Posts

ஆகுபெயர் வகைகள்

ஒருசொல் அதன் பொருளைத் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது ஆகுபெயர் எனப்படும். எடுத்துக்காட்டாக நெல் அறுத்தான் என்ற சொற்றொடரை வைத்துக் கொள்வோம். உண்மையில் அறுக்கப்பட்டது நெல்லா? இல்லை. உண்மையிலேயே அறுவடை செய்யப்பட்டது நெற்பயிர் தான். நெல் அறுத்தான் என்பது இங்கே நெற்பயிரைக் குறிக்கிறது. இதேபோன்றுதான் வெற்றிலை நட்டான் என்பதும் வெற்றிலைக்கொடி நட்டான் என்பதைத்தான் வெற்றிலை நட்டான் என்று கூறுவோம். இப்படி ஒன்றின் பெயர் மற்றொன்றிற்கு ஆகி வருவது ஆகு பெயர் எனப்படும். " பொருள் முதல் ஆறோடு அளவை சொல் தானி கருவி காரியம் கருத்தன் ஆதியுள் ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிரிவைத் தொல்முறை உரைப்பன ஆகு பெயரே"  என்கிறது நன்னூல்.  ஆகுபெயர் பதினாறு வகைப்படும். 1.  பொருளாகு பெயர்: ஒரு பொருளின் பெயர் அதனோடு தொடர்புடைய இன்னொரு பொருளுக்கு ஆகி வருதல் பொருளாகுபெயர் எனப்படும். இதனை முதலாகு பெயர் என்றும் கூறுவர். ராணி மல்லிகை சூடினாள். மல்லிகை என்பது வேர்,கொடி,இலை,பூ எல்லாம் சேர்ந்த ஒரு பொருளின் முழுப்பெயர் . அந்த முழுப்பெயர்  சினையாகிய அதாவது ஒரே ஒரு  உறுப்பாகிய  ப...

துணிந்தவனுக்கு துக்கமில்லை

துணிந்தவனுக்குத் துக்கமில்லை  " துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டம் "என்பார்கள். ஒரு காரியத்தில் இறங்கி செயல்பட வேண்டும்  என்ற துணிவு வந்துவிட்டால்  எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் மலைப்பாக இருக்காது. முனைப்போடு  களத்தில் இறங்கி வேலை செய்யும் தைரியம் வரும். இடையில் எந்த சக்தியாலும் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. பறந்தால் கீழே விழுந்துவிடுவோமோ என்ற  அச்சமிருந்தால் எந்தப் பறவையும் கூட்டிலிருந்து வெளிவரவே முடியாது. விழுந்தாலும் பரவாயில்லை என்ற துணிச்சலோடு பறக்க முற்படும்போதுதான் பறவையால் பறக்க முடிகிறது.பறவை தன் இறக்கைமீது உள்ள ஒரே நம்பிக்கையில் துணிந்து பறக்கிறது. ஏதோ ஒரு துணிச்சலில் மரத்தில் ஏறி விடுவோம்.இறங்கும் போது கால் நடுங்கும்.வியர்த்து விறுவிறுத்து அண்ணே கொஞ்சம்  இறக்கி விடுங்களேன்.அக்கா ஒரு கை பிடியுங்களேன் என்று கெஞ்சிக்  கொண்டிருப்போம்.இவ்வளவுதான் நமது துணிவு.  கீழே விழுந்தால் என்ன ?  விழமாட்டோம் என்ற நம்பிக்கையில்தானே  துணிந்து யாருக்கும் தெரியாமல்  மரத்தில் ஏறினோம்.  இறங்கும்போது மட்டும் அக்காவும்...

