Posts

செந்தமிழ் நாடெனும் போதினிலே

செந்தமிழ் நாடெனும் போதினிலே  செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே- எங்கள் தந்தையர்  நாடென்ற  பேச்சினிலே- ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே                                -   (   செந்தமிழ்.....) காவிரி தென்பெண்ணை பாலாறு- தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி-என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு                                    -   (    செந்தமிழ்.....) வேதம் நிறைந்த தமிழ்நாடு-உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு- நல்ல காதல் புரியும் அரம்பையர்போல்- இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு                     ...

பால்காரி பாலம்ம

பால்காரி பாலம்ம "பாலம்மக்கோ ....பாலம்மக்கோ...." கதவைத் தட்டினாள் அன்னப்பழம். "யாரு....செத்தப் பொறு.... நான் வளவுல மாட்டுக்குத் தீவனம் போட்டுட்டு நிற்கேன்" உரக்கக் கத்தினார் பாலம்ம. "ஒரு அவசரம்க்கோ....ஒரு தம்ளர் பால் வேணும்" "வருகிறேன் இரு "என்று குரல் கொடுத்தார் பாலம்ம. கேட்டதும் திண்ணையில் கையில்  கொண்டுவந்த லோட்டாவோடு  அப்படியே உட்கார்ந்தார் அன்னப்பழம். சற்று நேரத்திற்கெல்லாம்  வீட்டிற்குள் இருந்து வந்த  பாலம்ம..."என்ன அன்னப்பழம்  மணி நாலு தான் ஆவது  அதுக்குள்ள கையில்  லோட்டாவோடு வந்துருக்கா?" என்று கையை தோள் சீலையில் துடைத்தபடியே பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். "அது ஒண்ணுமில்லக்கோ....வீட்டுக்கு விருந்துக்காரவுக வந்துருக்காவ..." "யாரு உன் சம்பந்தி வூட்டுக்காரவுகளா?" "அதுகள் நம்ம வீட்டுக்கெல்லாம் வருமா? அதுகளோடு உறவ முறிச்சி ஆறு மாசம் ஆகுது. ஒரு பேச்சு  வார்த்தை இல்லை.." "அப்புறம் வேறு யாரு வந்திருக்காவ..?" "எங்க சின்னையா மகன். இந்தப்பக்கம் ஒரு சோலியா வந்திவளாம். அதுதான் நம்ம அன்னப்பழத்தையும...

அச்சம் தவிர்

"அறஞ்செய விரும்பு "என்று தனது ஆத்திசூடியை அறத்தோடு தொடங்கினார் ஔவை. பாரதியார் தனது புதிய ஆத்திசூடியை "அச்சம் தவிர் "என்று  தன்னம்பிக்கையூட்டித் தொடங்கியிருக்கிறார்.  அத்தோடு விட்டு விட்டாரா? அடுத்த வரி "ஆண்மை தவறேல்" அதாவது மன வலிமையை இழக்காதே! நம்பிக்கை தரும் வரி இல்லையா? அதைத்தொடர்ந்து மூன்றாவதாக "இளைத்தல் இகழ்ச்சி" என்கிறார். அதாவது சோர்ந்துபோய் பின்தங்கிவிடக் கூடாது.அது இகழ்வடைய காரணமாக அமைந்துவிடும். என்று தட்டி எழுப்பிக் கொண்டே வருகிறார். இதுதான் பாரதியின் பாடல்களில் இருக்கும் மந்திரமும் தந்திரமும்.  பாரதியின் பாடல்கள் என்றாலே ஒரு இளமையின் துள்ளலும்  உயிரோட்டமான உணர்வும்  உணர்ச்சியூட்டலும் கொண்டதாகவே இருக்கும். எதற்கும் அஞ்சா துணிச்சலை வளர்த்தெடுக்க உரமூட்டும் கருத்துக்கள் அதற்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். நம்மைத்  தட்டி எழுப்புவதாக இருக்கும். இலக்கண வரம்புக்கு உட்படாமல் புதுக்கவிதைக்குப் பாதை அமைத்துத் தந்தவராயிற்றே! யாருக்கு அஞ்ச வேண்டும்? எதற்கு அஞ்ச வேண்டும்? என்று துணிச்சலோடு சொல்ல வந்த கருத்தினை அள்ளி வீசியவர் பாரதி. "அச்சம...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணிநிறைவுப் பாராட்டு மடல்  மின்னணு மிகைபுகழ்  கூடங்குளம் பேருலா முன்னடிநாடார் பஞ்சுப்பழம் அம்மாள் இணையிலா முன்னவர் குலம் விளங்க வந்த பிள்ளைநிலா சின்னவர் செவியோதிய தவமணி பெயர் புகழுலா! கள்ளுலா ரதிலலிதா கண்ணுலா வந்தலா(ல்) காதலா(ள் ) கரம்பிடித்தலா கன்னி மனையாதலா கட்டிலா தொட்டிலா பிள்ளை நால்வராதலா(ல்) மட்டிலா  மகிழுலா மனையில் ஆட்சி நடத்தலா! கர்மவீரர் பள்ளியில் தடம் பதித்தலா (ல்) கர்மமே கண்ணெனக் கடுமையாய் உழைத்தலா வன்மம் கொள்ளா வாழ்க்கைத்துணை வழிகாட்டலா(ல்) தர்மமும் தயையும்  தவமணியின் கரம்பிடித்தலா! கலைகள் யாவும் உள்ளிலா தலைச் சோற்றிலா மலையாய் உயர்வுலா மாறா நேசரின் அருளிலா அலையிலா மனம் ஆர்ப்பரிப்பிலா ஆனந்தத் துள்ளலா விலையிலா நட்புலா காண்டலா(ல்) மனம் மகிழ்ச்சி கடலிலா! தவம் உன்றன் பெயரிலா செயலிலா அறம் நின் அறப்பணியிலா அர்ப்பணிப்பிலா விஞ்சு மதியுலா மிஞ்சு மொழியிலா பேச்சிலா கஞ்சமாய்ப் புகழ்தலால் பஞ்சம் என் சொல்லிலா! நாலேழு ஆண்டு நற்பணி நடத்தலா(ல்) நல்லோர் ஏத்தலா(ல்) நற்புகழ் வாய்த்தலா  தொய்வில்லா தொடர்பணியால்  தளர்தலா அயர்தலா அயர்வறியா தமிழுக்கு அணையிட ஓய்வென்று உரை...

