Posts

பிறந்தநாள் வாழ்த்து

Image

செந்தமிழே உயிரே நறுந்தேனே

செந்தமிழே உயிரே நறுந்தேனே  தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து "நீராருங்கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள். அதேபோன்று பாண்டிச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து எது என்பது தெரியுமா? பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே...." என்ற வாழ்த்துப் பாடல்தான் பாண்டிச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக உள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் தமது  தமிழ் அமுது பாடல் தொகுதி  இரண்டாம் பகுதி முதல் பாடலாக இதனை எழுதியிருந்தார். இந்தப் பாடல்தான் பாண்டிச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக பாண்டிச்சேரி அரசால் தேர்வு  செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. பாண்டிச்சேரி அரசின் எல்லா அரசு விழாக்களும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியே தொடங்கப்படும்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்  இசையமைப்பாளர் எல். கிருஷ்ணன் அவர்கள். தமிழைத் தாயாக உருவகப்படுத்தி பாரதிதாசன் பாடிய   தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இதோ உங்களுக்காக: வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே மாண்புகள் நீயே...

ஈ என இரத்தல் இழிந்தன்று

ஈ என இரத்தல் இழிந்தன்று  புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். எல்லாப் புலவர்களுக்கும் பாடியதுமே பரிசில் கிடைத்து விடுமா என்ன? சில மன்னர்களுக்குக் கொடுக்க மனமில்லாதிருக்கலாம். இன்னும் சில மன்னர்கள் புலவரை உடனே வழியனுப்பிவிட மனமில்லாது உடன் வைத்துக்கொள்ள நினைப்பர். அதனால் பரிசில் கொடுக்க தாமதப்படுத்துவர். அப்படிப்பட்ட சூழல்களில் ஒரு புலவர் என்ன செய்ய முடியும்? வெறுங்கையோடு சென்றுவிட முடியுமா? மனனர்களை நம்பிதானே புலவர்கள் வாழ்க்கை  இருக்கிறது.                                         இப்படித்தான்  ஒருமுறை கழைதின் யானையார் என்ற புலவர் அரசன் வல்வில் ஓரியிடம் பரிசில் பெறச் செல்கிறார் . பாடல் பாடுகிறார். பொருள கிடைக்கும் என்று கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார். வள்ளலாகிய ஓரி ஏனோ உடனே பரிசில் வழங்கிவிடவில்லை. என்ன...ஓரி ஒரு வள்ளல் என்று அறிந்திருக்கிறேன். ...

நிலத்தினும் பெரிதே

நிலத்தினும் பெரிதே தலைவன் ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கின்றான்  . அவளுக்கும் அவன் மீது காதல். களவில் காதல் தொடர்கிறது. உன்னைக் கனவிலும் பிரியேன். பிரிந்தால் உயிர் வளியேற்ற என்று காதல்மொழிபேச காலம் கடக்கிறது. திருமணம் குறித்து எந்தவொரு பேச்சுமில்லை.இப்படியே எவ்வளவு நாட்கள்தான் காதலித்து கொண்டிருப்பது? இப்படியே இருவரும் காதல் செய்து கொண்டிருந்தால் இதற்கு முடிவுதான் என்ன? திருமணம் செய்து கொள்ள வேண்டாமா? கவலைப்படுகிறாள் தோழி ஒருநாள் தலைவியைப் பார்க்க வந்திருக்கிறான் தலைவன். பிறர் அறியாதவாறு மறைவாக நின்று கொண்டிருக்கிறான்.  தலைவன் மறைந்து நிற்பதைத் தோழி பார்த்து விடுகிறாள். இதுதான் நல்ல வாய்ப்பு.  தலைவனிடம் கேட்டுவிட வேண்டியதுதான். ஆனால் இது சாத்தியமாகுமா? நேரடியாக எப்படி கேட்பது? தலைவன் தவறாகப் புரிந்துகொண்டால் என்ன செய்வது? ஆனாலும் தலைவன் கேட்கும்படியாக தலைவனைப்  பழித்துப்  பேசுகிறாள் தோழி! தன் அன்பிற்குரியவனை இன்னொருத்தி தவறாகப் பேசுவதா? பொறுத்துக் கொள்வாளா தலைவி பொங்கி எழுகிறாள். தலைவனுக்கும் எனக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது தெரியுமா ? சொல்கிறேன் கேள் என்று தலைவன...