துர்ச்சனர் கண்ணிற்படாமல் விலகுக

துர்ச்சனர் கண்ணிற்படாமல் விலகுக  தள்ளு.. தள்ளு ....தள்ளு  குரல் எழுப்பியபடி குறும்புக்கார சிறுவன் ஒருவன் ஓடி வந்தான். எந்தப் பக்கம் தள்ளுவது ? எதற்காகத் தள்ள வேண்டும்? இப்படிக் கேள்விகளோடு அந்தச் சிறுவனை நிமிர்ந்து பார்ப்பதற்கு முன்னர் அவன் என்னைக் குப்புறப் தள்ளிவிட்டு ஓடிவிட்டான். எழுந்து முழங்கையைத்  தடவியபடி அந்தச் சிறுவனை முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தேன். "தள்ளி நில்லு ....தள்ளி நில்லு தெருவில் நின்றபடி வாய்ப்பார்த்துக் கொண்டிருந்தால் வருவோர் போவோர் எல்லாம் குப்புற தள்ளிவிட்டுத்தான் போவார்கள்" என்று சொல்லி வாயைப் பொத்தி படி சிரித்தாள் தங்கை. "அப்படியே அடித்தேன் என்றால்...."கையை ஓங்கினேன். கையை மடக்கிப் பிடித்த அண்ணன், " கொம்புள திற்கைந்து குதிரைக்குப் பத்துமுழம் வெம்புகரிக் காயிரந் தான் வேண்டுமே வம்புசெரி துர்ச்சனர் கண்ணிற் படாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி." என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் .கோபப்படுவதை விட்டுவிட்டு யோசி...யோசி நன்றாக யோசி என்றான். யோசித்தேன். அண்ணன் கூறியதில் இருந்த உண்மை புரிந்தது. தாங்கள் அறிந்ததை உணர்ந்ததை  முன்னோர்கள் நறு...

என்றும் கிழியாது என் பாட்டு

என்றும் கிழியாது என் பாட்டு "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு " என்பார்கள். தன் பிள்ளை தனக்கு எவ்வளவு அழகுடையவனோ அதுபோல ஒரு படைப்பாளிக்கு தன் படைப்புகள்  மீது ஒரு அலாதி பிரியம் இருக்கும். எந்த ஒரு படைப்பையும் தரம் பிரித்துப் பார்க்க மனம் வராது. ஒவ்வொரு படைப்பும் ஏதோ ஒரு சூழலில் எழுதப்பட்டதாக இருக்கலாம். அது அது அந்தந்தக் காலத்தில் பேசு பொருளாக இருந்திருக்கும். அல்லது விவாதிக்கப்பட வேண்டிய கருத்தாக இருந்திருக்கும். அதுபோலத்தான் புலவர்களுக்கும் தாங்கள் எழுதும் பாடல்கள் மீது ஒரு கர்வம் உண்டு. எந்தப் பாடலையும் குறைவாக எண்ண இடம் கொடுக்காது. இந்தச் சமூகத்தில்  ஒரு புலவர்க்கு கொடுக்கப்படும் இடம் என்ன ? பொருளுக்காகப் பாடுபவர் . வறியவர். இன்று வறியவர் எந்த நிலையில் மதிக்கப்படுகிறாரோ அந்த நிலைக்குத்தான் புலவர்களைப் பற்றிய மக்கள் மனநிலையும் இருந்துகொண்டிருக்கிறது. நீங்கள் மதியுங்கள் மதியாமல் போங்கள். என் பாடல் மீது எனக்கு கர்வம் உண்டு என்கிறார் ஒரு புலவர்.  சோழ மன்னன் அவையில் ஒருநாள் ஔவை பாடல் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே  ஒரு  துணிவணிகன் வருகிறார். அவர் தான் நெய...

நல்ல நண்பன் யார்

நல்ல நண்பன் யார் நட்பைப் பற்றி பேசாதவர் எவருமிலர். நான்கு வயது ஆகும்போதே நண்பர்கள் வைத்துக் கொள்ளும் காலம் இது. பார்த்ததுமே நட்பு. மழலையர் பள்ளியில்  தொடங்கும் நட்பு. ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது நட்பு. உயர்நிலைப் பள்ளி நட்பு. மேல்நிலைப் பள்ளி நட்பு. கல்லூரி நட்பு. அலுவலக நட்பு. அக்கம்பக்கத்து நட்பு  என்று நட்பு காலத்திற்கு ஏற்ப சூழலுக்கு மாறிக் கொண்டே இருக்கும். தண்ணீர் இல்லாமலும் இருக்கலாம். நட்பில்லாமல் இருக்க முடியாது. காரணம் நமது உள்ளக்கிடக்கைகளை பரிமாறிக்கொள்ள  துக்கங்களைச் சொல்லி மன ஆறுதல்பட மகிழ்ச்சியைக் கொண்டாடி மகிழ என்று எப்போதும் நமக்குத் துணை தேவையாக இருக்கிறது. அந்தத் துணையைத் தேடி மனம் ஆலாய்ப் பறக்கிறது.   எந்தவொரு காரணமும் இல்லாமல் ஏதோ ஒரு நட்பு நம்மோடு தொடர்ந்து கூடவே வருவதைக் காணலாம். அதுதான் உண்மையான நட்பு என்று உள்ளம் சொல்லும். நம் உள்ளம் சொல்வது இருக்கட்டும். பெரியவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் கேட்போம் வாருங்கள். நட்பைப் பற்றி எத்தனையோ பாடல்களில் படித்திருக்கின்றோம். கோப்பெருஞ்சோழன் -பிசிராந்தையார் நட்பு  அதியமான் - ஔவையார் நட்பு கண்ண...

