Posts

வேண்டாம் வேண்டாம்

வேண்டாம் வேண்டாம்  வேண்டும்... வேண்டும் நல்ல எண்ணம் இருக்க வேண்டும். செயலில் நேர்மை இருக்க வேண்டும். பேச்சில் இனிமை இருக்க வேண்டும். பழகுவதில் உண்மை இருக்க வேண்டும். இப்படி எல்லாவற்றிலும் வேண்டும்..வேண்டும் என்று நேர்மறையான சொல்லே இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மைச் சுற்றி நடப்பவை யாவும் நன்மையானதாக நடக்கும் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம்.  ஒரு எதிர்மறைச் சொல் வாயிலிருந்து   வந்துவிடக் கூடாது என்று பார்த்துப் பார்த்துப் பேசுவோம். ஆனால் இலங்கியங்கள் இவை எல்லாவற்றிற்கும் நேர்மாறானவை. இனியவை நாற்பது உண்டு என்றால் ஒரு இன்னா நாற்பதும் உண்டு. இனியவை நாற்பதைவிட எந்தவிதத்திலும் குறைபடாத சொல்லாட்சித்திறன் கருத்தாளுமை, இனிமை ஆகியவற்றை இன்னா நாற்பதிலும் காணலாம். தீ என்று சொல்வதால் நாக்கு வெந்துவிடப்போவதில்லை. சர்க்கரை என்று சொல்வதால்  நாக்கு இனித்துவிடப் போதில்லை. எது எப்படியோ சொல்லப்படும் கருத்து உயர்வானதாக இருந்தால் நாம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் அவை வேண்டும் வேண்டும் என்று நம்மோடு என்றும் நடைபயின்று கொண்டிருக்கும்.  வேண்டாம் என்ற சொல்லை வை...

இல்லாதவை

இல்லாதவை யார் யாரிடம் எது எது இல்லை என்று சொல்லிச் அறிந்துகொள்ள ஆவலா? இல்லை என்ற சொல்லை வைத்தே அது இல்லாதவர்கள் யார் யார் என்று தேடியிருக்கிறார் நறுந்தொகை (வெற்றிவேற்கை)ஆசிரியர். வாருங்கள்...அந்த  இல்லை என்ற  சொல்லைத் தூக்கிச் சுமந்துகொண்டு அலைபவர்கள் யார் யார் என்று பார்த்துவிடுவோம்.        1. யானைக் கில்லை தானமுந் தருமமும். யானையின் கை நீண்டிருந்தாலும் அது தானமும் தருமமும் செய்வதில்லை. 2.. பூனைக் கில்லை தவமுந் தயையும்.    பூனை கண்களை மூடி இருப்பதாகவும்  தவம் செய்வதாகவும்  இரக்க குணத்தோடு இருப்பதாகவும் கருதப்படுவதில்லை.       3. ஞானிக் கில்லை  இன்பமுந் துன்பமும்.   ஞானிகள் வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்று எதற்கும் இடமில்லை. 4.. சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும்.     கரையானானது  இவர் செல்வந்தர் இவர் புகழ்மிக்கவர் என்று பார்த்துப்பார்த்து  தன் வேலையை நிகழ்த்துவதில்லை. 5. முதலைக் கில்லை நீத்தும் நிலையும்.  முதலையானது   நீந்தும் நிலையிலுள்ள நீர் நிலை கொள்ளும் அள...

