Posts

தை பிறந்தால் வழிப் பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும்  "தை  பிறந்தால் வழி பிறக்கும்.," இது தமிழரின் பண்பாட்டைப் சொல்ல வந்த ஒரு பழமொழி.  ஓர் எதிர்பார்ப்போடு நம்பிக்கையோடு பிறப்பது தை மாதம். தை மாதம் அதுவரை செய்து வந்த உழைப்புக்கான பலனைப் பெறும் மாதம். வீட்டில் நல்லது நடக்கும் மாதம்.  புதிய நல்ல காரியங்கள் நடைபெறும் மாதம். இதுவரை இருந்த தடைகள் நீங்கி இனி நடப்பவை யாவும் நன்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு பிறக்கும் மாதம். மார்கழி மாதத்தில் அறுவடை முடிந்து, தை மாதத்தில் உழவர்களின் கையில் நல்ல வருமானம்  வருவதால் வீட்டில் மகிழ்ச்சி களைகட்டும் . பொருளாதார மந்தநிலை மாறி கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும் மாதமாக இருக்கும். பொருளாதார நிலை உயர்வதால் பூரிப்புடன் நடைபோட வந்த மாதம். மார்கழி மாதக் குளிர் நீங்கிவிடும் . பனிப் பொழிவு  இல்லாத தெளிவான  வானம் காணப்படும். இந்தச் சூழலால்  எதிர்வரும் நாட்கள் எந்தத்  தடையும் இல்லாத நாட்களாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளத்தில் பிறக்கும். தை மாதத்தில் அறுவடை முடிந்து புதுநெல் வந்துவிடுகிறது.  புது அரிசியில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்குப...

தை மகளே வா

Image
தை மகளே வா எழுந்தது கதிரவன் புலர்ந்தது பொழுது மலர்ந்தன கண்கள் தொழுதன கைகள் புதுப்பானை வந்தது புதுப்பால் பெய்து புத்தரிசி இட்டு பொங்கலிட புத்தாடை அணிந்த பூவையவள் வந்துவிட்டாள் குலவையிட்டு வரவேற்க  குடும்பமாய் யாம் வந்தோம் தை மகளே வா ! மையிருட்டு விலக்கி பைய நின்கண் திறந்து வையம் உவப்ப  வாழ்வு வளம்பெற தை மகளே வா! தரணி செழித்திட வளங்களை அள்ளித் தா! .

மாட்டுப் பொங்கல்

Image
மாட்டுப் பொங்கல்  பொங்கல் என்றாலே கரும்பு எப்படி முதன்மை இடம் பிடிக்குமோ அது போன்று பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படும் மாட்டுச் பொங்கலில் ஜல்லிக்கட்டு  முதன்மை இடம் பிடித்துவிடும். ஜல்லிக் கட்டு இல்லாத மாட்டுச் பொங்கலா என்று கேட்கும் அளவிற்கு இன்று ஜல்லிக்கட்டு உலகமெங்கும் பிரபலமாகிவிட்டது. ஜல்லிக்கட்டிற்கு என்றே மாடுகள் பிரத்தியேகமாக பயிற்சி கொடுத்து தயார்படுத்தப்படுகின்றன. இந்த இடத்தில் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. மாட்டுப் பொங்கல் நாளில் காளைமாடுகள் மட்டும்தான் கொண்டாடப்பட வேண்டுமா? மற்ற மாடுகள் என்ன பாவம் செய்தன? அவையும் கொண்டாடப் பட வேண்டியவைதானே! மாடு என்றால் செல்வம். நம் வீட்டிற்கு செல்வம் கொண்டுவர மாடாக உழைத்த மாட்டிற்கு நன்றி சொல்லும் நாள் மாட்டுச் பொங்கல். இதில் காளை மாடு ,பசுமாடு என்ற பாகுபாடு கூடாது. பசுமாடும் பால்தந்து கிராமத்துப் பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாட்டுச் பொங்கல் நாளில் எல்லா மாடுகளுக்கும் கொண்டாடப்படட்டும். ஒரு நாளில் அப்படித்தான் மாட்டுப் பொங்கல் நடைபெற்றது. கிராமத்தில்  பொங்கல் நாளில் அனைத்து மாடுக...

திருவள்ளுவர் நாள்

Image
திருவள்ளுவர் நாள் " கனியிடை ஏறிய சுளையும்_ முற்றல் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் _காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் நனிபசு பொழியும் பாலும்_ தென்னை நல்கிய குளிரிள நீரும் இனியன என்பேன் எனினும் தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்" என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அந்தத்தமிழுக்கு மணிமகுடம் சூட்டி அழகு பார்த்தவர் திருவள்ளுவர். "வான் பொய்த்தாலும் பொய்க்கலாம். வள்ளுவரின் வாய்மொழி பொய்க்காது "என பொய்யாமொழிக்கு மெய்யாய் முன்னுரை எழுதி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அந்தக் கொண்டாட்டம் எந்நாளும் தொடர வேண்டும். எல்லோராலும் அறியப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கோடு தை மாதம் இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாளாகக்  கொண்டாடி வருகிறோம். ஒன்றே முக்கால் அடியில்  வாழ்வியல் உண்மைகளை  நம் உள்ளங்களில் பதிய வைத்தவர்.    அறம் ,பொருள் ,இன்பம் என முப்பாலை முக்கனிச் சுவை கலந்து எக்காலத்திற்கும் உகந்ததாக்கி நம்மைத்  தெம்பூட்டி வளர்த்துக் கொண்டிருப்பவர். "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு " என்று  தமிழ்நாட்டின் அடையாளமே  திருவள்ளுவர்தான் என்று பா...

