கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே கண்ணான கண்ணே கண்ணில் வைத்து கொஞ்சிட வைத்தாய் கள்ளம் தவிர்த்து மெல்லச் சிரித்தாய்- பெண்ணே பேதை என்றழைக்க வைத்து பெருமிதம் தந்தாய்! வளர்ந்தாய் கால் தறித்திட மறுத்தாய் வளர் பருவ குறும்புகள் செய்தாய் விரல்பிடித்து வீதிக்கு அழைத்தாய்- பெண்ணே பெதும்பையாய்ப் பெருமிதம் செய்தாய்! உணர்ந்ததை உணர்ந்தபடி உரைத்திட நினைத்தாய் உன்னில் என்னைக் கட்டியே வைத்தாய் உயர் உயரப் பறந்திட விழைத்தாய் - பெண்ணே மடந்தையாய் எம் மனதினில் நிறைந்தாய் மாசிமாத கொண்டலாய் வலம் வந்தாய் மாலை நேரத் தென்றலாய் இதம் தந்தாய் மயங்கிட வைத்து மனமதைத் துவைத்தாய்- பெண்ணே மங்கையாகி மலர்ந்து மணம் தந்தாய் இல்லறம் புகுந்தாய் நல்லறம் வகுத்தாய் இமையாய் இருந்து எம்மைக் காத்தாய் எம்பால் அன்பால் உன்பால் ஈர்த்தாய் - பெண்ணே அரிவையாகி அளவிலா ஆனந்தம் தந்தாய் உலக விழுமியம் உரைத்திட வந்தாய் உன்னில் எம்மை உணர வைத்தாய்- உலகொடு நன்நடை பயிற்சி தந்தாய்- பெண்ணே தெரிவையாகி தெரியாதன தெரிந்திடச் செய்தாய் போராளியாய் நின்று வீட்டாளுமை செய்தாய் பேராண்மையில் பேருவகை கொண்டாய் பேரற...