Posts

பலாப்பழத்தை எப்படி வாங்க வேண்டும்

பலாப்பழத்தை எப்படி வாங்க வேண்டும்  மா , பலா , வாழை முக்கனிகள்  என்று சொல்லும்போதே சாப்பிட வேண்டும் என்ற ஆவல் மேலிடும்.  மூன்றுமே அனைவருக்கும் பிடித்தமான பழங்கள் தான். இதில் மாற்றுக் கருத்து இல்லை.  இதில் பலாப்பழம் என்றாலே நாவில் தேனூறும். பலாப்பழம் தொலைவில் இருக்கும்போதே நான் இங்கு இருக்கிறேன் என்று நமக்கு மணத்தைத் தூதாக அனுப்பி  நம்மை அழைக்கும்.  கால்கள் அந்த இடத்தைவிட்டு  நகர மறுக்கும். கண்கள் எங்கே பலாப்பழம்? எங்கே பலாப்பழம் ? என்று ஆலாய்ப் பறக்கும். இதுதான் பலாப் பழத்துக்கான சிறப்பு. இப்படிப்பட்ட பலாப்பழத்தை என்ன விலை கொடுத்தேனும் வாங்கி வந்து சாப்பிட ஆசை. வாங்கி வந்தாயிற்று. பழத்தை வாங்கி வந்து வெட்டிப் பார்த்தால் உள்ளுக்குள் சுளையையே காணோம். பூந்தியுள் கையைப் போட்டுத்  துழாவித் துழாவிப் பார்த்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஐம்பது சுளை கூட தேரவில்லை. அப்படியே ஏமாந்து போயிருப்போம். இந்த வியாபாரி என்னை நன்றாக ஏமாற்றிவிட்டார்  என்று  வசைபாடிவிட்டு பூந்தியை எடுத்து வழித்து நக்கி  நமது பலாப்பழ ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான்...

சித்தியும் மீன் குழம்பும்

சித்தியும் மீன்குழம்பும் எங்க சித்தியை மாதிரி சுவையாக யாரும் சமையல் செய்துவிட முடியாது. மகராசி அவள் கைப்பக்குவம் மாதிரி யாருக்கும் வராது என்று எங்கள் பாட்டி சொல்லிச் சொல்லிப் பெருமைப் படுவார். ஆனால் என்ன சுவையாக சமைத்து என்னப் பிரயோஜனம்? வாழ்க்கை சுவையாக அமையவில்லையே!  அந்தக் குழம்புதாங்க அவர் வாழ்க்கைக்கே எமனாகப் போய்விட்டது. சித்தப்பா  சாப்பாட்டை அவ்வளவு ருசித்துச் சாப்பிடுபவர் இல்லை. சொல்லப் போனால் ஏதோ கடமைக்கு சாப்பிடுவதுபோல சாப்பிட்டுவிட்டு எழுந்து போய்விடுவார். ஒரு ரசனையே இல்லாத ஆள்  உன் சித்தப்பா என்று சித்தி அடிக்கடி சொல்லி  வருத்தப்பட்டுக் கொள்வார். ஆனாலும் சித்தி எந்த இடத்திலும்  சித்தப்பாவைவிட்டுக் கொடுத்துப் பேசமாட்டார். சித்தப்பா அதற்கு எதிர்மாறானவர். எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்குமோ  அங்கெல்லாம் சித்தியை குறைகூறாமல் இருக்க மாட்டார். ஒருநாள் என்றால் பரவாயில்லை. நித்தம் நித்தம் இதுதான் என்றால்.... கேட்டுக் கேட்டு சித்திக்கு மரத்துப் போய்விட்டது. இப்போ எல்லாம் சித்தப்பா குறைகூறாமல் இருந்தால் அதுதான் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் எல்லா நேரங்களிலும...

