வாழவிடு
வாழவிடு பட்டாம் பூச்சியைப் பார்க்கும்போது அதற்கு வண்ணம் தீட்டிய ஓவியனைப் பாராட்டாமல் இருக்க முடிவதில்லை. அதாவது படைத்தவனின் கைவண்ணத்தை வியக்காமல் கடந்து போகமுடியாது. வண்ண வண்ண சேலை உடுத்தி பூக்களுக்குப் பூ பறந்து சென்று "உன்னைவிட நான் ஒன்றும் அழகில் குறைச்சல் கிடையாது "என்று முன்னும் பின்னும் பறந்து அழகு காட்டும் . தொடர்ந்து ஓரிடத்திலேயே இருக்காமல் அங்குமிங்கும் சுற்றி ஆனந்த கூத்தாடும். பட்டாம்பூச்சியைக் கண்டால் சிறுவர்களால் சும்மா இருக்க முடியாது. அதைப் பிடிப்பதற்காக அதன் பின்னாலேயே ஓடுவர். பிடிபட்டேனா பார் என்று பட்டாம்பூச்சிகள் பறந்து பறந்து விளையாட்டுக் காட்டும். அதன் பின்னால் சுற்றுதில் இருக்கும் இன்பமே அலாதிதான். ஒருமுறை சிறுவன் ஒருவன் தன் அப்பாவோடு பூங்காவிற்குச் சென்றான். அங்கு வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கின. கூடவே வண்ணத்துப்பூச்சிகளும் போட்டிப்போட்டு அழகு காட்டின.வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டதும் சிறுவனால் சும்மா செல்ல முடியவில்லை. அப்பா கையிலிருந்து கையை உருவி விட்டுவிட்டு வண்ணத்துப் பூச்சிகளை நோக்கி கைகளை நீட்டியபடி ஓடி்னான்.வண்ணத்துப்பூ...