பணி ஓய்வுப் பாராட்டு மடல்

பணி ஓய்வுப் பாராட்டு மடல்

நாஞ்சில் தமிழ்மணக்க நல்லோர் குடியிருக்க
நாநிலம் புகழுமூர் அழகப்பபுரம் என்றிருக்க
நன்மக்கள் ஞானசிகாமணி அலிஸ்மேரி மடிசிறக்க
நன்மகள் அமுதா அவதரித்தார் குலம் சிறக்க

இல்லறம் நல்லறமாய் இனிதே நடந்திருக்க
இருவர் மகவானார் குலம் தழைத்திருக்க
இணையாய் இல்லத்தில் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்க 
இறையருள்  வாய்த்தது திருக்குடும்பமாய்
வாழ்ந்திருக்க

கேயர் நகரில் ஆசிரியப்பணிக்காய் முதலடி பதித்திருக்க
ஓர்லிநாக்கா சாந்தாகுரூஸ் எங்கும் 
நின்குரல் ஒலித்திருக்க 
ஆரே காலனியில் ஆசிரியப்பணி நிறைவு என்றிருக்க
ஆண்டவன் அருள் செய்தார்
ஆசிர்வாதம் நிறைந்திருக்க


மேதகு சிக்ஷக் சபா பெண்கள் குழு தலைவராய்  அமுதா நடக்க
மேயர் விருது  மணிமுடியில்
மரகதமாய் ஜொலித்திருக்க
மென்மேலும் பதவிகள் பற்பல 
அழகூட்டி நிற்க
மேன்மையாய் வலம்வந்தார்
மாநகராட்சி எங்கும் பெயர்சிறக்க

பேச்சில் தமிழிருக்க மூச்சினில் கடமையிருக்க
பெருமுனைப்போடு உழைத்தார் மாணவர் கல்வி சிறக்க
பெரும்பேராய் 
நிமிர்ந்த நன்னடை வாய்த்திருக்க
பொறித்தது மாநகராட்சி  வரலாற்றுப் பக்கங்களில் அமுதா பெயர்நிலைத்திருக்க

முப்பத்தேழு ஆண்டுகள் ஆசிரியப் பணி என்றிருக்க
முப்பொழுதும் அறப்பணிக்காய் அர்ப்பணித்தாய் அறம்சிறக்க
முனைப்போடு உழைத்ததுபோதும்  இளைப்பாறுக என்றுரைக்க
மும்பை  மாநகராட்சி வந்தது பணிஓய்வு 
பத்திரம் கையில்சுமக்க

ஆண்டவன் அருள் இல்லத்தில் 
குடியிருக்க
அழகான நாட்கள் ஓய்வில் உண்டு மகிழ்ந்திருக்க 
ஆனந்தமாய்  வாழ்ந்திடுக
உறவுகள் கூடியிருக்க-நாங்கள்
ஆசையோடு வாழ்த்துகிறோம்
பணி நிறைவு மகிழ்வாய் அமைந்திருக்க

வாழ்த்துகள் டீச்சர்.
 -செல்வபாய் ஜெயராஜ் 

Comments

Popular posts from this blog

நோவற்க நொந்தது அறியார்க்கு....

அம்மா நீ எனக்கு வேண்டும்

பயணங்கள் முடிவதில்லை