Posts

Showing posts from January, 2022

ஆசிரியர் நாள் வாழ்த்து

Image
ஆசிரியர் நாள் வாழ்த்து அகரம் அறிமுகம் செய்து  சிகரம் தொடும்வரை  நகரா ஏணியாயிருந்து  பகரும்மொழியை மடமை  தகரும் வரை ஊட்டி  பழுதிலா வாழ்க்கைக்குப்  வழுவிலா நெறியமைத்து  பத்திரமாய்க் கரம் பிடித்து  சிலையாய்ச் செதுக்கி  சிற்பமாய் அணியம் செய்து  செந்தமிழைச் செப்பமுறச்   செப்பும்வரை உதடசைத்து  ஓயாப் பயிற்சி தந்து   தரிசு நிலமாம் என்னைப்  பண்படுத்திப் பயனுறச் செய்ய  விழுமியங்களைப் பயிற்றுவித்து  விழுநீர்ப் பாய்ச்சி  வீழ்விலாக் கல்வியூட்டி  வீறு பெறச் செய்த  ஆசிரியர்களின் பாதம் தொட்டு  வாழ்த்தி வணங்குகிறேன்! ஆசிரிய பெருமக்களுக்கு  ஆசிரியர் நாள் நல்வாழ்த்துகள்!          

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்....

      ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்....! ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று                குறள் :    967 ஒட்டார்-   பகைவர்,வெறுப்பவர், அவமதிப்பவர் பின் -பின்னே சென்று-போய் ஒருவன் -ஒருவன் வாழ்க்கை -வாழ்வதைவிட அந்நிலையே -இருக்கும் நிலையிலேயே கெட்டான் - கெட்டுப் போனான் எனப்படுதல் - என்று சொல்லப்படுதல் நன்று -நன்மை தருவதாகும் தன்னோடு ஒட்டாது விலகிச் செல்லும் மனிதர்கள் பின்னால் சென்று வாழ்வதைவிட மானத்தோடு தற்போதுஇருக்கும் நிலையிலேயே கெட்டொழிந்தான் என்று சொல்லப்படுமானால் அதுவே அவனுக்கு நன்மை தருவதாகும். விளக்கம் :  எவ்வளவுதான் நாம் நெருக்கமான உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று  நினைத்தாலும் சிலர் தாமரை இலை நீர் போல ஒட்டாமல் விலகியே இருப்பர். அப்படி ஒட்டாதவர்களிடம்  நாமாக வலியபோய் ஒட்ட நினைப்பது நமது தன்மானத்திற்கு இழுக்காகும். நம்மில் இருந்து விலகி இருக்க நினைப்பவரை அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் நிலையில் இருந்து ஒருபோதும் கீழே இறங்கி...

திருமண வாழ்த்து

திருமண வாழ்த்து " அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை  பண்பும் பயனும் அது" நற்றவம்செய் நல்லறத்தால் தவமணி லலிதா இணையர் மடிஅணி செய் மங்கை ஸ்டெபிதா என்னும் தேவதையே! இட்ட புகழூர் ஐயா செல்வின் ஜெயந்தி இணையர் குலம் வளர் கோமகன் ஆன்ரூசன் சாமுவேல் என்னும் ஆணழகே! நன்றென்று இறைவன் நினைத்தார் இணையானீர் துணையானீர் என்றென்றும் சொந்தங்கள் மகிழ சுகவாழ்வு காண்பீர் இறையருளாலே!  கனவினில் மிதந்து காதலில் விழுந்து இதயத்தில் நுழைந்து பேச்சினைத் துறந்து  புன்னகை புரிந்து புதுமணத் தம்பதியராய் கவின்மிகு காட்சி கொண்டீர் இன்று! இல்லறமாம் நல்லறம் செய்திட எம்வீட்டு மங்கை ஸ்டெபிதாவை ஆன்ரூசன் இதயத்தில் குடியேற்றி குலவிளக்காக்காகி பெருமை கொண்டோம்! கண்ணின் மணியாய்  நிழலாய்  சிந்தை ஒன்றாய் சிறந்தாய் என்னும் பெரும்பேறு கொண்டு பெற்றோர்பேணி பேர்வாங்கி வாழ்வீர் இணைந்து! காலமெல்லாம் காதல் செய்து ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாமல் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர் இல்லற இன்பங்களை நுகர்ந்து!                    - வாழ...

