Posts

அடியினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது

அடியினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது  நல்லவரையும் தீயவரையும் கொண்டதுதான் உலகு. நல்லவர் யார் என்பதற்கு நாம் ஓர் அளவுகோல் வைத்திருப்போம்.  தீயவர் யார் என்பதற்கும் ஓர் அளவுகோல் உண்டு. நாம் நல்லவர் என்று முடிவுசெய்து வைத்திருந்த ஒருவர் திடீரென்று தீயவராக மாறிவிடுகிறார். தீயவர் பல நாட்களாக நல்லவராக நம் கண்களுக்குத் தெரிந்திருக்கிறார். இதுதான் உண்மை. இது என்ன? இது நம் பார்வையில் ஏற்பட்ட கோளாறா? அல்லது உண்மையிலேயே அப்படித்தான் நிகழ்ந்துள்ளதா? நம்பமுடியவில்லை....வில்லை...வில்லை... அவரா இவர்? அவரா இப்படி மாறிப் போனார். சொல்லிச் சொல்லிப் புலம்புகிறோம். நல்லவர் திடீரென்று இப்படி கெட்டவராக மாறமுடியுமா? யாரிடம் போய் கேட்டு என் ஐயத்தைத் தீர்த்துக் கொள்வது?  அங்கேயும் இங்கேயும் தேடி கடைசியில்  கண்ணில் பட்டது அதிவீரராம பாண்டியன் எழுதிய  வெற்றி வேற்கை.   புரட்டினேன். நல்லவர் எப்படி கெட்டவர் ஆவார்.? ஒருநாளும் அது சாத்தியமில்லை என்று உச்சந்தலையில் ஓங்கியடித்துச் சொல்லித் தந்தார் அதிவீரராம பாண்டியன். ஆமா இல்லையா...! இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கிறதே....அப்படியான...

நல்லார் ஒருவர்க்கு செய்த உபகாரம்

நல்லார் ஒருவர்க்கு செய்த உபகாரம்  நேற்று செய்த உதவியை இன்றே மறந்துவிட்டு நீ யாரோ?நான் யாரோ ? என்று கண்டும் காணாமலும் சென்று கொண்டிருக்கும் மனிதர்கள் வாழும் உலகம் இது. என்ன பெரிய உதவி .? நீ உதவி செய்ததற்கு நானும்தான் பதிலுக்கு உதவி செய்துவிட்டேன் என்று சரிக்குச் சரியாக உதவிக்குக் கணக்கு வழக்கு எழுதி கணக்கு முடிப்போர்   உண்டு.   உதவியின் அளவு கணக்கு வழக்குகளுக்குள் அடங்குவதல்ல என்பதைப் புரிந்தோர் ஒரு சிலரே. உதவி என்பது யாருக்கும் செய்தோம்? எந்த இடத்தில் செய்தோம்? எப்போது செய்தோம்? என்பதில்தான் அதன் மதிப்பும் மரியாதையும் அடங்கியிருக்கிறது. இதைத்தான் வள்ளுவரும், உதவி வரைத்தன்று உதவி உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைந்து  என்பார். தரமில்லாதவர்களுக்கு உதவியைப் பற்றிய மரியாதை  தெரியாதவர்களுக்கு உதவி செய்வது நமது மரியாதையை இழந்து  போவதற்கு ஒப்பானது. இவை எல்லாம் காலம் கற்பிக்கும் பாடங்கள். இந்த அறிவு எத்தனைபேர்  எத்தனை இடங்களில் சொல்லித் தந்தாலும்  காலங்கடந்து பட்டு பட்டு  அதன் பின்னர் தான் புத்தி வரும். கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதுபோ...

