும் துன்பத்தைத் தன் துன்பம் போன்று கருதும் பண்பு இல்லாவிட்டால் பெற்ற அறிவினால் ஏதேனும் பயன் உண்டோ? விளக்கம் :  அறிவு என்பது யாது என்பதற்கு அருமையான விளக்கம் தரப்பட்ட குறள். ஏராளமாக புத்தகங்கள் படிப்பவரை அறிவாளி என்போம். நிறைய பட்டங்கள் வாங்கி வைத்திருப்பவரை என்னே அறிவு ! அதனால்தான் இத்தனை  பட்டங்கள் வாங்கி வைத்திருக்கிறார் என்று வியந்து போவோம். ஆனால் இது எல்லாம் அறிவு இல்லைங்க. அறிவுக்கு இலக்கணம் நான் வகுத்திருக்கிறேன் கேளுங்கள் என்கிறார் வள்ளுவர். ஒருவன் படுகிற துன்பத்தைப் பார்த்து சும்மா இருக்காமல்  உடனே ஓடிச்சென்று உதவும் பண்பு இருக்க வேண்டும். பிறருக்கு வந்த துன்பத்தைத் தனக்கு வந்த துயரென கருதி அத...

மூன்று முகம்

    மூன்று முகம் "மூன்று பெண்களா " "ஏன்... பயமாக இருக்கா? " "பிறகு இப்படி சொன்னா பயப்படாம எப்படி இருக்க முடியும்? " " நீ  இப்படி பயப்படுவாய் என்று தெரிந்தால்  சொல்லியிருக்க மாட்டேன்."   "சரி பயப்பட மாட்டேன். சொல்லுங்க....அந்த மூன்று பெண்களும் கிட்ட வந்தாங்களா? " "வந்தாங்களாவா...எங்க கூடவே கொஞ்ச  தூரம் நடந்தாங்க..." "அப்புறம்...." "அப்புறம்....அப்புறம் அவர்கள் மூவரும் அரிசி பெட்டியை இடுப்பில் வைத்திருப்பதைப் பார்த்ததும் நாங்கதான் எங்க ஊர்காரங்க முன்னால் போறாங்களா என்று வலிய பேச்சு கொடுத்தோம்"  "அதற்கு அவங்க என்ன சொன்னாங்க....?" "முன்னால் உங்க ஊர் காரங்க போறாங்க...வேகமா போங்க...பிடிச்சிடலாம் என்னாங்க..." "புடிச்சீங்களா....." "புடிச்சமா...அதற்குள்ள பக்கத்துல வந்த மூவரையும் காணோமே". "அதெப்படி..?..காணோமா...? பயமாக இருக்கே...! மூவரும் மாயமாகிட்டாங்களா?" "நாங்களும் அப்படித்தான் நினைத்தோம் " "அப்புறம் அவங்க மறுபடியும் கண்ணுலேயே படலியா? " "கண...

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே...

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே... கடமையில் தவறக்கூடாது. உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது. இரண்டும் சமமாகப் பேணப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நமது கடமைகள் என்ன ? உரிமைகள் யாவை ?என்பதெல்லாம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். இந்தியா விடுதலை அடைந்த பின்னர்தான் கடமையைப் பற்றி பேசப்படுள்ளதா....இருக்காதே. நமது முன்னோர்கள் பேரறிவாளர்களாயிற்றே! அவர்கள் சொல்லாத கருத்துக்களா... அறியாத உண்மைகளா... அப்படியானால் அவர்களிடமும் கடமையைப் பற்றி சிறிது கேட்டு அறிந்து கொள்வதில் தப்பில்லையே.... வாருங்கள்.பொன்முடியார் என்ற புலவர் யார்யாருக்கு என்னென்ன கடமை உள்ளது என்று சொல்கிறார். அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம். ஒரு மகன் பிறந்ததில் இருந்து அவனை ஒரு வெற்றிவீரனாக பார்ப்பதுவரை யார் யாருக்கு என்னென்ன கடமை இருக்கிறது என்பதை  பொன்முடியார் என்ற இந்தப் பெண்பாற்புலவர்  புறநானூற்றுப் பாடலில் அழகாகப் பாடியிருப்பார். ஒரு பெண்ணுக்கு என்ன கடமை தெரியுமா ?  ஆண் மகவைப் பெற்றுத்தர வேண்டுமாம். ஆண் மகனைப் பெற்றுத் தந்துவிட்டேன் என்று பூரித்துப் போய் கணவனைப் பார்க்கிறாள் மனைவி. உன் கடமையை நீ சர...

