விறகு அடிச்ச கம்பு
விறகு அடிச்ச கம்பு "பாட்டி...பாட்டி" ஓங்கி கதவைத் தட்டினேன். " யாரும்மா...... பாட்டி வந்து கதவைத் திறக்கேம்மா... செத்த நில்லு...." குரல் கொடுத்தாவ பாட்டி. ஒரு பத்துநாளா பாட்டிக்குச் சுத்தமா கண்ணு பத்தல. ஒரு ஆளு எதுருல வந்தாலும் திருதிருன்னு முழிச்சிகிட்டு நிப்பாவ. தட்டுத்தடுமாறி வந்து எப்படியோ வந்து கதவைத் திறந்துட்டாவ. "பாட்டி வாங்க...வாங்க எங்க வீட்டுக்கு வாங்க..." கையைப் பிடித்து இழுத்தேன். "யாரும்மா....மூத்தவன் பிள்ளையா?" "மூத்தவன் பிள்ளையோ இளையவன் பிள்ளையோ...நான் செல்வன் அதுதான் எனக்குத் தெரியும் "வேண்டுமென்றே எறுக்குமாறாக பதில் சொல்லி வைத்தேன். "செல்வனா....பள்ளிக்கூடத்துக்குப் போகல" "போகல...அதனால்தான உங்களை கூப்பிட வந்துருக்கேன்." " ஏன் போகல...அம்மா வீட்டுல இல்லையா?" "இருக்காவ...இருக்காவ.... எல்லாரும் வீட்டுலதான் இருக்காவ... " "பிறகு ஏன் போகல? வாத்தியார் அடிச்சாரா?" " வாத்தியாரும் அடிக்கல...வாசல் கதவும் அட...