இன்னா செய்தாரை ஒறுத்தல்

இன்னா செய்தாரை ஒறுத்தல்  (குறளும் குயிலும்)  கரையோடு மோதி விளையாடியது கடலலை.         சிறுவர் சிறுவீடு கட்டி மகிழ்வதைப் பொறுத்துக்  கொள்ள முடியாமல் கலைத்துப் போட்டு   கலகலவென சிரித்துவிட்டு திரும்ப ஓடியது.      கும்மிருட்டு நேரம்.   அலையோடு அலையாக கடற்கரைக்கு    வந்தது ஒரு ஆமை .      சுற்றும் முற்றும் பார்த்தது.   கண்களுக்கு எட்டிய தூரம்வரை   எதுவே தென்படவில்லை.      மெதுவாக குழி   தோண்ட ஆரம்பித்தது.போதுமான ஆழம்   தோண்டியதும் முட்டைகளை இட்டு மூட   ஆரம்பித்தது.      பின்னர் அதற்கு மேல் நின்று நாட்டியம்    ஆடுவதுபோல் ஆடி ...மணலை மேடு இல்லாமல் சமன் செய்தது.      ஒன்றுக்கு மூன்றுமுறை பாதுகாப்பை   உறுதி செய்த பின்னர் விறுவிறுவென்று   கடலுக்கு இறங்கி  மறைந்து போனது.       நாளுக்கு ஒருமுறை தான் ...

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்  முயற்சி திருவினை ஆக்கும் முயற்சியின்மை  இன்மை புகுத்தி விடும். "  முயற்சி செய்து உழைத்துக் கொண்டே   இருந்தால்  செல்வம் பெருகும்.   முயற்சி ஒன்றுமே செய்யாமல்  சோம்பேறியாக இருந்தால் வறுமை   வாசலில் வந்து நிற்கும் என்கிறார் வள்ளுவர்.    வெற்றி சாதாரணமாக யாருக்கும்   கிடைத்து  விடுவதில்லை. விடாமுயற்சி இருந்தால் மட்டுமே  வெற்றி கிட்டும்.   வெற்றிக்காக நாம் பல படிகளைக்  கடந்துவர வேண்டியிருக்கும்.  அதில் ஏறி மேலே வரும்முன்  ஐயோ! அம்மா!  ...மூச்சு வாங்கும்.  அதற்காக பயணத்தை இடையில்  விட்டுவிடக் கூடாது.    வெற்றிக்காக நாம் வகுத்து வைத்துள்ள  தவறுதலான பாடத்திட்டம் நம்மை   பலமுறை சறுக்கி விழச் செய்யும்.  எங்கே சறுக்கல் இருந்தது என   ஆய்ந்து அதைக் களைந்துவிட்டால்  பயணம் ஓரளவு சுமுகமாக இருக்கும்.     முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.  தொடங்கும்போது இதனை நம்மால்  செய்துவிட முடியுமா என்று மலை...

பிச்சைக்கு மூத்தகுடி

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்" "இவ்வுலகில் சிலருக்கு இரந்து உயிர்வாழவேண்டிய நிலையை இறைவன் ஏற்படுத்தியிருந்தால், அவனும் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக "என்று கோபமாக எழுதியிருப்பார் வள்ளுவர். பிச்சை எடுத்து வாழ்தல் இழிவானது. இதுதான் நம் அனைவரின் கருத்தாக இருக்கும். ஆனால் பிழைப்புக்கு ஏதும் வழியில்லை என்றால்  என்ன செய்ய்ய முடியும்? உழைக்கக் திறன் இருந்தும் இரந்து வாழ்வது வெறுக்கத்தக்கது. தவறான செயல். ஆனால் உழைக்க இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள்  என்ன செய்ய முடியும்? இரந்துதான் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படியொரு நிலைக்கு அவர்களைத் தள்ளியது யார்? படைத்தவனை அன்றி வேறு யாரை குறை சொல்ல முடியும்.? வெறுமனே குறை சொல்லிவிட்டு கடந்து போக வள்ளுவருக்கு மனம் வரவில்லை. ஏன் இப்படிப் படைத்தாய் என்று கேட்கிறார். இவர்கள் இரந்து வாழ்வதற்கு நீதானே காரணம் ...அப்படியானால் அதற்கான தண்டனை உனக்கும் உண்டு. நீயும் அவர்களைப்போல அலைந்து திரிந்து  கெடுவாயாக என்று கோபத்தின் உச்சத்தில் பேசுகிறார் வள்ளுவர். ஆனால் இரப்பவர்கள் வாழ்வு எல்லாம் பர...