தம்பொருள் என்பதம் மக்கள்....

தம்பொருள் என்பதம் மக்கள்..... தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் "                             குறள் 63 தம் - தமது பொருள் - உடைமை, செல்வம் என்ப - என்று சொல்லுவர்   தம்  -தமது மக்கள் -  புதல்வர் அவர் - அவர்கள் பொருள் - சொத்து தம்தம் - அவரவர் வினையான் - செயலால் வரும் - வந்து சேரும் தம் மக்களே தமது உடைமை என்று கூறுவர். அவர்களுக்கான உடைமை அவரவர் செய்யும் செயலாலேயே வந்து சேரும். விளக்கம் :  பிள்ளைகள் எனக்கு அருமையான சொத்து. வேறு என்ன சொத்து வேண்டும் என்று கூறுவர். பிள்ளைகள் நமது சொத்துதான். யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் நமக்கான உண்மையான சொத்து யாதெனின் நாம் செய்யும் வினையால் கிடப்பதன்றி வேறு எதுவுமில்லை. நல்வினையோ தீவினையோ அவரவர்களின் வினைப்படிதான் பலன்கிடைக்கும். ஆதலால் செய்யும் வினைதான் ஒருவனின் சொத்து. பிள்ளையாக இருந்தாலும் பெற்றோராக இருந்தாலும் வினைப்பயன் தான் சொத்து. பிள்ளைகள் நல்வினை செய்தால் நற்பயன் வந்தடையும். அது பெற்றோருக்கும் கிடைக்கும். பெற்றோரின் நல்வினையால்தான் ...

பிறந்தநாள் வாழ்த்து

Image
    பிறந்தநாள்  வாழ்த்து  சிந்தும் சிரிப்பலையே முந்தும் மொழியலையே நடமாடும் பல்கலையே எழிலாடும் புன்னகையே நற்றிணையே !நல்லறிவே! முத்தமிழே !முழுநிலவே! கவித்தேனே!கற்கண்டே! பேசும் சொற்களஞ்சியமே ! என்னவென் றழைப்பேன்? ஏதுசொல்லி அறிமுகம் செய்வேன்? மும்பை மாநகராட்சியின் அறிவுப் பெட்டகமே! நின்பால் கற்றதும் பெற்றதும்  ஏராளம் ஏராளமே!  பேரறிவாட்டிக்கு வாழ்த்துரைக்கும் பெரும்பேறு வாய்த்தது என்றன் நற்பேறென்பேன்  நீலமணிமிடற்று ஒருவன் போல  மன்னுக பெரும நீயென்ற வாழ்த்துனக்கு அனுப்பி வைத்தேன்  வாழ்க பல்லாண்டு ....பல்லாண்டு...  பல்லாயிரம் ஆண்டு..  ராஜேஸ்வரியும் சிரிப்புமாய் இணைந்து!

கொல்லான் புலாலை மறுத்தானை....