வானோக்கி வாழும் உலகெல்லாம்...

  வானோக்கி வாழும் உலகெல்லாம்.... வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி "                                    குறள். :  542                                     வான் - மழை நோக்கி - எதிர்பார்த்து வாழும் - வாழ்ந்து கொண்டிருக்கும் உலகு - உலகத்தார் எல்லாம் - அனைவரும் மன்னவன் - வேந்தன் ,அரசன் கோல் - செங்கோல் நோக்கி - எதிர்பார்த்து, நம்பி வாழும் - வாழ்ந்து கொண்டிருக்கின்ற குடி - குடி மக்கள்                          உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி உயிர்  வாழ்கின்றன. அதுபோல குடிமக்கள் எல்லாம் மன்னனுடைய செங்கோல் வழுவா ஆட்சியை எதிர் நோக்கியே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். விளக்கம் :  நீரின்றி அமையாது இவ்வுலகம் என்று சொன்ன வள்ளுவர் மழை இல்லை என்றால் இப்புவியில் பசும்புல் தலை காண்பதும் அரிதாகிவிடும் என்றும் ச...

உரனசைஇ உள்ளம் துணையாக....

உரன்நசைஇ உள்ளம் துணையாக... உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ   இன்னும் உளேன் "                          குறள் : 1263 உரன் - வெல்லுதல் நசைஇ - விரும்பி உள்ளம் - ஊக்கம் துணையாக - உதவியாக சென்றார் - போனவர் வரல் - திரும்பி வரல் நசைஇ - ஆசை கொண்டு, விரும்பி இன்னும் - இதுவரை உளேன் - உயிரோடிருக்கிறேன் வெற்றியை விரும்பி ஊக்கத்தோடு  சென்ற  தலைவன் வருவதைக் காண விரும்பியே  நான் உயிரோடு இருந்து கொண்டிருக்கிறேன். விளக்கம் :  தலைவன் தலைவியிடமிருந்து  பிரிந்து செல்கின்றான். செல்லும்போது கண்டிப்பாக நான் வெற்றியோடு திரும்பி வருவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டுச் செல்கிறான். தலைவி  தலைவனைப் பிரிந்து இருக்க முடியாமல் தவிக்கிறாள். இப்போது தன் தோழியிடம் பிரிவுத் துயரைச் சொல்லிச் சொல்லி  புலம்புகிறாள். நான் உயிரை விட்டுவிடுவேன். ஆனால் எதற்காக உயிர் வாழ்கிறேன் தெரியுமா ?என்று தோழியிடம் கேட்கிறாள். "தெரியாது. நீ சொன்னால்தானே தெரியும்" என்கிறாள் தோழி. "என் தலைவன் வெற்றி வாகை சூடி வருவான். அதன...

