பாராட்டும் இடங்கள்
பாராட்டும் இடங்கள் யாரை எங்கே எந்த இடத்தில் பாராட்ட வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். உற்சாக மிகுதியால் பாராட்டுகிறேன் என்று கண்ட இடத்தில் யாரையும் பாராட்டிப் பேசிவிடக் கூடாது. அதற்கென்று சில நெறிமுறைகள் உண்டு. தான் செய்யும் செயலுக்கான அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது இயல்பு. ஒரு பள்ளி மாணவனை ஆசிரியர் சக மாணவர்கள் முன்னிலையில் புகழ்ந்து பேசி முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டால் போதும். அவனுக்கு யாரோ தன் தலையில் கிரீடம் வைத்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். இன்னும் நம் ஆசிரியரிடமிருந்து பாராட்டினைப் பெற்றுவிட வேண்டும் என்று முனைப்போடு படிப்பான். அந்தப் பாராட்டுகளைக் காலம் உள்ளவரை மறக்க மாட்டான். ஒருவரின் சொல் அல்லது செயல் நம்மைப் பெரிதும் கவர்கிறது அல்லது மகிழ்ச்சிப்படுத்துகிறது என்றால் நம் மனது தானாக அவர்களைப் பற்றி புகழத் தொடங்கி விடும். மனம் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வைக்கும். ஒருவரை அப்போதைக்கப்போது பாராட்டலாமா என்றால் ....கூடாது என்கிறார் ஔவை. ஒருவரைப் பாராட்டுவதற்குக்கூட நேரம் காலம் பார்த்துதான் பாராட்ட வேண்டுமா...