கொல்லான் புலாலை மறுத்தானை... " கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்"                குறள் -. 260 கொல்லான் - பிற உயிர்களைக் கொல்லாதவன் புலால் -இறைச்சி மறுத்தானை - மறுப்பவனை கைகூப்பி -கைகளைக் கூப்பி எல்லா -அனைத்து உயிரும் - உயிர்களும் தொழும் -  வணங்கும் உயிர்க்கொலை செய்து அதனால் கிடைக்கும் இறைச்சியை உண்ண மறுப்பவனை  எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும். விளக்கம் : உயிர்களைக் கொன்று கிடைக்கும் இறைச்சியை வேண்டாம் என்று ஒருவன் மறுத்துவிட்டால ஓர் உயிரைக் கொலை செய்த பாவம் அவனை வந்து சேராது. இறைச்சி உண்ண மறுத்துவிட்டால்... உயிர்க்கொலைகள் நடைபெறாது.  உயிர்கள் பிழைத்துக் கொள்ளும். இவன் கொல்லாமல் இருந்ததால்தானே நான் உயிர் வாழ்கிறேன் என்ற நன்றி உணர்வு உயிர்களுக்கு ஏற்படும். அந்த நன்றியும் மகிழ்வும்  நம்மைப் பார்த்து கைகூப்பி வாழ்த்த வைக்கும். அருமையான வாழ்த்து கிடைக்க வழி சொல்லியிருக்கிறார் வள்ளுவர். எல்லா உயிர்களும்  உங்களை வாழ்த்த வேண்டுமா? அப்படியானால் இறைச்சி உணவை மறுத்துவிடுங்கள் என்கிறார் வள்ளுவர்.   Engli...

பறவை

Image
பறவை நேர்கோட்டில்‌ பயணம் படித்துத் தந்தது பறவை காடெங்கும் விதைத்துப் போட்டதை அறுவடை செய்யும் பங்காளி எல்லை பிரச்சினை தொல்லையில்லா உலகம் சுற்றும் வாலிபன் மூடி மறைக்க முகக்கவசம் தேவையில்லா முதன்மை  மனிதன் ஊரடங்கிலும் உலகைச் சுற்றிவர கோல்டன் விசா வைத்திருக்கும் பெரும்புள்ளி திசைகாட்டி இல்லாமல் திசைமாறாது போய்ச்சேரும் வானூர்தி உந்து சக்தி ஏற்றாமல் உயர பறக்கும்   வானூர்தி                இரை உயிர் கொடுத்தவன் கட்டி வைத்தான் வனமெங்கும் இலவச உணவகம்!        பயணம் நேர் கோட்டில் பயணம் நேர்த்தியான பாதையில் பறந்தன பறவைகள்!      வயிறு உணவகங்கள் அடைப்பு அடங்க மறுத்து ஒப்பாரி போட்டது  வயிறு!           பாதை சுடுகாட்டுக்குப் பாதை கேட்டுப் போராட்டம் பாதை பார்க்காமல் பறந்தது  உயிர்        

உழவினார் கைம்மடங்கின் இல்லை...

Image
உழவினார் கைம்மடங்கின் இல்லை.... உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை"                    குறள் :      1036 உழவினார் - உழவுத் தொழில் செய்பவர் கை - கையானது மடங்கின் - வேலை செய்யாதிருந்தால் இல்லை - இல்லாமல் போய்விடும் விழைவதூஉம் -விரும்புவதை எல்லாம் விட்டேம் - விட்டு விட்டேன் என்பார்க்கும் - என்று சொல்கின்ற துறந்தோர்க்கும் நிலை - நிலைத்து நிற்றல் உழவுத் தொழில் செய்பவர் கை மடக்கி வேலை செய்யாது இருந்துவிட்டால் அனைவரும் விரும்பி உண்ணும்  உணவைத் துறந்துவிட்டோம் என்று சொல்லும் துறவிகளும்கூட தங்கள் அறச்செயல்களில் தொடர்ந்து  நிலைபெற்றிருக்க முடியாது. விளக்கம் :  உழவர் நான் உழவுத் தொழில் செய்ய மாட்டேன் என்று  கைகளை மடக்கி சும்மா இருந்துவிட்டால்... யார் வயலில் இறங்கி வேலை செய்வது? பயிர்த் தொழில் முற்றிலும்  முடங்கிப் போகுமே. பயிரிட ஆளில்லாவிட்டால்... எந்தப் பயிரும் விளையாது. ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் போய்விடும். உணவு இல்லாமல் யாரும் உயிர் வாழ்ந்துவிட முடியாது. உய...

