வெற்றிப் படிகள் மூன்று
வெற்றிப் படிகள் மூன்று அனைவருக்கும் வெற்றிபெற வேண்டும் என்று ஆசை. ஆனால் எல்லாராலும் அது சாத்தியமாகிறதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. அது ஏன்? ஏன்? அதற்கான காரணம் ஆளாளுக்கு வெவ்வேறாக இருக்கும். கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதுதான் பலரது பதிலாக இருக்கும். கடின உழைப்பு மட்டும் இருந்தால் எல்லா இடங்களிலும் வெற்றி சாத்தியமாகுமா? கூலித் தொழிலாளியும்தான் அல்லும் பகலும் அயராது உழைக்கிறார். ஆனால் அவருடைய வாழ்வில் எந்தவித முன்னேற்றத்தையும் காணோமே என்பீர்கள். அப்படியானால் வாழ்வில் வெற்றிபெற கடின உழைப்பு தேவை இல்லையா என்ற கேள்வி நம்மை முன்னே நகரவிடாமல் தடுத்து நிறுத்துகிறது. இமயமலையில் ஏறுவது மட்டும் வெற்றியல்ல. ஒரு பாறையின் மீது ஏறி நிற்பது கூட ஒரு சிலருக்கு வெற்றியாகத்தான் இருக்கும். நம் இயல்புக்கு ஏற்ற வெற்றியைப் பெறுதல் கூட அசாத்திய வெற்றியாகவே கருதப்படும். அந்த வெற்றிக்கான அடித்தளமிடுதல் எப்படி என்பதைப் பார்ப்போம். வெற்றிக்கான மறைபொருள் எவையெவை என்பதைத் திருவள்ளுவர் பல குறள்களில் சொல்லித் தந்து கொண்டே செல்கிறார். எல்லாக் குறள்களும் ...