குன்றென நிமிர்ந்து நில்

குன்றென நிமிர்ந்து நில்  மகாகவி பாரதியார் தனது புதிய ஆத்திச்சூடியில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்குப் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் மிக முக்கியமான வரி  "குன்றென நிமிர்ந்து நில்" என்பதாகும்.  அதென்ன குன்றென நிமிர்ந்து நில்  மலையென கம்பீரமாக நிமிர்ந்து நில் என்றுதானே சொல்லியிருக்க வேண்டும். குன்று மலையை விட சிறியதுதானே  அது எப்படி நிமிர்ந்து நிற்கிறது என்று கொள்ள முடியும்? இப்படி பல கேள்விகள் குறுக்கும் நெடுக்கும் ஓட  குன்று ஒன்றை மனக்கண் முன்னர் கொண்டு வந்து நிறுத்திப் பார்த்தேன். மலையடிவாரத்தில் இருக்கும் சிறிய குன்று. ஆண்டுகள் பல ஆகியும் அசரவில்லை. பக்கத்தில் இவ்வளவு பெரிய மலை இருக்கிறது அல்லவா என்று குன்றிப் போகவில்லை. நான் நானாக இருக்கிறேன். எந்த நிலையிலும் என் உறுதி குறையவில்லை. எத்தனை முறையோ மழை வெள்ளம் வந்து முட்டி மோதிப் பார்த்திருக்கிறது. நான் ஏன் அசைந்து கொடுக்க வேண்டும்? இது எனக்கான இடம். புயல் வந்தது புரட்டிப் போடப் பார்த்தது. சின்னச்சின்ன கற்கள் வந்து முட்டி மோதிச் பார்த்தது.  நான் அசரவில்லை. அசைந்து கொடுக்கவில்லை. நழுவவில்லை. ...

ஈரிரவு தூங்காது என் கண்

ஈரிரவு தூங்காது என் கண் இந்த உலகில் தோல்வியைத் தழுவாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றி பெற்றவர்களின் வரலாற்றினைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை புரியும். தோல்வியடைந்து விட்டோமே என்று விரக்தியில் முட்டைக் கட்டிக்கொண்டு முடங்கிக் கிடந்தால் சமூகம் நம்மைத் திரும்பிப் பார்க்காது . காலமும் கண்களை மூடிக்கொண்டு எங்கேயோ ஓடிவிடும். தோல்வியடைந்து விட்டாயா? துடைத்துப் போட்டுவிட்டு மறுபடி ஓடு. மறுபடி தேடு. தேடலும்  ஓயா ஓட்டமும்  நம்மை சிகரத்தில் கொண்டு நிறுத்தி அழகு பார்க்கும். இது எல்லாத் துறைகளிலும் நடக்கும் நடந்து கொண்டிருக்கும் வெற்றிக்கான போராட்டம்தான். இது படைப்பாளிகள் அனைவருமே போராளிகள் தான். போராளிகள் எந்த இடத்திலும் தோற்றுப் போக விரும்புவதில்லை. போராளிகளிடம் மட்டும்தான் அந்தப் பண்பு இருக்கிறதா? தனிமனிதனிடமும் அந்தப் பண்பு உண்டு. யாரும் இன்னொரு மனிதனிடம் தோற்றுப்போக விரும்புவதில்லை. அப்படித் தோற்றுப்போவது தன் தன்மானத்திற்கு இழுக்கு என்று நினைப்பர். அதுவும் தன்னைவிட வயதில் , சமூக நிலையில், பொருளாதாரத்தில் ,அறிவில் குறைந்தவர்களிடம் தோற்றுப் போவதற்கு மனம் எந்த இடத்திலும் இடம் கொடுக...

பதினாறும் பெற்று வாழ்க

பதினாறும் பெற்று வாழ்க "ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழப் பதினாறும் பெற்று  பெரு வாழ்வு வாழ்க!"  திருமண வீடுகளில் மணமக்களை   வாழ்த்த அனைவரும் பயன்படுத்தும்  அழகு கவிதை இது.  எல்லோரும் வாழ்த்துகிறார்கள்.  நாமும் நன்றாக இருக்கிறது என்று   கேட்டுவிட்டு வந்து விடுகிறோம். மறுபடியும் அதே பாட்டு இன்னொரு திருமண வீட்டில். இதுதான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. நமக்கும் மனப்பாடம் ஆகிவிட்டது.  ஆல மரம் தெரியும். விரிந்து பரந்து கிளைகளைக் பரப்பி நிற்கும். அறுகம்புல் தெரியும் அது வெட்ட வெட்ட அறுகிப் போகாது. மறுபடியும்  மறுபடியும்  வளர்ந்து வந்து கொண்டே இருக்கும்.  மூங்கிலில் செய்த புல்லாங்குழலை   சிறுவயதில் பூ...பூ..என்று ஊதிப் பார்த்து   மற்றவர்கள் காதை செவிடாக்கி இருப்போம். மூங்கில்  வளரும் இடத்தில் சுற்றி  குத்தாக நிறைய மூங்கில்கள் வளர்ந்து வரும். இது என்ன பதினாறு? அதுவும் பதினாறும் பெற்று பெரு வாழ்வு  வாழ வேண்டுமாம். ஒற்றைப் பிள்ளையோடு படும்பாடு சொல்லி மாளவில்லை. ...

