Posts

Showing posts with the label தோழனோடும் ஏழைமை பேசேல்

தோழனோடும் ஏழைமை பேசேல்

  தோழனோடும் ஏழைமை பேசேல் ஔவையின் அமுதமொழிகளுள் இதுவும் ஒன்று. கொன்றை வேந்தனில் ஔவை  கூறியுள்ள வரிகள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத வாழ்வியல் உண்மைகளைச் சொல்லித் தரும். ஔவை கூறும் ஒவ்வொரு சொல்லுமே ஒவ்வொரு உண்மையை எடுத்து வைக்கும். " தோழனோடும் ஏழைமை பேசேல்" எளிதில் பொருள் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு சொற்றொடர். நண்பனோடு நமது ஏழ்மை நிலையைப் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது .இதுதான் இதன் பொருள் என்ற சாதாரணமான புரிந்துணர்வோடு நாம் கடந்து போய்விட முடியாது. ஔவை தோழனிடம் ஏழைமை பேசேல் என்று எழுதவில்லை. தோழனோடும் என்ற ஒற்றைச்சொல்லின் மூலம் மற்றும் சிலரை அதில் தொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். தோழனோடு இன்னும் சிலரா.... வியப்பாக இருக்கிறதா! தோழனிடமே நமது வறுமையைப் பற்றிப் பேசக் கூடாதாம்... அப்படியானால் மெதுவாகஇன்னும் எத்தனை பேர் இருப்பார்கள்.கணக்குப் போட்டுப் பாருங்கள். தோழனோடு ஏழ்மை பற்றிப் பேசக் கூடாது. உண்மை. நமது ஏழ்மையைத் தெரிந்து கொண்டால்  நண்பன் நம்மை விட்டு விலக நேரிடலாம். நண்பனுக்கு நம்மீது இருக்கும் மதிப்புக் குறையலாம். தனது ஏழ்மையால் நம்மிடம் ஏதாவது எதிர்பார்ப்பானோ என்று தப்புக் கணக...