சாந்துணையும் தீயனவே செய்யினும்

சாந்துணையும் தீயனவே செய்திடினும்  "பல்லுக்கும் பல் கண்ணுக்குத் கண்" இப்படி பதிலுக்குப் பதிலடி கொடுத்திட வேண்டும். அல்லது சிலருக்குத் தூக்கமே வராது. இது தீயவர் உள்ளம். "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று" என்பார் வள்ளுவர். நிழலானது தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே  தங்கி இருத்தலைப்போல தீயச்செயல்கள் செய்பவர்க்கு கேடு விடாமல் கூடவே வந்து நிற்கும்   என்கிறார் வள்ளுவர். எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டு. அதுபோல தீமைக்குத் தீமை  என்பதும் எல்லா இடங்களிலும்  எல்லா நபர்களிடமும் இருக்காது. நல்லோர் உள்ளம் நல்லவற்றையே சிந்திக்கும். பொறுத்துப் போதல், விட்டுக்கொடுத்துப் போதல் இப்படி ஆளாளுக்கு நற்பண்புகளோடு நடமாடும் நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மரத்தை வெட்டும் மனிதனுக்கும் நிழல் தரும் பண்பு  மரத்திற்கு உண்டு. நீ என்னை வெட்டிவிட்டாய். அதனால் நான் உனக்கு ஏன் நிழல் தர வேண்டும்? என்று  மரம் வீம்பு பிடிப்பதில்லை. என் கடைசி கிளை இருக்கும் வரை நிழல் தந்துகொண்டுதான் இருப்பேன் என்று பிடிவாதமாக நிழல் தந்துகொண்டே இருக்கும். அதுபோல ...

நினைவோவியம்

நினைவோவியம்  நேற்றைய கூடுகை நிகழ்வுகள் நெஞ்சுக்குள் பேரிகை இசைக்க செல்வமணியின் உபசரிப்பும் கரிசனமும் ஆறுமணி நேரப்  பயணத்திற்கு அருமருந்திட்டு ஆறுதல் படுத்தி நிற்க பழைய நினைவுகள்  மனதைத் தாலாட்ட  இன்றைய நிகழ்வுகள்  உரையாடலுக்குள் வந்து  உவகையூட்ட கருத்துப் பரிமாற்றங்கள்  களிப்பூட்ட கவின்மிகு காட்சிகள் நினைவலைகளாக வந்து நெஞ்சைத் தாலாட்ட கவிக்குயில்களான ஆசிரியைகள்  சந்திரிகா  ஞானம் செல்லப்பா ஸ்டெல்லா  தாமரைச்செல்வி சுகந்தி இணைந்து நடத்திய  இன்னிசை  கேட்டு ஆசிரியர் ஸ்டீபன் கைகள் தானாய்த் தாளமிட விடுகதையா வாழ்க்கை என்று விடுகதைக்கு சுகந்தி  விடை கேட்டு நிற்க அசத்தலான  விடை கூறி அனைவரும்  கைத்தட்டலை மொத்தமாய் அள்ள அங்கங்கே தொட்டுச் சென்ற பேச்சுக்கு தடாயிட்டு உணவின் அணிவகுப்பு வந்து இடைமறிக்க அருசுவை உணவின் மணம் நாசியைத் துளைக்க கை தானாய்ச் சென்று  வட்டிலிலுக்கும்  வாய்க்குமிடையே சண்டை மூட்டிவிட  வயிறு போதுமென மறுக்க போதாதென  இனிப்பு  வந்து  இடையூறு செய்ய நாக்கு தாவா செய்து நான்கைந்தை அள்ளி...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்  கவினணி புனைந்த எழில்மிகு வனத்தாய் கலையணி கொண்ட கரிசலில் பிறந்தாய்ந கலையணி  எங்கும் இயற்கை மருந்தாய் எழிலணி ஓரணிதிரள் சின்னமனூரில் அவதரித்தாய்! அறப்பாணியாளர் அப்பா சண்முகவேலோடு அன்பாய்  களப்பணி ஆற்றிட விஜயா உன் தாய்  இல்லறப்பணி இன்பமாய் பத்மாவதி பிறந்தாய் நல்லறப்பணி சாட்சியாயினர் தம்பதியர் அருமருந்தாய்! முதற்பணிக்காய் உத்தர்பாரதியில் சீரடி பதித்தாய் கலைப்பணிக்கு சோமைய்யாவைத் தேர்வு செய்தாய் பெரும்பணிக்காய் கலினாவில் முதுகலை பயின்றாய் ஆசிரியப்பட்டயப் படிப்பிலிலும் முதல்நிலையில் நின்றாய் நற்பணி ஆற்றிட பிரைட் பள்ளிக்குள் நுழைந்தாய் உலகணி ஆங்கிலத்தை உவப்போடு கற்றிட வைத்தாய். கவியணி புனைந்து கற்பிக்கும் பாங்கினை வகுத்தாய் என்பணி தனிப்பாணி எனத் தனித்துவம் படைத்தாய்! ஊரணி உவந்திட ஓயாது உழைத்தாய் தேரணி மகிழ்வாய் பணி உயர்வு அடைந்தாய் தாரணியாய்த் தக்கதோர் ஆசிரிய கூட்டணி அமைத்தாய் முற்போக்குக் கூட்டணியாய்ப் பள்ளி் பெயர் துலங்க வைத்தாய்!  வேற்றணி இவரென எவரையும் வெறுக்காய் குன்றிமணியளவும் குறையா குணமே உனதாய் நவமணியாம் நல்மணியாய்த் திகழ்ந்தாய் தவமணி...

