திருவள்ளுவர் பார்வையில் காகம்
திருவள்ளுவரின் பார்வையில் காகம் காகம் அல்லது காக்கை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கண்ணோட்டம் உண்டு. காகம் என்றால் சிலருக்கு ஓர் அலட்சியம். கருப்பாக இருப்பவர்களை அண்டங்காக்கா என்று இழிவாகப் பேசுவர். கூட்டமாக சாப்பாட்டுக்கு வந்துவிட்டால் போதும் காக்கா கூட்டம் மாதிரி வந்து கூடிட்டானுங்கப்பா என்று கிண்டலடிப்பர். காக்கை கரைந்தால் விருந்து வரும் என்பது சிலரது நம்பிக்கை. இப்படி காகத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கண்ணோட்டம் உண்டு. ஆனால் வள்ளுவருக்கு மட்டும் காகத்தைப் பற்றிய எண்ணம் மிகவும் உயர்வானது. ஒரு அரசன் போருக்குச் சொல்லும்போது கூட அவன் காக்கையைப் பார்த்து கொஞ்சம் கற்றுக்கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் வள்ளுவர். அடேங்கப்பா.... அரசனே காகத்திடம் போய் கற்றுக்கொள்ள வேண்டுமா? ஏன் கூடாதா? நல...