வாங்க பழகலாம்


        வாங்க பழகலாம்


கருவறையிலிருந்து எட்டிப் 
பார்த்த பிஞ்சு குழந்தை
சற்றே உடம்பு  சிலிர்த்துவிட
வாங்க பழகலாம் ....வாங்க பழகலாம்
வரவேற்பு பத்திரம் வாசித்தது
            காற்று 


நடக்க முனைந்த குழந்தை
நடை  தடுமாறி விழ
சற்றும் தயங்காது தாங்கி நின்று
விழுந்து பழகு ...விழுந்து பழகு 
 பயிற்சிக் களம் அமைத்துத் தந்தது
                 நிலம்

 படித்த பாடம் 
 மனதில் பதியாமல்
 மருட்சி கொண்டு விழித்தபோது
 முயன்று பார்  ....முயன்று பார்
 முதுகில் தட்டி எழுப்பியது
            ஆசிரியரின் கரம்!

 கற்ற கல்விக்கு
 உற்ற வேலை கிடைக்காது
 உள்ளம் வெந்து நொந்தபோது
 வென்று வா....வென்று வா 
 விடாது துணை நின்றது
                    அம்மாவின் குரல்!


 சோதனை வந்து
 சோர்ந்து வீழ்ந்தபோது
 தோளோடு தோள் கொடுத்து
 எழும்பி நில்...எழும்பி நில்
 கை கொடுத்துத் தூக்கிவிட்டது
                 நண்பனின் கரம்!

வறுமை வந்து
வாட்டி நின்றபோது
வயிறார உணவழித்து
யாமிருக்கிறோம்....யாமிருக்கிறோம்
உணவூட்டி உயிர் கொடுத்தது
                              அன்புள்ளம்!


எதுவுமே இல்லாதபோது
எட்ட வருவதைக் கண்டு
வெட்டிவிட நினைத்து
வராதே. ....வராதே என்று
மெல்ல கதவடைப்பு நடத்தியது
                           உடன்பிறப்பு!
       
       





              

Comments

  1. தமிழ்ச்சாமி மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நோவற்க நொந்தது அறியார்க்கு....

அம்மா நீ எனக்கு வேண்டும்

பயணங்கள் முடிவதில்லை