போகிப் பண்டிகை

போகிப் பண்டிகை  கதை இல்லாமல் பண்டிகைகள் இல்லை. யோகிக்குக் கதை இருக்கும்போது போகிக்குக் கதை இல்லாமல் இருக்குமா என்ன? போகிக்கும் கதை ஒன்று இருக்கிறது. ஒரு கடினமான சூழல் அல்லது உழைப்புக்குப் பிறகு கிடைக்கும் நன்மையைக் கொண்டாடி மகிழ்வது தான் பண்டிகைகள். அந்தவகையில் போகியும் கடினமான காலத்தைக் கடந்து வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியை அனைவருக்கும் தெரிவிக்கும் முகமாகவே கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். பழையவை ஒழிந்தன. தொல்லைகள் தொலைந்தன. ஆணவம் ஒழிந்தது. ஒழிக்கப்பட்டது. இனி நாளும் மகிழ்ச்சி. களிப்பு. பழையதை ஒழிந்தன. புதியவை புகுந்தன. புத்தொளி பிறந்தது. என்ற ஒரு புதுமையான எண்ணத்தோடு போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து பழைய குப்பைகளை எல்லாம் முற்றிலுமாக அகற்றி தூய்மையோடு வருங்காலத்தை எதிர் நோக்கி கொண்டாடப்படும் பண்டிகை  போகிப் பண்டிகை. கதை கதை என்றீர்களே... அந்தக் கதை என்ன என்று சொல்லுங்கள் என்று கேட்பது என்  காதுவரை கேட்கிறது. போகிப் பண்டிகைக் கொண்டாடுவதற்கான  காரணம் பற்றிய புராணக் கதை ஒன்று உள்ளது. நீரின்றமையாது உலகம். நீராதாரம் மழை. மழைக்குக்...

பொங்கல் வாழ்த்து

Image
பொங்கல் வாழ்த்து  வான்மகள் கடைக்கண் திறப்பால் நிலமகள் கொண்ட தணுப்பால் உழவன் செய்த உழைப்பால் கழனி எங்கும் பயிர் வனப்பால்  கதிர்கள் கண்ட மலைப்பால்  தைமகள் வந்தாள் பூரிப்பால் தையல் உள்ளம் உவப்பால் மையல் கொண்ட அன்பால் சுனையாகும் இன்பத் திருப்பால் மனையில்  ஓடும் மகிழ்ச்சிப்பால் சொல்லரும் பொருட் குவிப்பால் நல்லறம் நடக்கட்டும் பேரன்பால் பழையன மறவாப் பண்பால்  பண்பாடு போற்றும் சிறப்பால் தமிழ்ப்பால் கொண்ட விருப்பால் அறத்துப்பால் மீதுள்ள ஈர்ப்பால் பொருட்பால் கிடைத்த மலைப்பால் இன்பத்துப்பால் நடக்கும் உள்ளன்பால் சுவை தரு செங்கரும்பால்  வளை கதிர்  நிறைப்பால் ஆதவன் முகம் சிவப்பால்  ஆவின்பால் நுரைப்பால் புத்தரிசி சுவை  மிகுப்பால் பொங்கும் பொங்கல் புதுப்பானைப்பால்  இணைப்பால் கரம் குவிப்பால் இல்லம் எங்கும் தீம்பால் பொங்கலோ பொங்கல் இசைப்பால் புவியெங்கும் இனிக்கட்டும் தமிழ்ப்பால்! அனைவருக்கும் இனிய  பொங்கல் நல்வாழ்த்துகள்!

நாடா கொன்றோ அவலா கொன்றோ

Image
நாடா கொன்றோ அவலா கொன்றோ  காலையில் கைபேசியைத் திறந்ததும் கண்கள் முன்னர் வந்து கவின்மிகு காட்சிகளை விரிய வைத்து வாழ்த்துச் செய்திகள் வரிசை கட்டி நிற்கும். இந்த வாழ்த்துகள் யாருக்காக? எதற்காக? நட்புக்காக இருக்கலாம். உறவுக்காக இருக்கலாம். வியாபார தொடர்புகள் அறுந்து போகாமல் இருப்பதற்காக இருக்கலாம். ஏதோ ஒரு ஆதாயம் கருதிதான் இந்த  வாழ்த்துகள் இருக்கும். இவர்களால் மட்டும் தான் நாம் பலன் பெறுகிறோமா? உயிருள்ளவை மூலமாகவும்  உயிரற்றவை மூலமாகவும் என்று எத்தனையோ வழிகளில் பயன் பெற்றுக்கொண்டிருப்பதால்தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த உயிர் பெற்றோர் கொடுத்தது. அதன் பின்னர் நாம் உயிர் வாழத் தேவையான அத்தனைப் பொருட்களையும் தருவது நிலமும் அதில் உயிர்வாழும்  உயிர்களும் அல்லவா? அப்படியானால் நாம் முதன்முதலாக வாழ்த்துப் சொல்ல வேண்டியது நிலத்திற்குத்தானே. ஆம் .நிலத்தை வாழ்த்த வேண்டும். நிலமும் அதில் வாழும் உயிர்களும்  இல்லாமல் நம் வாழ்வு இல்லை. இங்கே ஒருவர் நிலத்திற்கு வாழ்த்துப் சொல்லி ஒரு பாடல் பாடியிருக்கிறார். வெறுமனே அவர் நிலத்திற்கு மட்டும் வாழ்த்துச் சொல்...