Posts

Showing posts with the label கனவில் ஔவை- கவிதை

கனவில் ஔவை

Image
கனவில் ஔவை நார்க்கட்டிலில்  நாடி வானம் பார்க்க மூடி கண்கள் இருக்க செவி மடலை மெல்ல தொட்டதொரு குரல் விழிகள் திறக்க மறுக்க கைகள் மட்டும் சிலிர்க்க கேள்வி கேட்க  மனம் நினைக்க நா எழும்ப மறுக்க செவி மடலுக்குக்குள்  மேலும் ஒரு  சலசலப்பு சிற்றெறும்பு கடித்ததொரு  சிலுசிலுப்பு செவி மடலைத் தழுவி செவி தீட்டி கவனம் திரட்டி குரல் அடையாள வகுப்பு நடத்தி குழம்பிய மனதோடு   காத்திருந்தேன் வெற்றுக் காற்று  வெப்பமொடு வந்து முட்ட கண் முன் ஏதோ  அசைவாடும் உணர்வு கிட்ட யாரென்று  குரல் அதட்ட முட்ட வந்தவள்  இதழ் குவிக்க முத்துக்களைச் சிதற விட்டு வேடிக்கை காட்டி நின்றாள் மயங்கிய வேளையில் மெல்லொலி வந்து வேசம் கட்டிய நான்  வேசக்காரியுமல்ல மோசக்காரியுமல்ல  யாரென்று நீர் உரைத்தால் சாகா மருந்தொன்று தருவேன் வேகா வெயிலில்  சுட்டப் பழம் எடுத்து வந்தேன் சுவைத்திட விருப்பமோ  எனக் கரம் நீட்ட சாகா மருந்து தர இவளென்ன சஞ்சீவி பர்வதத்துக் காரிகையா? கைத்தடியொடு குறுக்கே நடக்க முட்டொன்று தட்டி ஒலியெழுப்ப தட்டுத் தடுமாறி நடக்கு மிந்த முதுமகள் யாரிந்த தேவதை? ...