இன்சொல் இனிதீன்றல் காண்பான்....
இன்சொல் இனிதீன்றல் காண்பான்.... இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது " குறள் :. 99 இன்சொல் - இனிமை தரும் சொல் இனிதீன்றல்- இன்பம் தருவது காண்பான் - காணுதல்,அறிதல் எவன்கொலோ- எதனைக் கருதி வன்சொல் - கடுமையான சொல் வழங்குவது-பேசுவது,பயன்படுத்துவது இனிமை தரும் சொற்கள் இன்பம் வருவதைக் கண்டபின்னரும் ஒருவன் இன்சொல் பேசாது அதற்கு மாறான வன்சொல் பேசுவது என்ன பயன் கருதியோ? விளக்கம் : இனிமையான வார்த்தைகள் பேசுபவர்க்கும் இன்பம் பயக்கும்.கேட்பவர்களுக்கும் இன்பம் தரும். " இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் மகிழாதே ....."என்பார் சிவப்பிரகாசர். இப்படி இனிமையான சொல்லால் உலகம் மகிழும் என்று தெரிந்த பின்னரும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி பிறர் மனதை நோகடிக்கலாமோ? உள்ளத்தில் கள்ளம் இல்லாதவர் பேசும் சொற்கள் இனிது. அவர்கள் ஒருநாளும் பிறருக்கு தீங்கிழைக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அதனால்தான் " மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது "என்கிறார் தெரியாதவர்கள் வன்சொல் பேசினால் அது தவறல்ல. இன்சொல் இன...