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

  எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் உலகிலுள்ள உயிர்கள் யாவும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்கின்றன. ஒன்றின்மீது இன்னொன்றுக்கு எதிர்பார்ப்பு இருக்கும். மரம் செடிகொடிகள் எல்லாம் வானத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டால்... சில்லென்று பூத்து தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டுகின்றன. எதிர்பார்ப்பு நடைபெறாமல்  ஏமாற்றமாகிப்போனால்... அப்படியே கூம்பி வாடி வதங்கிப் போய்விடுகின்றன. எதிர்பார்ப்பு இல்லாமல் எதுவுமே நடைபெறுவதில்லை. பிள்ளைகளுக்குப் பெற்றோர்மீது எதிர்பார்ப்பு. பெற்றோருக்குப் பிள்ளைகள்மீது எதிர்பார்ப்பு. கணவனுக்கு மனைவிமீது எதிர்பார்ப்பு. மனைவிக்கு கணவன்மீது எதிர்பார்ப்பு. மாணவருக்கு ஆசிரியர்மீது எதிர்பார்ப்பு. ஆசிரியருக்கு மாணவர்மீது எதிர்பார்ப்பு. செடிகளுக்கு வான்மீது எதிர்பார்ப்பு. வானுக்கு செடிகளின்மீது எதிர்பார்ப்பு. தொழிலாளிக்கு முதலாளிமீது எதிர்பார்ப்பு. முதலாளிக்குத் தொழிலாளிமீது  எதிர்பார்ப்பு. இப்படி ஒரு எதிர்பார்ப்போடுதான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏழை விவசாயி ஒருவர் நாள்தோறும் கீழ்வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். " தாத்தா...கிழக்கு த...

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்ப்....

  கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்..... " கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் "                                குறள் :  643 கேட்டார் - சொல்லைக் கேட்டவர் பிணிக்கும் - ஈர்க்கும், கட்டி இழுக்கும் தகையவாய் - இயல்பினை உடையனவாய் கேளாரும் - அச்சொல்லைக் கேட்காதவரும் வேட்ப - விரும்பும் வண்ணம் மொழிவதாம் - சொல்லப்படுவதாம் சொல் - சொல்வன்மை சொல்லும்போது அதனைக் கேட்டவரைத் தன்வயப்படுத்தும் தன்மை கொண்டதாய்க் கேட்காதவரையும் கேட்க விரும்பும் தன்மையை உருவாக்குவதாய்  சொல்லப்படுவதே சொல்வன்மையாகும். விளக்கம் :  ஒருவர் நம்மிடம் கேள்வி கேட்கும்போதோ அல்லது ஒரு பொருளைப்பற்றி அறிந்து கொள்ளும் முனைப்புடனோ பேசும்போது நாம்  அவருக்குப் பதிலாகத் தரும் சொல் அல்லது உரை அவரை நம் பக்கமாக ஈர்க்கும் வண்ணம் இருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாது கேளாதவரையும்  கேட்கத் தூண்டுவதாக இருப்பதே சொல்வன்மை ஆகும். அதாவது நாம் பேசும் பேச்சு கேட்பவரைக் கட்டி இழுக்கும் தன்மை கொண்டு இருத்தல் வேண்டும். அதுபோல ...

நல்ல நண்பர் யார்?

      நல்ல நண்பர் யார் ? நட்புக்கு இலக்கணம் இவர்கள் தாங்க.  இருந்தால் இவர்களைப்போல இருக்கணும் என்று வரிந்துகட்டிக் கொண்டு பரிந்துரை வழங்கும் அளவுக்கு உயர்வான நட்பு கொண்டோர் மிகச் சிலரே இருப்பர். அவர்களுள் கர்ணன்- துரியோதனன் நட்பு அனைவராலும் வியந்து பார்க்கப்பட்ட நட்பு. பாண்டவரோடு நடந்த  போரின்போது துரியோதனன் செய்வது தவறு என்று வில்லினை உடைத்து தூக்கி வீசிவிட்டு பலர் விலகிச்  சென்றுவிட்டனர். ஆனால் கடைசிவரை துரியோதனனுக்காக போர்க்களத்தில் நின்று போரிட்டு, தன் உயிரையும் தியாகம் செய்தவன் கர்ணன். அதனால்தான் இவர்களது நட்பு இன்றளவும் பேசப்படுகிறது. நட்பு துன்ப காலத்தில் கூடவே இருந்து தோள் கொடுக்கும் .ஏன் உயிரையும் கொடுக்கும் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு. நட்பைப் பற்றி பேசாதவர் எவருமிலர். நாலு வயது ஆகும்போதே நண்பர்கள் வைத்துக் கொள்ளும் காலம் இது. பார்த்ததுமே நட்பு. ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது நட்பு. உயர்நிலைப் பள்ளி நட்பு. மேல்நிலைப் பள்ளி நட்பு. கல்லூரி நட்பு. அலுவலக நட்பு என்று நட்பு காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும்...