பலவீனத்தைப் பலமாக மாற்றுங்கள்

பலவீனத்தைப் பலமாக மாற்றுங்கள்  "நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்." -  விவேகானந்தர் என்னிடம்  ஒரு பலவீனம் இருக்கிறது.எந்தச் செயலையும் உடனே செய்வதில்லை. நாளை நாளை என்று நாளைக் கடத்திக் கொண்டிருப்பேன். அதனால் எதுவும் அதற்காக குறிக்கப்பட்ட நாட்களுக்குள் செய்து முடிக்க மாட்டேன் அந்தக் குணம் மட்டும் இல்லாதிருந்தால்... நான் என்றோ எங்கோ இருந்திருப்பேன். அதுதான் என் பலவீனம். என்னிடம் மட்டும் பணம் இருந்திருந்தால்... எப்போதோ தொழில் தொடங்கி பெரிய தொழிலதிபர் ஆகியிருப்பேன். இங்கே பணம் தனது பலவீனமாகிப் போனது. நான் மட்டும் நன்றாக படித்திருந்தால்.... நல்ல பதவிக்குப் போயிருப்பேன். வாழ்க்கை நல்லமுறையில் அமைந்திருக்கும். இங்கே பணம் ஒருவரின் பலவீனமாகிப்  போனது. இப்படி ஒவ்வொரு வரும் தன்னிடம் எது இல்லையோ அது தங்களது பலவீனம் என்கின்றனர்.  அதனால்தான் நான் முடங்கிக் கிடக்கிறேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றனர். ஆனால் தன்னிடம் இருப்பது எதுவோ அது...

புதியதோர் உலகம் செய்வோம்

புதியதோர் உலகம் செய்வோம்  "தமிழுக்கு அமுதென்று பேர்_ அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் " என்ற தேன்தமிழ்ப் பாடல் வரிகளைத் தந்து என்நேரமும் காதுகளில் தேனிசையாய் ஒலித்துக் கொண்டிருப்பவர் பாரதிதாசன். உலகில் மாற்றங்கள் நிகழ்வதும் அதை நாம் ஏற்றுக் கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதும் இன்று நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் அல்ல. மாற்றங்களை நோக்கிய பயணம் எல்லா காலங்கிலும் நடைபெற்று வந்திருக்கிறது. அந்தப் பயணம்தான் புதிய படைப்புகளையும் புதுமைகளையும் கொண்ட புதிய சமுதாயத்தைப் படைக்கும். பழைமையிலேயே இருந்து கொண்டால் புதுப்பித்தலைப் பற்றிய சிந்தனையே  இல்லாமல் ஒரு முடக்கம் ஏற்பட்டுவிடும். முடமாகிப் போவோம். எப்போதும் புதியவற்றை அறிய வேண்டும் புதிய சமுதாயத்தைக் காணவேண்டும் என்ற கனவு எல்லோரிடமும் இருக்கும். இருக்க வேண்டும். அதுதான் செயலாக்கத்துக்கு வித்திடுவதாக அமையும். நமது கனவு செயல்வடிவம் பெறும்போது சமூகமும்  சமூக நடைமுறைகளும் புதிப்பிக்கப்பட்ட நிலையில் புதிய பரிணாமத்தை எட்ட வாய்ப்பு ஏற்படும். மாற்றம் தனிமனிதனால் ஏற்பட்டுவிடாது. ஒருங்கிணைந்து செயலாற்றினால் மட்டுமே பு...

