தாயோடு அறுசுவை போம்
தாயோடு அறுசுவை போம் " தாயில் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" பெற்றோருக்கு கணக்குப் போட்டு மாதம் ஒரு மகன் என்று கஞ்சி ஊற்றும் பிள்ளைகள் உள்ள காலம் இது. கணக்குப் போடாமல் தருபவள் தாய். பங்குபோட்டுக் கொடுத்தாலும் தன் பங்கையும் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு மிச்சம் இருப்பதை உண்பவள் தாய். தான் உண்ணும் உணவு கஞ்சியாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு சுவையாக சமைத்துக் கொடுத்து இன்பம் காண்பாள். இப்படி அம்மாவின் கையால் சுவையாக சாப்பிட்டு பழகிப் போய்விட்டோம்.சுவைக்கு அடிமையாகிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். சுவை என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. சுவை இல்லாமல் சப்பென்று இருக்கும் உணவை உண்ண யாரும் விரும்புவதில்லை. பசி ருசி அறியாது. கொடுத்ததைச் சாப்...