நோவற்க நொந்தது அறியார்க்கு....
நோவற்க நொந்தது அறியார்க்கு.... "நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து" குறள் : 877 நோவற்க - துன்பத்தைச் சொல்லாதிருப்பீராக நொந்தது - துன்பப்பட்டது,வருந்தியது அறியார்க்கு- தெரியாதவர்க்கு மேவற்க- பொருந்தாதிருப்பீராக மென்மை - வலியின்மை பகைவர்- எதிரிகள் அகத்து- உணரும்படியாக துன்பம் அறியா நண்பர்களிடம் துன்பத்தைப்பற்றிச் சொல்லக்கூடாது. நம் பலவீனத்தைப் பகைவர் உணரும்படி நடந்து கொள்ளக்கூடாது. விளக்கம் : துன்பத்தைப் பற்றி அறியாதவனிடம் நம் துன்பத்தைப் பற்றிப் பேசினால் அவனுக்கு அந்தத் துன்பத்தின் வலியைப் புரிந்து கொள்ள முடியாது. பசியே அறியாதவனிடம் பசியைப் பற்றிப் பேசினால் பசியின் கொடுமையை அவனால் எப்படி புரிந்துகொள்ள முடியும்? பட்டவனுக்குத்தான் தெரியும் நோவும் அதனால் ஏற்படும் மன உளைச்சலும் வலியும். துன்பம் என்பதைச் சரியா...
Comments
Post a Comment