ஊர் வாய் மூட உலைமூடி தானில்லையே
ஊர் வாய் மூட உலைமூடி தானில்லையே செய்தியை ஊர் முழுவதும் பரப்ப வேண்டுமா? ஊர்க்குருவிகளாக சிலர் இருப்பர். அவர்களில் ஒருவரிடம் மெதுவாகச் சொல்லிவிட்டால் போதும். அவர் ஊர் முழுவதும் பரப்பி விடுவார். இப்போது செய்தி ஊர் முழுவதும் பரவியாயிற்று. இனி அந்தச் செய்தி வெளியில் செல்லாமல் மறுபடியும் பார்த்துக்கொள்ள முடியுமா என்றால்.... அது எப்படி முடியும்? ஊர் வாயை மூட உலைமூடி உண்டோ என்று கேட்கிறார் ஒருவர். சரியாகத்தானே கேட்டிருக்கிறார். ஊர் வாயை மூட உலை மூடி உண்டோ? காற்றில் கலந்த செய்தி இது. காற்றைத் பிடித்து கைப்பையில் அடைக்க முடியுமா? கூடாதல்லவா ? அது போன்றதுதான் ஒரு செய்தி நம் வாயை விட்டு வெளியில் போய்விட்டால் அந்தச் செய்தி பரவாமல் மறுபடியும் தடுத்திட முடியாது. அது காற்றில் கலந்து, காது காதாகச் சென்று ஓதி ஊரறிய செய்யாமல் ஓயாது. இந்தச் சொலவடை எங்கிருந்து வந்தது? சாதாரணமாக நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களை எடுத்து தம்மைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் கம்பர். கம்பர் தனிப்பாடலில்தான் இப்படியொரு சொலவடை வந்திருக்கிறது. பாடல் உங்களுக்காக தேரையார் செவ்விள நீருண்ணாப் பழி...