காலத்தினால் செய்த நன்றி

காலத்தினால் செய்த நன்றி...... (குறளும் குயிலும் ) கோடைகாலம்.பல நாட்களாக மழை காணா பூமி. வறட்சியின் பிடியில்  மாட்டிக்கொண்டு விலங்குகள் எல்லாம் பரிதவித்தன.  நீருக்காக விலங்குகள் அங்குமிங்கும் ஓடின.  தாகம் யாரைத்தான் விட்டு வைத்தது.....?        நீர் நிலைகளைத் தேடி மான் ஒன்று   காட்டுக்குள் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தது.     காடு முழுவதும் தேடியது...தேடியது.  தேடிக்கொண்டே இருந்தது. கால்கள் ஓய்ந்து போனதுதான் மிச்சம். ஒரு சொட்டு நீரையும்  கண்ணால் பார்க்க முடியவில்லை.      கால்  கடுத்தது. கடுகளவு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. இனி தன்னால் ஒரு அடி கூட   எடுத்து வைக்க முடியாது என்ற நிலை.  களைப்பில் அப்படியே கீழே விழுந்தது மான். நாக்கு வறண்டு போயிற்று.   எழும்பி நடக்கவும் உடலில் தெம்பில்லை.  நட்ட நடுவெயில்.   நிலம்  அனலாக கனன்று கொண்டிருந்தது.   வெப்பம் தாங்க முடியாத மான்    மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பரிதாபமாக கிடந்தது. ...

கவி மாறி மண்மாரியான கதை

கவி மாறி மண்மாரியான கதை இருபெரும் ஆளுமைகளுக்குள் எப்போதும் நீயா? நானா? என்ற போட்டி இருக்கும். படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடெல்லாம் இதற்குக் கிடையாது. படித்தவர்கள் தானே பண்பாக  நடந்து கொள்வார்கள் என்று எல்லோரையும் நினைத்துவிட முடியாது. அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் நாம் ஏமாந்து தான் போவோம். பதவிக்காகப் போட்டி. புகழுக்காகப் போட்டி. முதல் மரியாதைக்கான போட்டி. உரிமைக்கான போட்டி.  முதல் பரிசுக்கான  போட்டி. எங்கும் போட்டி. எதிலும் போட்டி. இவை எல்லாம் எதற்காக? தான்தான் எல்லாம்.... நான் நானே.....நான் மட்டும்தான் என்று தன் இருப்பை முன்னிலைப்படுத்த உலகம் தன்னை மட்டுமே கொண்டாட வேண்டும் என்ற நான்...எனக்கு  என்ற சுயநலம் அன்றி வேறென்ன  சொல்வது?   போட்டி பொறாமையாக மாறும்போது சில விபரீதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அப்படி எல்லா இடங்களிலும் விபரீதம் மட்டுமே நடைபெறும் என்று  சொல்லிவிட முடியாது. சில நேரங்களில் அவர்களுக்குள் நடக்கும் போட்டி  காண்பவர் கண்களுக்கு  நல்ல விருந்தாக அமைவது உண்டு. கண்களுக்கு மட்டுமல்ல .உங்கள் செவிக்கும் இலக்கிய பசிக்கும் நல்ல விரு...