பிறந்தநாள் வாழ்த்து

Image

வஞ்சகப் புகழ்ச்சி அணி

வஞ்சகப் புகழ்ச்சி அணி  புகழ்ச்சி தெரியும். இது என்ன...வஞ்சகப் புகழ்ச்சி! ஏதோ நெருடலாக இருக்கிறதே. வஞ்சகத்தோடு இருக்கும் ஒருவரால் புகழ்ந்து பேச முடியுமா ?  பேச முடியும். நயவஞ்சகம் பற்றி தெரியுமல்லவா! நயமாகப் பேசி நம்மை நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள் இல்லையா? இந்த நயவஞ்சகத்திற்கும் வஞ்சகப்புகழ்ச்சிக்கும் பெரிய வேறுபாடு இல்லைங்க. ஒருவரைப்   புகழ்வது போல பழிப்பது. பழிப்பது போல புகழ்வது. அதாவது எள்ளல். ஒருவரை எள்ளி நகையாடுவது பள்ளிப் பருவத்திலிருந்தே நமக்குக் கைவந்த கலைதான். அதுவும்  அவர்களுக்கு வலிக்காதபடி பேசுவது ...ஒருவகையில் பொடி வைத்துப் பேசுவது என்றே வைத்துக் கொள்வோம். பேசுபவர் பேசிவிடுவார். மேலோட்டமாக பார்த்தால்  பொருள் இருக்கும். உடனே நமக்குப் புரியாது. நாமும் சேர்ந்து சிரிப்போம். வீட்டிற்கு வந்த பின்னர்தான் எங்கோ பொறியில் தட்டுவதுபோல  இருக்கும். அவன் என்னை நக்கலடித்திருக்கிறான். நானும் முட்டாள் மாதிரி சிரித்துவிட்டு  வந்திருக்கிறேனே என்று நம்மையே நொந்து கொள்வோம்.  இது நம்மில் பலருக்கு ஏற்பட்ட அனுபவமாகத்தான் இருந்திருக்கும். இதைத்தான் வஞ்சகப் ...

முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான்

முருங்கை நட்டவன் வெறுங்கையோடு  போவான் இது என்ன பழமொழி இதன் பொருள் என்ன? இதன் மேலோட்டமான பொருள் என்ன? முருங்கை நட்டவன் ஒன்றுமே இல்லாமல் போவானா ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? முருங்கையின் இலை, பூ ,காய் ,பட்டை என்று அனைத்தும் வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இப்படியொரு பழமொழியா ? கை நிறைய பணத்தை அள்ளித்தரும் முருங்கையைப் பற்றி  வெறுங்கையாகிவிடுவது போல கூறுவது ஏற்புடையதாக இல்லையே. எங்கோ தவறு இருக்கிறது.. இதனுள் கண்டிப்பாக வேறொரு பொருள் பொதிந்திருக்க வேண்டும். அது என்னவாக இருக்கும்? அவிழ்த்துப் பார்த்துவிட வேண்டும். ஆவலோடு ஏற்பட்ட தேடலில் கிடைத்தது பழமொழியின் உண்மையான பொருள். இல்லை இல்லை . என் மனம் உண்மை என்று ஏற்றுக்கொண்ட பொருள். முருங்கை நட்டவன் வெருங்கையோடுதான் போவான். முருங்கையில் இரும்புச் சத்து இருக்கிறது. எலும்புக்கு வலுவூட்டும் சத்துள்ள முருங்கை இலை முருங்கைக்காய் இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் உறுதியாக இருக்கும். கோலூன்றி நடக்க வேண்டாம். வெறுங்கையோடு கைவீசி நடக்கலாம். இதுதான் பொருள். அருமையான பழமொழி இல்லையா?