Posts

கோபப்படுங்கள்

கோபப்படுங்கள் 'சினம் தவிர் 'என்றுதானே சொல்வார்கள். இது என்ன   கோபப்பட  வேண்டும். "  சும்மாவே  நான் காச் ...மூச் என்று  கத்திவிட்டு கையில் கிடைத்ததை  எல்லாம் தூக்கி வீசுவேன்.   எத்தனை போனை உடைத்திருக்கிறேன் தெரியுமா?"பெருமைப்பட்டுக் கொள்வது   காதுகளில் கேட்கிறது. "இல்லை...இல்லை... நான் எல்லாம் ரொம்ப...ரொம்ப நல்ல பிள்ளை. ரிமோட் கண்ட்ரோலை மட்டும்தான்   தூக்கி வீசுவேன்." இப்படியும் சிலர்   பேசுவது போல் இருக்கிறது. " என்னிடம் இந்த உடைத்தல்...கிடைத்தல்  எல்லாம் கிடையாது.கோபம் வந்தால் பேனாவால் நோட்டுப் புத்தகத்தில்   கிறுக்கோ கிறுக்கென்று கிறுக்கி  தள்ளி விடுவேன்."  இது பள்ளி மாணவர்களின் கிறுக்கலாகத்தான் இருக்கும். மனிதர்களிலும் சிலர் இப்படி இருக்கலாம்.  "நாங்கள் எல்லாம் வேற...வேற...    வேற மாதிரி.  சும்மா நச்சு... நச்சுன்னு   தலையணையில் நாலு குத்து குத்திவிட்டு   அந்த இடத்தில் இருந்து   எஸ்கேப் ஆகி விடுவோமில்ல..."     ...

வள்ளுவர் பார்வையில் காகம்

காகம் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான எண்ணம்  உண்டு.  காகம் என்றால் சிலருக்கு  ஓர் அலட்சியம்.    கருப்பாக இருப்பவர்களை அண்டங்காக்கா   என்று இழிவாகப் பேசுவர்.    கூட்டமாக சாப்பாட்டுக்கு வந்துவிட்டால் போதும்   காக்கா கூட்டம் மாதிரி வந்து   கூடிவிட்டார்கள் என்று  கிண்டலடிப்பர்.   காக்கை கரைத்தால்  விருந்து வரும் என்பது சிலரது  நம்பிக்கை. உண்மையா இல்லையா என்பது விவாதத்துக்குரியது. ஆனால்  சங்க இலக்கிய காலத்திலும்  இப்படியொரு நம்பிக்கை இதற்கான ஆதாரம் உள்ளது.  காகத்தைப்  பற்றி யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. எனக்கு காகத்தைப் பற்றி நல்ல எண்ணம்  உண்டு என்கிறார் வள்ளுவர்.         ஒரு அரசன் போருக்குச் சொல்லும்போது கூட அவன் காக்கையைப் பார்த்து கொஞ்சம் கற்றுக்கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் வள்ளுவர்.     அடேங்கப்பா....  அரசனே காகத்திடம் போய் கற்றுக்கொள்ள  வேண்டுமா?     ஏன் கூடாதா?  நல்ல காரியத்தை யாரிடம் கற்றா...

ஆரையடா சொன்னாயடா

ஆரையடா சொன்னாயடா  இரண்டு பெரிய ஆளுமைகளுக்குள் எப்போதும் போட்டி இருந்து கொண்டே இருக்கும்.      நீயா நானா...  என்ற போட்டி வரும்போது   உரசல்  ஏற்படுகிறது. அண்ணன் தங்கைகளுக்குள் போட்டி. பள்ளியில் சக மாணவர்களுக்குள் போட்டி.  பக்கத்து வீட்டுக்காரரோடு போட்டி. அண்டை மாநிலத்தோடு போட்டி. அண்டை நாட்டோடு போட்டி.  இப்படிப் போட்டி நிறைந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். போட்டி இருக்கலாம். தப்பே இல்லை. போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.  அப்போதுதான் அது பகையாக மாறாது.  மாறவும் கூடாது. இப்போது இரு பெரும்  புலவர்களுக்கிடையே நடைபெற்ற  போட்டியைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆரோக்கியமான போட்டியா இல்லையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன். கம்பர் சோழ மன்னனின் ஆஸ்தான கவி. கம்பர் வாயால் தன்னைப் புகழ்ந்து  பாடிக் கேட்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. இதேபோன்ற ஆசை சிலம்பி என்ற ஒரு பெண்ணுக்கும்  ஏற்பட்டுவிட்டது. அதற்கான வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந...

