தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு....
தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு... . தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்" குறள் : 462 தெரிந்த- தேர்வு செய்யப்பட்ட இனத்தோடு - இனமானவர்களோடு தேர்ந்து-ஆராய்ந்து எண்ணிச்- கருதி செய்வார்க்கு - செய்பவர்க்கு அரும்பொருள்-எய்தற்கரிய யாதொன்றும்- எதுவும் இல் - இல்லை நன்கு தேர்வு செய்யப்பட்ட இனத்தோடு இணைந்து, செய்ய வேண்டிய செயலைத் தெளிவாக ஆய்வு செய்து ,செயலில் ஈடுபடுபவர்க்கு செய்ய முடியாத செயல் என்று ஒன்றுமில்லை விளக்கம்: ஒரு செயலைச் செய்வதற்கு முன்னர் அந்தச் செயலைச் செய்வதற்கு நாம் தேர்வு செய்யப்போகும் நபர் இந்த செயலைச் செய்வதற்குப் பொருத்தமானவர் தானா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அப்படி ஆய்வு செய்த பின்னரே தகுதியான நபரை அந்தச் செயலைச் செய்வதற்கு நம்மோடு இணைத்துக் கொள்ள வேண்டும். நாம் தேர்வு செய்பவர் சரியாக இருக்க வேண்டும். நாம் செய்யப்போகும் செயலைச் பற்றியும் நமக்குத் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும். நமது தேர்வும் செயலைப் பற்றிய நமது சிந்தனையும் தெளிவாக இருந்தால் எளிதாக நாம் எடு...