தெய்வத்தான் ஆகா தெனினும்....
தெய்வத்தான் ஆகா தெனினும்... " தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் " குறள் : 619 தெய்வத்தான் _ கடவுளால் ஆகாது _ ஆக முடியாது எனினும் _ என்றாலும் முயற்சி _ முயற்சி செய் தால் தன் _ தனது மெய் _ உடம்பு வருத்த _ வருந்தி உழைத்த கூலி _ சம்பளம், பலன் தரும்_ கொடுக்கும் ஒரு செயல் ஊழ்வினை காரணமாக முடியாமல் போனாலும் விடாமுயற்சியோடு உடம்பு வருத்தி உழைத்த உழைப்பிற்கான பலன் கிடைக்காமல் போகாது. விளக்கம் : விதியின் காரணமாக சில நேரங்களில் கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்காமல் தடைபடலாம். அதற்காக முயற்சி செய்வதை விட்டுவிடக்கூடாது. உடல் வருந்த உழைப்பவனுக்கு அதனால் கிடைக்க...