வேண்டும்

Image
வேண்டும்.....வேண்டும் அனைவர் மனதையும் ஆட்டிப் படைக்கும்  ஒற்றைச் சொல் ஒன்று  உண்டு என்றால் அது வேண்டும் என்பதுதான். இந்த வேண்டும் என்ற சொல்லை வேண்டாம் என்று நகர்த்தி வைத்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஏதாவது ஒரு சொல்லைப்  போட்டுப் பாருங்கள். சரியாக அமைந்துவிடுமா? நான் ஆசை அற்றவன் அதனால் வேண்டும் என்ற சொல்லுக்கே இடமில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆசை அற்ற புத்தரும் ஏதோ ஒன்று வேண்டும் என்றுதானே ஆடம்பர வாழ்க்கையை விட்டு வெளியேறினார். இந்த வேண்டும் என்ற சொல் மட்டும் நம் கூடவே வரவில்லை என்றால் நாம் என்றோ  வேண்டாதவர்கள் ஆகியிருப்போம். அதிகாலை எழுந்ததும் எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் சாமி என்ற வேண்டுதலோடுதான் நம் நாளே தொடங்குகிறது. அடுத்தது காபி வேண்டும். கத்தரிக்காய் வேண்டும். என்று வேண்டும் பட்டியல் நாள் முழுவதும் நம்மோடு பயணப்பட்டுக்கொண்டே இருக்கும். எதற்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை என்கிறீர்களா? எனக்கு நீங்கள் வேண்டுங்க... அதனால் நீங்கள் வேண்டும்... வேண்டும் என்று சொல்லும்வரை நான் உங்களை விட்டுவிடப் போவதில்லை. இது என்னப்பா புதுசு புதுசா பொட்டலம் கட்டி...

பொங்கலோ பொங்கல்

Image
பொங்கலோ பொங்கல் தைமகள் கடைக்கண் திறப்பால்  நிலமகள் தந்த  செழிப்பால் உழவன் செய்த உழைப்பால் கழனி எல்லாம் பயிர்வனப்பால் நிறைகதிர் கண்ட களிப்பால் பிறைமதியார் உள்ளம் பூரிப்பால் சுனையாகும் இன்பத் திருப்பால் மனையில் ஓடும் மகிழ்ச்சிப்பால் சொல்லரும் பொருட் குவிப்பால் நல்லறம் நடக்கும் பேரன்பால் பழையன மறவா பண்பால்  பண்பாட்டைத் துறக்காச் சிறப்பால் தமிழ்ப்பால் கொண்ட விருப்பால் அறத்துப்பால் மீதுள்ள ஈர்ப்பால் பொருட்பால் கிடைத்த மலைப்பால் இன்பத்துப்பால் நுகர்வீர் உள்ளன்பால் ஆதவன் சிரிப்பால் ஆவின்பால் பொங்கல் காணும்  உவப்பால் இணைப்பால் கரம் குவிப்பால் இனிப்பால்  பொங்கட்டும் மகிழ்ச்சிப்பால்! அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

பொங்கல் வாழ்த்து

Image
  தை மகள் வந்தாள் எழுந்தது கதிரவன் புலர்ந்தது பொழுது மலர்ந்தன கண்கள் தொழுதன கைகள் புதுப்பானை வந்தது புதுப்பால் பெய்து புத்தரிசி இட்டு பொங்கலிட புத்தாடை அணிந்த பூவையும் வந்துவிட்டாள் குலவையிட்டு வரவேற்க  குடும்பமாய் யாம் வந்தோம் தை மகளே வா ! மையிருட்டு விலக்கி பைய நின்கண் திறந்து வையம் உவப்ப  வழி செய்திட தை மகளே வா! தரணி செழித்திட வளங்களை அள்ளித் தா!

