இலக்கியத் தென்றல் தாலசைத்துத் தமிழ் ஊட்டி தாலாட்டிப் பாராட்டி முதல் இலக்கியம் முன்மொழிந்து பாட்டன் பாட்டி உறவுமுறை உணர்வினில் ஏற்றி தமிழ்ப் பாலூட்டிய தாய்க்குத் தலை வணக்கம்! இனிமை தமிழ் மொழி எனது இளமை தான் அதன்அழகு வளமை கொண்ட பொலிவு வாய்த்தது நற்பே றதுஎனக்கு தாலசைத்த நாளிலிருந்து தமிழ்ப் பேச வைத்து தமிழடி எடுத்து வைத்து தமிழ் நடை கொடுத்த தமிழ்த்தாயின் சீரடிக்கு இச்சிறு பிள்ளையின் இணைகரம் கூப்பிய வணக்கம்! சீரமைச் செவிக்கின்பத் தேனருந்த வந்திருக்கும் தமிழ்ச் சொந்தங்களுக்கு கோடானு கோடி வணக்கம்! மலையைப் பெயர்த்து மடிப்பைக்குள் வைக்க நினைப்பதுபோல் காற்றைப் பிடித்து கைப்பைக்குள் அடைக்க விரும்பும் சிறுவன் போல் வான் நிலவை நீள்கயிற்றால் இழுத்திட அலையும் குரங்கினம் போல் அலை கடலைச் சிற்றலகில் அள்ளி வற்றிட முனையும்...