ஆகுபெயர் வகைகள்
ஆகுபெயர் வகைகள் ஒருசொல் அதன் பொருளைத் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது ஆகுபெயர் எனப்படும். எடுத்துக்காட்டாக நெல் அறுத்தான் என்ற சொற்றொடரை வைத்துக் கொள்வோம். உண்மையில் அறுக்கப்பட்டது நெல்லா? இல்லை. உண்மையிலேயே அறுவடை செய்யப்பட்டது நெற்பயிர் தான். நெல் அறுத்தான் என்பது இங்கே நெற்பயிரைக் குறிக்கிறது. இதேபோன்றுதான் வெற்றிலை நட்டான் என்பதும் வெற்றிலைக்கொடி நட்டான் என்பதைத்தான் வெற்றிலை நட்டான் என்று கூறுவோம். இப்படி ஒன்றின் பெயர் மற்றொன்றிற்கு ஆகி வருவது ஆகு பெயர் எனப்படும். "பொருள் முதல் ஆறோடு அளவை சொல் தானி கருவி காரியம் கருத்தன் ஆதியுள் ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிரிவைத் தொல்முறை உரைப்பன ஆகு பெயரே" - நன்னூல் ஆகுபெயர் பதினாறு வகைப்படும். 1. பொருளாகுபெயர் 2. சினையாகுபெயர் 3. இடவாகுபெயர் 4. காலவாகு பெயர் 5. பண்பாகு பெயர் 6. தொழிலாகு பெயர் 7 எண்ணலளவை ஆகுபெயர் 8 .எடுத்தலளவை ஆகுபெயர் 9.முகத்தலளவை ஆ...