தோழனோடும் ஏழைமைபேசேல்
தோழனோடும் ஏழைமை பேசேல் ஔவையின் அமுதமொழிகளுள் இதுவும் ஒன்று. கொன்றை வேந்தனில் ஔவை கூறியுள்ள வரிகள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத வாழ்வியல் உண்மைகளைச் சொல்லித் தரும். ஔவை கூறும் ஒவ்வொரு சொல்லுமே ஒவ்வொரு உண்மையை எடுத்து வைக்கும். " தோழனோடும் ஏழைமை பேசேல்" எளிதில் பொருள் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு சொற்றொடர். நண்பனோடு நமது ஏழ்மை நிலையைப் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது .இதுதான் இதன் பொருள் என்ற சாதாரணமான புரிந்துணர்வோடு நாம் கடந்து போய்விட முடியாது. ஏழைமையை என்றால் அறியாமை என்ற ஒரு பொருளும் உண்டு. ஆகையால் நம்மிடம் நெருங்கிப் பழகும் நண்பர்கள்தானே என்ற நினைப்பில் அவர்களிடம் முன்பின் யோசியாமல் அறிவீனமாகப் பேசிவிடாதே என்றும் எச்சரிக்கிறார் ஔவை. நமது வறுமையைப் பிறரிடம் பறைசாற்றுவதும் ஒருவகையில் மதியீனம்தான் என்கிறார் ஔவை. ஔவை தோழனிடம் ஏழைமை பேசேல் என்று எழுதவில்லை. தோழனோடும் என்ற ஒற்றைச்சொல்லின் மூலம் மற்றும் சிலரை அதில் தொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். தோழனோடு இன்னும் சிலரா வியப்பாக இருக்கிறதா! தோழனிடமே நமது வறுமையைப் பற்றிப் பேசக் கூடாது. அறிவீனமாக பேசி விடக்கூடாது. அப்படியானால் மெதுவாக ...