துரோகம் துரத்தும்

துரோகம் துரத்தும்  விளிந்தாரின் வேறல்லர் மற்ற தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகு வார்" என்பார் வள்ளுவர். ஒருவர் உன்மீது எந்தவித ஐயப்பாடுமின்றி நம்பிக்கை வைத்திருக்கிறார். .அப்படிப்பட்டவர்க்கு ஒரு தீமை செய்பவர் இறந்தவரினும் வேறு அல்லர். அவர் இருந்தும் இல்லாமல் இருப்பவருக்கு ஒப்பானவராகவே கருதப்படுவார். இதுதாங்க நம்பிக்கைத் துரோகம். நம்மை நம்பி இருப்பவர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்தல் கூடாது. துரோகங்களில் பெரிய துரோகம் நம்பிக்கைத் துரோகம் . துரோகமே கடுமையான  மன உளைச்சல் தரக்கூடியது. இதில் பெரிய துரோகம் ஒன்று என்றால்... தாங்க முடியாமல் மனவலியை ஏற்படுத்தும். காலத்துக்கும் வலிக்கும். நினைத்த உடனே கண்ணீர் வழியும். பேச வாய் எழாது. சொல்லும்போது  அப்படியா?... என்று சாதாரணமாக கேட்டுவிட்டு கடந்து போகலாம். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு  வந்தால் தானே தெரியும். துரோகம் நண்பர்கள் இழைத்துவிட்டால்... நாலுநாள் வலிக்கும். துடைத்துப் போட்டுவிட்டு  கடந்து போய்விடலாம். பணியிடங்களில் துரோகிகள் இருக்கலாம்.எத்தனை மணிநேரம் அவர்களோடு இருக்கப்போகிறோம்? கண்டும் காணாமலும் கடந்து போய்விடலாம். அவ...

உம்மைத்தொகையும் எண்ணும்மையும்

உம்மைக் தொகையும் எண்ணும்மையும்  எண்ணும்மை உம்மைக் தொகை இவை இரண்டிற்குமான வேறுபாடு என்ன? இரண்டும் ஒன்றுபோல் தானே இருக்கின்றன. அவற்றை எப்படி கண்டுபிடிப்பது? என்ற குழப்பம் பள்ளிப் பருவத்தில் பலருக்கும்  ஏற்படுதல் உண்டு. அதனால் நாலைந்து எண்ணும்மை சொற்களையும் உம்மைத்தொகையையும் அப்படியே  மனப்பாடம் செய்து வைத்து விட்டுத் தேர்வு எழுதச் செல்வோம். அங்கே நாம் படித்ததை விட்டுவிட்டு வேறு ஒரு சொல் வந்திருக்கும். இப்போது நான் என்ன பதில் எழுதுவது என்ற ஓர் ஐயம் ஏற்பட்டு ஏதாவது ஒன்றை எழுதி வைத்துவிட்டு வந்துவிடுவோம். இதற்கு நீங்களும் நானும் விதிவிலக்கல்ல. சற்று புரிந்து படித்திருந்தால் ஐயம் எழுவதற்கான வாய்ப்பே வந்திருக்காது. தொகை என்றாலே தொக்கி நிற்பது அதாவது மறைந்து நிற்பது என்று பொருள். உம்மைத் தொகை என்றால் உம் என்ற சொல் மறைந்து நிற்கும் சொல்  என்று பொருள். எடுத்துக்காட்டாக தாய்தந்தை தாய்தந்தை - உம்மைத்தொகை. தாயும் தந்தையும் என்று சொல்லும்போது இதில்  உம்  வெளிப்படையாகத் தெரிகிறது. இவ்வாறு உம் வெளிப்படையாக தெரியும்படி எழுதியிருந்தால் அது எண்ணும்மை எனப்படும். தாய்தந்தை - தாய...