போகி பிறந்த கதை

Image
போகிப் பண்டிகை பிறந்த கதை கதை இல்லாமல் பண்டிகைகள் இல்லை. துரோகிக்குக் கதை இருக்கும்போது போகிக்குக் கதை இல்லாமல் இருக்குமா என்ன? போகிக்கும் கதை ஒன்று இருக்கிறது. ஒரு கடினமான சூழலுக்குப் பிறகு கிடைக்கும் நன்மையைக் கொண்டாடி மகிழ்வது தான் பண்டிகைகள். அந்தவகையில் போகியும் கடினமான காலத்தைக் கடந்து வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியை அனைவருக்கும் தெரிவிக்கும் முகமாகவே கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். பழையவை ஒழிந்தன. தொல்லைகள் தொலைந்தன. கர்வம் ஒழிந்தது. களிப்பு வந்தது. புதியவை புகுந்தன. புத்தொளி பிறந்தது என்ற ஒரு புதுமையான எண்ணத்தோடு போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து பழைய குப்பைகளை எல்லாம் முற்றிலுமாக அகற்றி தூய்மையோடு வருங்காலத்தை எதிர் நோக்கி கொண்டாடப்படும் பண்டிகை  போகிப் பண்டிகை. போகிப் பண்டிகை பற்றிய புராணக் கதை ஒன்று உள்ளது. மழை கடவுள் இந்திரன். நீரின்றமையாது உலகம். நீர் என்றால் உயிரல்லவா? நீராதாரம் மழை. இந்திரனுக்கு எப்போதுமே மனதில் ஒரு கர்வம் உண்டு. என்னால்தான் மாதம் மும்மாரி பொழிந்து நாட்டில் நல்ல விளைச்சல் ஏற்படுகிறது என்று ஆணவமாக இருப்பான்...

திருக்குறள் புகழுரைகள்

திருக்குறள் புகழுரைகள் " வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"                              -    பாரதியார்                            " வள்ளுவர் செய் திருக்குறளை  மறுவறநன் ருணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி "                   -    மனோன்மணியம் சுந்தரனார்                    " வாழ்வுக்கு உரிய அன்புநெறியைக் கூறும் உயர்ந்த நூல்.உயர்ந்த ஞானத்தைப் புகட்டும் செம்மொழிகளின் தொகுப்பு. இதுபோல் உலக இலக்கியத்தில் வேறு எங்கும் கண்டதில்லை "            -  ஆல்பர்ட் சுவைட்சர் " உலகில் உள்ள பொருள்கள் எல்லாம் மாறுகின்றன.ஒருநாள் மறைந்து போய்விடுகின்றன.ஆனால் திருவள்ளுவருடைய புகழ்மட்டும் மங்கவே இல்லை. பெருகிக்கொண்டே போகிறது."              ...

திரும்பிப் பார்க்கிறேன்

      திரும்பிப் பார்க்கிறேன் கடந்து வந்த நாட்களைத் திரும்பிப் பார்க்கிறேன். பிரமிப்பாகத் தெரிகிறது.  எத்தனை மேடு பள்ளங்கள். அத்தனையையும் தாண்டி ஒரு நதிபோல இன்றுவரை ஓட வேண்டும் என்று ஆசை. இடையிடையே குளமாக தேங்கி நின்றுவிடுகிறேன். குளமாகிப்போனால்  மறுபடி வாய்க்காலில் தானே ஓட முடியும். அந்த வாய்க்கால் நீரோட்டமாகத்தான் என்னுடைய நடை இன்றுவரை சென்று கொண்டிருக்கிறது. நம்மோடு நடைபயின்ற எத்தனையோ  பேருக்கு இந்த இடத்திலிருந்து  திரும்பிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விட்டது. முதலாவது நம்மை இதுவரைக்கும் கொண்டுவந்த இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நாம் இப்படி ஒருநாளை கொண்டாடுவோம் என்று எதிர்பார்த்தோமா? எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத வரங்களை வழங்குபவன்தான்  இறைவன்!  கடந்த ஆண்டில் நாம் சொல்லிக்   கொள்ளும்படி ஏதாவது செய்தோமா?   இந்த 2022 ஜனவரி ஒன்று என்ற  ஒரு இடத்தில் வந்து நிற்பதற்குமுன்  வீழ்ந்து எழுந்து , வளைந்து நெளிந்து, முட்டி மோதி, தட்டுத்தடுமாறி அப்பப்பா எத்தனை தடைகள்! எத்துணைத் தடுமாற்றங்கள்!  மனம் தடு...

