Posts

Showing posts with the label எல்லா விளக்கும் விளக்கல்ல...

எல்லா விளக்கும் விளக்கல்ல....

  எல்லா விளக்கும் விளக்கல்ல.... " எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு "                             குறள்  : 299 எல்லா - அனைத்து விளக்கும் - விளக்குகளும் விளக்கல்ல - ஒளி தருவதல்ல சான்றோர்க்கு - நற்குணம் பெற்றவவர்களுக்கு பொய்யா - பொய்யாமையாகிய விளக்கே - விளக்கு மட்டுமே  விளக்கு - விளக்காக இருக்கும் புற இருள் நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல. சான்றோர்க்கு  அகஇருள் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகக் கருதப்படும். விளக்கம் : இவ்வுலகில்   இருளை அகற்ற   இயற்கையாக ஒளிதரும்  கதிரவன் இறைவனால் படைக்கப்பட்டுள்ளது. செயற்கையாக பல ஒளிவிளக்குகள் வண்ண வண்ண நிறங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை ஒளிதரும் காரணிகளாக கருதப்படுகின்றன. இவை புற இருளை நீக்குகின்றன. ஆனால் இவை யாவும் பொய்யாமை  என்னும் விளக்கின் முன்னர்  காணாமல் போய்விடும்.  ஒருவன் உயர்ந்தவன்,  பண்புடையவன் என்று உலகத்தோரால் அறியப்பட வேண்டுமானால் அவனிடம் பொய் சொல்லாதிரு...