சீரியர் கெட்டாலும் சீரியரே
சீரியர் கெட்டாலும் சீரியரே "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்று சொல்லித் தந்த ஔவைக்கு அத்தோடு நம்மை விட்டுவிட மனமில்லை. சங்கு எத்தனை பேருக்குத் தெரியுமோ என்ற ஐயம் ஔவையின் மனதில் எழுந்தது. தெரிந்தவர்கள் நான் சொன்ன உவமை மூலம் சொல்ல வந்த கருத்தைப் புரிந்திருப்பார்கள். தெரியாதவர்களுக்கு புரிய வைக்க வேண்டுமே! அதற்கு என்ன செய்வது? எல்லாருக்கும் புரியும்படியான இன்னொரு பொருளைக் கையிலெடுத்து விளங்கும்படியாகச் சொல்லி வைப்போம். அப்படியாவது புரிகிறதா என்று பார்ப்போம் என்று நினைத்தார் ஔவை. நாமும் பல நேரங்களில் புரிந்து போல தலையை ஆட்டுவோம். ஆனால் புரிந்திருக்காது. சரி போகட்டும் என்று அப்படியே கடந்து போய்விடுவோம். திரும்பத்திரும்ப சொல்லித்தரும் போதுதான் புரிந்து கொள்வோம். அல்லது சில நேரங்களில் வாசித்த மறுநிமிடமே மறந்துவிட்டு கண்டும் காணாமல் போய்விடுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக தெரிந்த உவமைகள் மூலம் விளக்கப்பட்டிர...