சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்...
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்.... " சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை " குறள் : 1031 சுழற்றும் -சுற்றித் திரிந்தாலும் ஏர் -உழவுத்தொழில் பின்னது -வழியதே உலகம்-இவ்வுலக மக்கள் அதனால்- அதன் காரணமாக உழன்றும் - துன்பம் துய்தலாயினும் உழவே - உழவுத்தொழிலே தலை- முதன்மையானது. பல தொழில்களைச் செய்து வரும் இந்த உலகமானது ஏர்த்தொழிலின் பின்னாலேயே நிற்க வேண்டியுள்ளது. ஆதலால் எவ்வளவு துன்பம் நிறைந்த தொழிலாக இருந்தாலும் உழவுத்தொழிலே முதன்மையானதாகும். விளக்கம் : உலகில் பல தொழில்களைச் செய்யும் மக்கள் உள்ளனர். அதனால்தான் இந்த உலக இயக்கம் இன்றளவும் நில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்துத் தொழில்களும் ஒன்றுக்கொன்று சார்புடையவை என்பது மறுக்கமுடியாத உண்மை. இயந்திரமயமான இந்த உலகில் இயந்திரங்கள் இல்லை என்றால் வாழமுடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். மனிதன் செய்யும் வேலைகளை எல்லாம் பங்கு போட்டுக்கொள்ள இயந்திரங்கள் ...