மனிதநேயம் பேணுவோம்

பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் " என்றார் வள்ளுவர். மனித நேயமிக்க மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் அழிந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் உயிரோட்டமாக இருந்து இயக்கிக் கொண்டிருப்பது மனிதநேயம். மனிதம் இல்லா மனிதன் மனிதனே அல்ல...  அவன்  மனிதனாகவே கருதப்படமாட்டான். மாக்கள் என்ற வரிசையில் வைத்து எண்ணப்படுவான்...இல்லை..இல்லை... விலங்குகள்கூட பல நேரங்களில்  தம் இனத்துக்காகப் போராடி  தங்களுக்கு மனிதநேயம் இருக்கிறது என மெய்பிக்கப் போராடும் காட்சிகளைக் நாம்  கண்டிருக்கிறோம். அதுவும் இல்லாத மனிதர்களை என்னவென்பது? மனித நேயம் என்றால் என்ன என்று கேட்டால் சக மனிதர்கள்மீது இரக்கம் காட்டுவது...அதாவது உயிர்கள்மீது கருணை காட்டுவது...என்பது எல்லோரும் சொல்லும் செய்திதான். அந்தக் கருணையும் இரக்கமும் உள்ளதால்தான் அன்னை தெரசாவையும் அப்துல் கலாமையும் காந்தியடிகளையும் மனிதநேயம் மிக்க மாமனிதர்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். விரல்விட்டு எண்ணும்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித நேய மாந்தர்கள் நடமாடிக் கொண்ட...

மெய்யுடை ஒருவன்

மெய்யுடை ஒருவன்  ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மை என்று நம்பி விடுகிறோம். மாறுபட்ட மனிதர்கள். பொய்யும் புரட்டும் பேசும் மனிதர்கள் உள்ள உலகம். நாவன்மை இருந்தால் போதும். பொய்யையும் உண்மை என்று நம்ப வைத்துவிடலாம். வழக்காளுநர்களுக்கு சொல்வன்மை வேண்டும். அவர் எந்தச் பொய்யையும் உண்மை என்று நம்ப வைத்துவிடுவார். எந்த உண்மையையும் பொய்யாக்கி விடுவார். இது அவர்கள் தொழில். இதையும் கூட ஒரு புலவர் பாடலாகப் பாடியிருக்கிறார்.  பாடல் இதோ உங்களுக்காக.... "பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் மெய் போலும்மே மெய் போலும்மே" அதாவது சொல் வன்மையுடைய ஒருவன் சொல்லும் பொய்யும் மெய் போலவே தோன்றும். அனைவரும் அதுதான் உண்மை என்று நம்பும்படியாகவே இருக்கும். ஆமாம் பொய்யை மெய்யென்று நம்ப வைத்துவிட்டான். அப்படியானால் உண்மையின் நிலைமை எப்படி இருக்கும் ? என்ன ஆகும்? என்ன ஆகப்போகிறது? இதோ இப்படித்தான் ஆகப்போகிறது. என்று அதற்கும் அவரே பதில் தந்துவிட்டார். " மெய்யுடை ஒருவன் சொல்ல மாட்டாமையால் பொய் போலும்மே பொய் போலும்மே" ஒருவனிடம் உண்மை இருக்கிறது. அதை எப்படி மெய்ப்பது? எப்படிப் பேசிப் புரிய...