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

நந்தவனத்தில் ஓர் ஆண்டி  சித்தர்கள் எப்போதுமே உடம்பு, ஆன்மா, நிலையாமை என்று சிந்தனைக்குரிய கருத்துக்களையே  கூறுவர். வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் போவதுபோல் இருக்கும். வேடிக்கையிலும் ஒரு உள்ளார்ந்த கருத்து இருக்கும். இப்படித்தான்சித்தர் ஒருவர் ஒருநாள் கால்போனபோக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். வழியில் ஒரு சுடுகாடு.அங்கே காணும் காட்சி...அவரை சிந்திக்க வைக்கிறது. இவ்வளவு சிறுவயதில் இப்படிப்பட்ட பரிதாபத்தைத் தேடிக் கொண்டானே என மனம் வருந்துகிறார். என்ன உலகம் இது? நேற்று இருந்தார். இன்று இல்லை. வாழும்வரை ஆடிய ஆட்டம் என்ன ? எனக்கு நிகர் யார் என்று அடித்தக் கொட்டம் என்ன ?  மூச்சுப் போச்சு என்றால் எல்லாம்  அடங்கிப் போச்சு. ஆனால் கிடைத்தற்கரிய பிறவியல்லவா இந்த மானிடப்பிறவி. இந்தப் பிறவியின் அருமையை எத்தனைபேர் உணர்ந்து வாழ்கிறார்கள்.? வரமாக வாங்கி வந்தப் பிறவி. அதன் அருமையை உணராமல் தாறுமாறாக வாழ்ந்து கொடுத்த காலத்திற்கு முன்பாகவே வாழ்க்கையை முடித்துக் கொண்டுவிட்டானே என்று நினைத்து அங்கேயே நின்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்.  இப்படி பொசுக்கென்று போய்ச் சேருவான்  எ...

பணி நிறைவுப் பாராட்டு

Image

வல்லினம் மிகா இடங்கள்

வல்லினம் மிகா இடங்கள்  இரண்டு சொற்கள் சேரும்போது  வருமொழி முதல் எழுத்து வல்லினமாக   இருந்தால் எந்தெந்த இடங்களில் எல்லாம்   வல்லினம் மிகாது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.  க  ,ச  ,ட  ,த  ,  ப  ,  ற ஆறு எழுத்துகளும்   வல்லினம் எனப்படும்.  இவற்றுள்  ட ,  ற ஆகிய இரண்டு எழுத்துகள்  மொழிமுதல் வராது.  மீதமுள்ள க , ச , த , ப ஆகிய நான்கு எழுத்துகளும்  வருமொழி முதல் எழுத்தாக வரும்போது   எந்தெந்த இடங்களில் எல்லாம் மிகாமல்   இயல்பாக வரும் என்பதைக் காண்போம். 1.   உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது. முதலாவது உம்மைத்தொகை என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.  இரண்டு சொற்களின் இடையில் அல்லது  இறுதியில் வர வேண்டிய  'உம் 'என்னும்  இடைச்சொல் மறைந்து நின்று அதன் பொருளை உணர்த்தி வரும் சொற்கள் உம்மைத்தொகை எனப்படும்.   இத்தகைய உம்மைத்தொகை சொற்களில்  வல்லினம் மிகாது. தாய் +  தந்தை  =  தாய்தந்தை (தாயும் தந்தையும்) இரவு  ...

வல்லினம் மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள்  வல்லின எழுத்துகள் க,  ச   ட. ,  த.  ப.   ற.  வல்லின எழுத்துகள்  இரண்டு சொற்கள் சேரும்போது வருமொழி முதலில் வல்லின எழுத்து வந்தால் எந்தெந்த இடங்களில் மிகும் எந்தெந்த இடங்களில் மிகாது   என்பதைப்பற்றி பல்வேறு  ஐயங்கள் ஏற்படுவதுண்டு.  இந்த வல்லின எழுத்துகளில் ட , ற ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிமுதல் வராது. மீதமுள்ள க்  ,ச் ,த் ,  ப் ஆகிய நான்கு வல்லின எழுத்துகளும் வருமொழி முதல் எழுத்தாக அமையும்போது எந்தெந்த இடங்களில் எல்லாம் ஒற்று மிகுந்து வரும் என்பதைப் பற்றி காண்போம்.  க. ,  ச , த  ,ப என்ற எழுத்துகள் அப்படியேவும் வரலாம். அல்லது தமது வருக்க எழுத்துகளோடும் வரலாம். எடுத்துக்காட்டாக  அந்த  +  பள்ளி  =  அந்தப் பள்ளி   என எழுதுகிறோம். இதில் பள்ளி என்பது வருமொழி இதில் முதல் எழுத்து' ப. ' இந்த 'ப' என்பது      ப் + அ  = ப என உயிர்மெய் ஆகிறது. இப்போது 'ப் 'என்ற வல்லினம் கருத்தில் கொள்ளப்படும்.         ...