தமிழுக்காக தலை கொடுத்த குமணன்
தமிழுக்காக தலை கொடுத்த குமணன் குமணன் மன்னன் தன்னிடம் பொருள் வேண்டி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாத நல்லுள்ளம் படைத்தவன். அவனுக்கும் அவன் தம்பி இளங்குமணனுக்கும் நெடுநாள் பகை இருந்துவந்தது. பகை போரில் முடிய குமணன் தோல்வியடைந்து நாட்டைவிட்டு வெளியேறி காட்டில் மறைந்து வாழும் சூழல் ஏற்பட்டது. அண்ணன் நாட்டைவிட்டு வெளியேறி இருந்தாலும் அண்ணன் மீது இருந்த பகை மட்டும் இளங்குமணனுக்குக் குறையவில்லை. அண்ணனை உயிரோடு விட்டு வைத்தால் என்றாவது ஒருநாள் தன் அரியணை பறிபோகலாம் என்ற அச்சம் அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது. அதனால் அண்ணனை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று நினைத்தான். எப்படிக் கொல்வது? அண்ணன் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லையே! ஒற்றர்களை அனுப்பி தேடிப்பார்த்தான். எந்தச் சாதகமான செய்தியும் கிடைக்கவில்லை. அதனால். குமணனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பரிசு என்று அறிவித்தான் இளங்குமணன். இந்தச் சூழலில் குமணனைக் காட்டில் சந்திக்கிறார் ஒரு புலவர். தன் வறுமையைச் சொல்கிறார். ஆனால் புலவருக்குக் கொடுப்பதற்கு குமணனிடம் எதுவுமில்லை. என்ன செய்வது? இதுநாள் வரை என்...