எவையெவை கெடும்

எவையெவை கெடும் வாழ்வதற்குத்தான் வழி தேட வேண்டும். கேடு தானாக  வாசலில் வந்து நிற்கும். வாழ வைக்க ஆளில்லை  தாழ வைக்க ஆட்கள் தானாக வரிசையில் வந்து நிற்பர். கெடுவதும் உண்டு. கெடுக்கப்படுவதும் உண்டு. கெடுதல் எந்தெந்த வழிகளிலாமோ  யார் யார் யாருக்கெல்லாமோ வரும். கேடு எந்த வழியில்  எந்த வடிவில் வரும் என்ற கேள்வி ஔவை முன்னர் வைக்கப்பட்டது அடேயப்பா கெடுவதற்கு இவ்வளவு விஷயங்களா என்று நாம் அசரும் படியாக அடுக்கித் தந்துவிட்டார் ஔவை. வாருங்கள் என்னென்ன கெடும் என்று பார்த்துவிடுவோம். (1) பாராத பயிரும் கெடும். (2) பாசத்தினால் பிள்ளை கெடும். (3) கேளாத கடனும் கெடும். (4) கேட்கும்போது உறவு கெடும். (5) தேடாத செல்வம் கெடும். (6) தெகிட்டினால் விருந்து கெடும். . (7) ஓதாத கல்வி கெடும். (8) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். (9) சேராத உறவும் கெடும். (10) சிற்றின்பன் பெயரும் கெடும். (11) நாடாத நட்பும் கெடும். (12) நயமில்லா சொல்லும் கெடும். (13) கண்டிக்காத பிள்ளை கெடும். (14) கடன்பட்டால் வாழ்வு கெடும். (15) பிரிவால் இன்பம் கெடும். (16) பணத்தால் அமைதி கெடும். (17) சினமிகுந்தால் அறமும் கெடும்.   ...

நல்லை அல்லை

நல்லை அல்லை நிலவைப் பார்த்துப் பாடாத புலவர்கள் இல்லை. நிலவின்மீது காதல் கொள்ளாத கண்கள் இல்லை. காதலர்கள் கண்களில் முதலில் தெரிவது நிலலென்னும் அழகு தேவதை தான். அதனை மூடி மறைத்து  ,வெட்கப்பட வைத்து, எட்டிப்பார்க்க வைத்து , முன்னூற்று அறுபது பாகையிலும் நின்று பார்த்துப் பார்த்து கவிதை எழுதியதை வாசித்திருக்கிறோம் . நாமும் அந்த அழகு தேவதையைப்பற்றிய வரிகளை வாசித்து வாசித்து இலக்கிய இன்பத்தில் திளைத்திருக்கிறோம். நிலவு சுடுகிறது என்பார்கள். மகிழ்ந்திருக்கிறோம். நிலவு கண்ணாமூச்சி விளையாட்டு காட்டுகிறது என்பார்கள். நாமும் கூடவே ஒளிந்து விளையாடியிருப்போம். ஆனால் நீ நல்லவளே கிடையாது என்று சொல்லியிருக்கிறீர்களா? யாருங்க நிலவைப் பார்த்து நல்லவள் இல்லை என்று சொல்லுவார்? இங்கு ஒரு பெண்ணே நீ நல்லவள் இல்லை என்கிறாள். ஒருவேளை பொறாமையாக இருக்குமோ? பெண்ணுக்குப் பெண் எதிரியாகி விட்டாளோ? ஏன் அப்படிச் சொன்னாள்? எதற்காக நிலவு அவளுக்கு நல்லவள் இல்லாதவள் ஆகிவிட்டாள். அவளிடமே கேட்டுவிடுவோம் வாருங்கள். "கருங்கால் வேங்கை வீயுகு துருகல் இரும்புலிக் குருளையிற் தோன்றுங் காட்டிடை எல்லி வருநர் குளவிற்கு நல்லை யல்லை...