இல்லாள் அகத்திருக்க இல்லாதது....

    இல்லாள் அகத்திருக்க இல்லாதது.... அனைவருக்கும் சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக  இருக்கும்.வீடு இல்லாதவர்களுக்கு வீடு வேண்டும் என்று ஆசை. வீடு கிடைத்துவிட்டால் வீட்டைச் சுற்றி தென்னைமரங்கள் இருந்திடல் வேண்டும் என்று ஆசை. தென்னை மரங்கள் இருந்துவிட்டால் போதுமா?  அதில் குலைக்குலையாக இளநீர் காய்த்துத் தொங்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். அதுவும் நடந்துவிட்டது. இப்போது முற்றத்தில் முத்துச் சுடரொளி பரப்பி நிலவு  வந்து எட்டிப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்ற ஆசை. இரவினில் நிலவு வந்து போயிற்று. இனி அதிகாலையில் குயில்கள் கூடி வந்து கத்திச் செல்ல வேண்டும் என்று ஆசை. குயில்கள் கத்தினால் மட்டும் போதுமா? கூடவே பூந்தென்றல் காற்று வர வேண்டாமா? தென்றல் வந்து காதோடு கவிபாடிச் செல்ல  வேண்டும் என்று ஆசை. இத்தனை ரம்மியமான சூழலில் அழகானவீடு இருந்தால் மட்டும் போதுமா?  இல்லத்தில் இருந்து ஆட்சி செய்ய ஒரு பத்தினிப் பெண் வேண்டாமா? அவள் இல்லாமலா?  இல்லம் என்று இருந்தால் அதில் இல்லாள் இருந்தால்தானே மகிழ்ச்சி. இப்படி ஒரு ஆசை யாருக்கு வந்திருக்கும் என்று நினை...

வாடகை வீடு

Image
                      வாடகை வீடு ராதா ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துப் பார்த்தாள். ஏற்பதா....? மறுப்பதா..? ஏற்றுக்கொண்டால்...அரைவயிறும் கால்வயிறுமென அன்றாடம் வயிற்றோடு நடத்தும் போராட்டத்துக்கு ஒரு இடைக்காலத் தீர்வு கிடைக்கும். ஆனால்.. அதன்பின்னர் சமுதாயத்தில் என்நிலை.... எனக்கென்று தனி முத்திரை குத்தி தனியாக தூக்கி வைத்துவிடுவர். ஒரு மாதிரியாக பார்ப்பர். அதனை என்னால் சமாளிக்க முடியுமா? வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இந்த நேரத்தில் யாராவது ஒரு வழிகாட்டிவிட மாட்டார்களா? என்ற ஏக்கத்தோடு கண்கள் எதிர்பார்த்து காத்திருந்தபோது எதேச்சையாக காப்பகத்தில் சமையல் வேலை பார்க்கும்  மேரி அக்காவைச் சந்திக்க நேரிட்டது. உன் குடும்பச் சூழலுக்கு என்னால் உதவ முடிந்த ஒரே வழி இதுதான் என்று ஒரு மாதத்திற்கு முன்னர்தான் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் ஆயா வேலை வாங்கிக் கொடுத்தார்கள். காப்பகத்தில் ஆயா வேலைக்குச் சேர்ந்த பின்னர்தான் காப்பகத்துப் பிள்ளைகளுக்கு மருத்துவம் பார்க்க வரும் நர்ஸ் அக்காவோடும் பழக்கம் ஏற்பட்டது. ந...