சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதா
சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதா சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. நம்ம பொழப்பே இப்படித்தான் இருக்கிறது. இந்த லட்சணத்தில் என்று முன்னேறுவது? என்று சலிப்பாக இருக்கிறீர்களா? ஏன் இந்த சலிப்பு? சாண் ஏறி முழம் சறுக்கினால் வெற்றி பெற முடியாது என்று யார் சொன்னது? முதலாவது சொலவடையை சற்று மாற்றிப் பாருங்கள். நீங்கள் வெற்றி பெறச் போவது உறுதி. ஓணான் ஒன்று எத்தனைமுறை சறுக்கினாலும் நான் பனை மரத்தில் ஏறியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து ஏறிக்கொண்டிருந்து. அதைப் பார்த்த ஒரு குரங்கு" அட முட்டாள் ஓணானே! எதற்காக சொரசொரப்பாக இருக்கும் பனை மரத்தில் ஏறி இவ்வளவு கஷ்டப் பட்டுக்கொண்டிருக்கிறாய்? இப்படி வழுக்கி வழுக்கி ஏறி என்றுதான் பனை மரத்து உச்சியைப் போய் சென்றடைவாய் "என்று கிண்டலடித்தது. தலையை நிமிர்த்தி பார்த்த ஓணான்"அட...நீ போவியா எனக்கு எல்லாம் தெரியும் "என்று சொல்லியபடி மறுபடியும் மறுபடியும் பனை மரத்தில் ஏறியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு புலவர் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். அவர் மனதில் இப்போது வேறு ஒரு மனக்கணக்கு ஓடியது. அவர் மனதிற்குள் ஓடிய கணக்கு பாடலாக வெளி வந்தது....