அன்பு உனக்கிராவிட்டால்....

அன்பு உனக்கிராவிட்டால்.... எதற்கெடுத்தாலும் நான் அன்பானவன்  நான் அன்பானவள் என்று சொல்கிறவர்களைப் பார்த்து ...நிஜமாகவா ? என்ற ஒரு சொல்லை மட்டும் கேட்டுப் பாருங்கள். அப்போது  அவர்கள் முகம் ஒருமாதிரியாக  மாறும் பாருங்க ...அதன் பிறகு ஒருபோதும் அவனோ ..அவளோ அந்தச் சொல்லை உங்களிடம் சொல்லமாட்டார்கள். ஏய்....சந்தேகப்பட்டுட்டாம்பா. இவனிடம் கொஞ்சம் உஷாராக இருக்கணும் என்று ஒதுங்கிப்  போய்விடுவார்கள். என்மீது நம்பிக்கை இல்லை என்றால் ஒருமுறை உங்கள் நண்பனிடமோ நண்பியிடமோ கேட்டுப் பார்த்து நான் சொல்வது உண்மையா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 99 விழுக்காடு இதுதாங்க உண்மை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ ஒரு விழுக்காடு விதிவிலக்கு மனிதர்கள் இருப்பார்கள். அவர்களை விட்டுவிடுவோம். அன்பு...அன்பு..அன்பு என்று தம்பட்டம் அடிப்பவர்கள் பக்கம் திரும்புவோம். அன்பு வாயால் பேசுவதோடு நில்லாது. செயலில் அதை உறுதி செய்யும். செயலில் ஒன்றுமே இல்லையா?  அப்படிப்பட்டவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். அப்படியானால் ஒருவர் அன்பானவர்  என்பதை எப்படித்தான்  கண்டு கொள்வது?  அன்புக...

ஹைக்கூ கவிதை என்றால் என்ன?

ஹைக்கூ கவிதை என்றால் என்ன? ஹைக்கூ கவிதை என்றதும் அங்கங்கே வார இதழ்களிலும் நாளிதழ்களிலும் மாத இதழ்களிலும் படித்த மூன்று வரி கவிதைகள்தான் கண்முன் வந்து நிற்கும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல  என்ற பவணந்தி முனிவரின் கருத்தை ஏற்று புதியனவற்றை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம். இந்த கணினி யுகத்தில் உட்கார்ந்து சாப்பிடவே நேரமில்லை. கையில்  அங்கங்கே கிடைப்பதை வாங்கி அங்கேயே நின்று சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவியும் கழுவாமலும் பேப்பரில் துடைத்துப் போட்டுவிட்டு  அப்படியே ஓடிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது படிப்பதற்கு எங்கே நேரம் இருக்கிறது? என்று கேட்போர் தான் அதிகம். இப்படிப்பட்ட சூழலில் இராமாயணம் ,மகாபாரதம்,  சிலப்பதிகாரம் , பாஞ்சாலி சபதம் போன்ற காப்பியங்களைப் படிக்க நேரம் இருக்கப்போகிறதா என்ன? அறுசீர் கழிநெடிலடி எழுசீர் கழிநெடிலடி எண்சீர் கழிநெடிலடி என்று மிகவும் நீளமான கவிதை வரிகளை வாசிக்கும் அளவுக்கு யாருக்கும் பொறுமை இல்லை. போகிற  போக்கில் ஏதோ ஒன்றிரண்டு வரி கவிதைகளை வாசிக்கும் பழக்கம்தான் பெரும்பாலோரிடம் உள்ளது. அதனால்தான் என்னவோ  இரண்டு வரி மூ...