அச்சம் தவிர்

அச்சம் தவிர்  "அறஞ்செய விரும்பு "என்று தனது ஆத்திசூடியை அறத்தோடு தொடங்கினார்  ஔவை. பாரதியார் தனது புதிய ஆத்திசூடியை "அச்சம் தவிர் "என்று  தன்னம்பிக்கையூட்டித் தொடங்கியிருக்கிறார்.   அத்தோடு விட்டு விட்டாரா? அடுத்த வரி "ஆண்மை தவறேல்" அதாவது மன வலிமையை இழக்காதே! நம்பிக்கை தரும் வரி இல்லையா? அதைத்தொடர்ந்து மூன்றாவதாக "இளைத்தல் இகழ்ச்சி" என்கிறார். அதாவது சோர்ந்துபோய் பின்தங்கிவிடக் கூடாது.அது இகழ்வடையக் காரணமாக அமைந்துவிடும். என்று தட்டி எழுப்பிக் கொண்டே வருகிறார். இதுதான் பாரதியின் பாடல்களில் இருக்கும் மந்திரமும் தந்திரமும்.    பாரதியின் பாடல்கள் என்றாலே ஒரு இளமையின் துள்ளலும்  உயிரோட்டமான உணர்வும்  உணர்ச்சியூட்டலும் கொண்டதாகவே இருக்கும். எதற்கும் அஞ்சா துணிச்சலை வளர்த்தெடுக்க உரமூட்டும் கருத்துக்கள் அதற்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். நம்மைத்  தட்டி எழுப்புவதாக இருக்கும். இலக்கண வரம்புக்கு உட்படாமல் புதுக்கவிதைக்குப் பாதை அமைத்துத் தந்தவராயிற்றே! யாருக்கு அஞ்ச வேண்டும்? எதற்கு அஞ்ச வேண்டும்? என்று துணிச்சலோடு சொல்ல வந்த கருத்தினை அள்ளி வீச...

தோழனோடும் ஏழைமைபேசேல்

தோழனோடும் ஏழைமை பேசேல் ஔவையின் அமுதமொழிகளுள் இதுவும் ஒன்று. கொன்றை வேந்தனில் ஔவை  கூறியுள்ள வரிகள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத வாழ்வியல் உண்மைகளைச் சொல்லித் தரும். ஔவை கூறும் ஒவ்வொரு சொல்லுமே ஒவ்வொரு உண்மையை எடுத்து வைக்கும். " தோழனோடும் ஏழைமை பேசேல்" எளிதில் பொருள் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு சொற்றொடர். நண்பனோடு நமது ஏழ்மை நிலையைப் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது .இதுதான் இதன் பொருள் என்ற சாதாரணமான புரிந்துணர்வோடு நாம் கடந்து போய்விட முடியாது. ஏழைமையை என்றால் அறியாமை என்ற ஒரு பொருளும் உண்டு. ஆகையால் நம்மிடம் நெருங்கிப் பழகும் நண்பர்கள்தானே என்ற நினைப்பில் அவர்களிடம் முன்பின் யோசியாமல் அறிவீனமாகப் பேசிவிடாதே என்றும் எச்சரிக்கிறார் ஔவை. நமது வறுமையைப் பிறரிடம் பறைசாற்றுவதும் ஒருவகையில் மதியீனம்தான் என்கிறார் ஔவை. ஔவை தோழனிடம் ஏழைமை பேசேல் என்று எழுதவில்லை. தோழனோடும் என்ற ஒற்றைச்சொல்லின் மூலம் மற்றும் சிலரை அதில் தொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். தோழனோடு இன்னும் சிலரா வியப்பாக இருக்கிறதா! தோழனிடமே நமது வறுமையைப் பற்றிப் பேசக் கூடாது. அறிவீனமாக பேசி விடக்கூடாது. அப்படியானால் மெதுவாக ...

