முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான்
முருங்கை நட்டவன் வெறுங்கையோடு
போவான்
இது என்ன பழமொழி இதன் பொருள் என்ன?
இதன் மேலோட்டமான பொருள் என்ன?
முருங்கை நட்டவன் ஒன்றுமே இல்லாமல் போவானா ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
முருங்கையின் இலை, பூ ,காய் ,பட்டை என்று
அனைத்தும் வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில்
இப்படியொரு பழமொழியா ?
கை நிறைய பணத்தை அள்ளித்தரும்
முருங்கையைப் பற்றி
வெறுங்கையாகிவிடுவது போல கூறுவது
ஏற்புடையதாக இல்லையே.
எங்கோ தவறு இருக்கிறது..
இதனுள் கண்டிப்பாக வேறொரு பொருள் பொதிந்திருக்க வேண்டும்.
அது என்னவாக இருக்கும்?
அவிழ்த்துப் பார்த்துவிட வேண்டும்.
ஆவலோடு ஏற்பட்ட தேடலில்
கிடைத்தது பழமொழியின்
உண்மையான பொருள்.
இல்லை இல்லை .
என் மனம் உண்மை
என்று ஏற்றுக்கொண்ட
பொருள்.
முருங்கை நட்டவன்
வெருங்கையோடுதான் போவான்.
முருங்கையில் இரும்புச் சத்து இருக்கிறது.
எலும்புக்கு வலுவூட்டும்
சத்துள்ள முருங்கை இலை முருங்கைக்காய்
இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால்
உடல் உறுதியாக இருக்கும்.
கோலூன்றி நடக்க வேண்டாம்.
வெறுங்கையோடு கைவீசி
நடக்கலாம்.
இதுதான் பொருள்.
அருமையான பழமொழி இல்லையா?
Comments
Post a Comment