சிறப்புஈனும் செல்வமும் ஈனும்....

சிறப்புஈனும் செல்வமும் ஈனும்... சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு"                                குறள்.  31 சிறப்பு - நற்பேறு ஈனும் - கொடுக்கும் செல்வமும் - வளத்தினையும் ஈனும் - கொடுக்கும் அறத்தின் - அறத்தை விட ஊங்கு  - ஆக்கம், நன்மை ஆக்கம் -மேன்மை எவனோ - எதுவுமில்லை உயிர்க்கு - மக்களுக்கு   சிறப்பையும் செல்வத்தையும் கொடுப்பதால் ஒருவனுடைய உயிர்க்கு அறத்தை விட நன்மை தருவது வேறு எதுவும் இருக்க முடியாது. விளக்கம் :  நற்பேறு அடைய வேண்டும். நல்ல செல்வச் செழிப்போடு வாழ வேண்டும். இவை இரண்டும்தான் அனைவரின் குறிக்கோளாக இருக்கும். அதற்காகத் தான் இந்த ஓட்டமும்  உழைப்பும் எல்லாவிதமான தேடல்களும். நாம் எவ்வளவுதான் வருந்தி உழைத்தாலும் இவை யாவும் நமக்குக் கிடைத்துவிடப் போகிறதா? உறுதியாகச் சொல்ல முடியாதல்லவா?  செல்வம்  பெருக வேண்டுமா? பேரும் புகழும் அடைய வேண்டுமா? அறவழியில் உங்கள் தேடல் இருக்கட்டும். முயன்று பாருங்கள். கண்டிப்பாகக் கிடைத்தே தீரும். அறத்தைவிட ந...

அதே கண்கள்

அதே  கண்கள் அதே கண்கள். கடந்த ஒரு வார காலமாக என் தூக்கத்தைக் கெடுத்த அதே கண்கள். இதைத்தானே கடந்த ஒரு வாரகாலமாக நான் தேடிக் கொண்டிருந்தேன். இவ்வளவு சீக்கிரமாக பார்க்க நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை. பார்த்த அந்தக் கணத்தில் தடுமாறிப் போனேன்.தலைகுப்புற  விழுந்தது போல் இருந்தது.  முன்னும் பின்னுமாக  கால்கள்  பின்ன ஆரம்பித்தன. ஏன் இந்தத் தடுமாற்றம்? அப்படி அந்தக் கண்கள் என்னதான்  பேசியன? விடை தெரியாமல் மறுபடியும் என் கண்கள் அந்தக் கண்களைத் தேடின. ஒரு ஐந்து வினாடிதான். அதற்குள் அந்தக் கண்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று என்னை அதற்கு மேல் போகவிடாமல் கட்டிப் போட்டுவிட்டன. கண நேரக் காட்சி வந்து வந்து  மறைந்து போனது.  மறுபடியும் அந்தக் கண்களைக் காண மாட்டோமா ?என்ற ஏக்கம். துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தேன். நேரில் பார்க்க வேண்டும்.. பேச வேண்டும் .... மனம் தவித்தாலும் என்னால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. யாரும் பார்த்துவிட்டால்... அதற்குமேல் வேறு வினையை வேண்டாம். அங்கேயும் இங்கேயும் பார்த்தேன். நல்ல வேளை யாரும்  பார்க்கமில்லை.. உடம்பெல்லாம் வியர்த...