மணிவிழா வாழ்த்து மடல்

மணிவிழா வாழ்த்து மடல் 


பொருநை நகர் திருமிகு சிதம்பரம் பிள்ளை

சந்திரகாந்தா இணையர் 

பேர் சொல்ல வந்த பாபு ராமகிருஷ்ணன் 

சாந்தா எனும் நல்லாளொடு  நல்லறம் செய்ய

வரமாய் வாய்த்தது இந்த அறுபதாம் அகவை நாள் விழா!


"மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை 

என்னோற்றான்கொல் எனும் சொல்" என்னும் செந்நாப்புலவர் வாக்குகேற்ப பெற்றோர் 

பெருமிதம் கொள்ள பேரறத்தான் சிவசிதம்பரம் 

சீர்பட கண்டுஉவக்க பிறந்தது பாபுவின் 

மணி விழா!


எங்கள் இல்லத்தில் இது ஆனந்த திருவிழா

உள்ளத்தில் பேரிகை கொட்டட்டும் இது பேரின்பப் பெருவிழா

வானவரும் வாழ்த்தட்டும் இது வசந்தகாலத் திருவிழா 

வளமும் நலமும் கூட்ட வந்த பருவகாலத் திருவிழா!


சுற்றமும் நட்பும் அகமகிழும் அழகுத் திருவிழா 

உறவுகள் உவக்க வந்த பிறந்தநாள் விழா 

தமிழ் போல  இனிமை நிறை மணிவிழா  -நாளை

முடிசூட்டப் போகும்  பவளவிழாவிற்கு இதுதான் திறப்பு விழா 


கரமசைத்து வரவேற்க வாய்ப்பு கேட்கிறது முத்துவிழா 

"நூறாண்டு வாழ்க நோய்நொடி இல்லாது வளர்கவெனும்"

வாழ்தொலியோடு வாயிலில் காத்து நிற்கிறது

நூற்றாண்டு விழா


முத்திரையாய் இத்தரையில் 

நடக்கும் மணிவிழா

வான்மறையோர் ஆன்றோர் நல்லாசியுடன் 

பவளவிழா முத்துவிழா 

நூற்றாண்டுவிழா காண

வீறு நடை போட வேண்டும் என்பது எம் பேரவா


இன்று போல பாபு  அனைவரையும்  அணைத்து 

அகம்மகிழ பார்புகழ யாம்மகிழ 

வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துகிறேன் 

வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு 

என்றென்றும் எம் உள்ளங்களில் நிறைந்து!

 

-செல்வபாய் ஜெயராஜ் 

Comments

Popular posts from this blog

நோவற்க நொந்தது அறியார்க்கு....

அம்மா நீ எனக்கு வேண்டும்

பயணங்கள் முடிவதில்லை