உள்ளார் கொல்லோ தோழி
உள்ளார் கொல்லோ தோழி "தோழி..." "சொல்லுங்கள்" "கள்வர் பாலை நிலத்தில் நிறைய இருப்பரோ? "பாலைநிலம் என்றால் கள்வர் பயம் இல்லாமலா இருக்கும்?" "கள்வர் கையில் ஏதும் ஆயுதங்கள் வைத்துத் தாக்குவரோ?" "கள்வர் கையில் ஆயுதமில்லாமலா....? சாணை ஏற்றிய அம்பை கையில் வைத்திருப்பராம்." "சாணை என்றால்..." "கூர்த் தீட்டுதல் என்று பொருள்." "பார்த்திருக்கிறேன் ....பார்த்திருக்கிறேன். அம்பை அப்படி இப்படிப் புரட்டி கூர்த்தீட்டுவதைப் பார்த்திருக்கிறேன்." "செந்தழல் பிழம்பாய் இருக்கும். பார்ப்பதற்குச் செங்கால் பல்லி மாதிரி இருக்கும்." "ஒரு முறை நான் நிஜமாகவே பல்லியோ என்று பயந்தே போய்விட்டேன்." "பார்ப்பதற்கு மட்டும் பல்லிபோல் இருக்காது...." "வேறென்ன மாதிரி இருக்கும் ?" "கள்வர் கையில் வைத்திருக்கும் ஆயுதத்தைக் கூர்த்தீட்டும் ஒலியும் பல்லி ஒலி எழுப்புவது போலவே இருக்கும்." "பல்லி கெவுளி அடிக்கிற மாதிரி இருக்கும் என்று சொல்கிறாயா?" "அது ஒரு மாதிரியான ஒலி." "ஒரு ம...