Posts

Showing posts with the label பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர் -வெற்றி வேற்கை

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்  "பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர் சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்" அதிவீரராம பாண்டியன் என்ற மன்னன் பாடிய வெற்றிவேற்கையிலிருந்து எடுக்கப்பட்டவைதான் இந்தப் பாடல் வரிகள். நான் பெரியவனா  நீ பெரியவனா? என்ற போட்டியில் எழுவதுதான் பூசலும் பொறாமையும் போரும். ஒருவருடைய வளர்ச்சியை இன்னொருவரால் ஏற்றுக்கொள்ள  முடியாதபோது போர்மேகங்கள் சூழ்வதுண்டு. உன்னைப் பற்றி நீ முடிவு செய்யக்கூடாது. உன் செயல்களை வைத்து நீ எப்பேர்ப்பட்டவன் என்பதை உலகம் முடிவு செய்து கொள்ளும். நமது வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்? பிறருக்குப் பயன் தருவதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த வளர்ச்சி பெரிய வளர்ச்சியாகக் கருதப்படமாட்டாது. நாம் பெரியவரா? சிறியவரா ?என்பதை நாம் செய்யும் செயல்கள் தான்  முடிவு செய்யும்.உருவம் அல்ல.   இதனை சொல்வதற்கு முன்னால் அதிவீரராம பாண்டியன்  அருமையான ஒரு காட்சியை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி எது பெரியது என்பதை நீங்களே முடிவு செய்து விடுங்கள் என்று தேர்வை நம் கையிலே விட்டுவிடுகிறார். அந்தக் காட்சி என்ன என்று கேட்கிறீர்களா? இத...