பாகப்பிரிவினையில் அம்மா

பாகப்பிரிவினையில் அம்மா  "பாட்டி...பாட்டி" கதவைத் தட்டினான் செல்வன்.     "  யாரும்மா...... பாட்டி வந்து கதவைத் திறக்கிறேன்" குரல்    கொடுத்தபடியே   தட்டுத்தடுமாறி வந்து     கதவைத் திறந்தார் பாட்டி.         கதவைத் திறந்ததும் "யாரும்மா..    மூத்தவன் பிள்ளையா?       கையைப் பிடித்த பாட்டி "செல்வனா..    பள்ளிக்கூடத்துக்குப் போகல"     கரிசனமாக கேட்டார்.         "போகல..."ஒற்றை வார்த்தையோடு     பேச்சை முடித்துக் கொண்டான்.        " ஏன் போகல...அம்ம வீட்டுல இல்லையா?"       "இருக்காங்க..இருக்காங்க."சலிப்பாக பதில் வந்தது.        "பிறகு ஏன் போகல? வாத்தியார் அடிச்சாரா?"         "ஒருத்தரும் அடிக்கல...போகல்ல     என்றால் போகல்ல   ...

பாய் தூஜ் தீபாவளி

பாய் தூஜ் பண்டிகைகள் வெறுமனே கொண்டாடி விட்டு கடந்து போவதற்காக கொண்டாடப்படுபவை அல்ல. எல்லாப் பண்டிகைகளின்  பின்னணியிலும் ஏதாவது ஒரு காரணமும் வரலாறும் இருக்கும். அது மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். அந்த வகையில் பாய்தூஜ் என்பதும் வடஇந்திய மாநிலங்களில்  தீபாவளியின் ஐந்தாம் நாள் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். இந்த நாள் சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பான உறவைக் கொண்டாடும் நாள் ஆகும். சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நீண்ட ஆயுள் மற்றும் மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள், சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள்.  பாய் தூஜ்  இரண்டு சொற்களால் ஆனது - பாய் என்பது சகோதரரைக் குறிப்பிடும் ஒரு சொல்லாகும்..  தூஜ் என்ற சொல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நாளான அமாவாசைக்குப் பிறகு வரும் இரண்டாவது நாளைக் குறிக்கிறது.  இந்தப் பாய் தூஜ்  கொண்டாடுவதன் பின்னணியில் ஒரு புராண கதை இருப்பதாகக் கூறுகின்றனர். நரகாசுரன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் இந்திரலோகத்து மன்னன் இந்திரனை வென்று சொர்க்கபுரியைக் கைப்பற்றி கொண்டான். அது ம...

சான்றோனாக்குதல் தந்தையின் கடனே--

சான்றோனாக்குதல் தந்தையின் கடனே- ஒரு நாடு சிறப்பாக விளங்க ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டு. அதை உணர்ந்து அனைவரும் செயலாற்ற வேண்டும். ஒரு மகன் பிறந்ததில் இருந்து அவனை ஒரு வெற்றிவீரனாக பார்ப்பதுவரை யார் யாருக்கு என்னென்ன கடமை இருக்கிறது என்பதை  பொன்முடியார் என்ற பெண்பாற்புலவர் புறநானூற்றுப் பாடலில் அழகாகப் பாடியிருப்பார். ஒரு பெண்ணுக்கு என்ன கடமை தெரியுமா ?  ஆண் மகவைப் பெற்றுத்தர வேண்டுமாம். அத்தோடு அவள் கடமை முடிந்துவிடவில்லை. அவனைப் வளர்த்து ,ஆளாக்கி ஒரு முழு ஆண்மகனாக முன்நிறுத்துவது வரை ஒரு தாயின் கடமை இருக்கிறது. இரண்டாவதாக அந்த மகனை நற்பண்புகள் மிக்க ஒரு வீரனாக உருவாக்குதல்  தந்தையின் கடனாம். ஒரு மகன் அறிவாளி என்று பெயர் எடுப்பதற்கும் வீரன் என்று உலகம் கொண்டாடுவதற்கும் முக்கிய காரணகர்த்தாவாக இருப்பவர் தந்தை மட்டும்தான். கற்க வேண்டியவற்றை கற்க வைத்து ஒரு வீரனாக மாற்றும் பொறுப்பு தந்தைக்கு உண்டு. மூன்றாவதாக வீரன் என்றால் போருக்குச் செல்ல வேண்டுமே. வெறுங்கையோடு போர்க்களம் செல்ல முடியுமா?  கையில் ஆயுதம் வேண்டாமா ?  அந்த வேலை உருவாக்கித் தரும் பெரும் பொறுப்பு கொல்லன...