Posts

Birthday greetings

Birthday greeting Birthday Greeting to Teacher Megala Varunan I searched for words to send you greetings. “Live long, live long, live for thousands of years” — the words ran up and sat on my head. Is there nothing else instead? I rolled my mind as much as I could. “Live with prosperity,” the oft-heard voice echoed within everyone’s hearts. In my rich mother tongue, Tamil, can there be a scarcity of words for blessings? It should never be. But in my barren mind, only famine grew, and words became meager. Would there be no words that shine? As my heart pleaded a little, my eyes refused to close. When I knocked my head, a spark of light flashed: “Turn to Purananuru,” it said. One after another, tenfold, the verses lined up. “May you live like the sun — bright and eternal,” said one, blessing you. “Like the white moon shining among the stars, may your fame glow,” another adorned with words, hanging garlands of greeting. “Like countless raindrops, may your years be endless,” suggested anoth...

அறம் செய்ய விரும்பு

அறம் செய்ய விரும்பு  அறம் செய்ய விரும்பு என்று நான் தொடங்கி விட்டுவிட்டால் போதும். அறம் செய்ய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல்  ஈவது விலக்கேல் என்று கடகடவென்று ஒப்பித்து விடுவோம். அந்த அளவுக்கு ஆத்திசூடிக்கும் நமக்கும் ஒரு நெருக்கம் உண்டு. ஆத்திசூடியை நெஞ்சிலே  குடி வைத்திருப்போம். நேரம் வரும்போதெல்லாம்  சொல்லி மகிழ்வோம். முதன்முதலாக நாம் உரக்கப் படித்த வரிகள். உள்ளத்திலேயே  குடி வைத்திருக்கும்  வரிகள். அதன் பொருள் என்ன என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. எனக்கு ஆத்திசூடி தெரியும்  அவ்வளவுதான். இப்போது பொருளுக்கு வருவோம். அறம் செய்ய விரும்பு விருப்பம்  ஆளுக்கு ஆள் வேறுபடும்.  சிலர் ஆடம்பரமாக பொருட்களை வாங்கிக்  குவிக்க விரும்பலாம். இன்னும் சிலர் பணம்  சம்பாதிக்க விரும்பலாம். மேலும் சிலர்  பேரும் புகழும் பெற விரும்பலாம்.  சிலர் படித்து நிறைய பட்டம் வாங்க   விரும்பலாம்.  சிலர் உழைப்பை விரும்பலாம்.  ஏன் இன்னும் சிலர்  தூக்கத்தை விரும்பலாம் .  இப்படி விருப்பம்  அவரவர் மனநிலைக்கு ஏற...

வீட்டிற்கு வீடு வாசற்படி

வீட்டிற்கு வீடு வாசற்படி  ஆளாளுக்கு என்னை இப்படித் துரத்தினால் நான் எங்கே போவேன்.? யாரிடம் போய் நிற்பேன்? யார் இருக்கிறார்கள் எனக்கு? சொல்லி அழகூட ஒரு சனம் இல்ல....யாரிடம் போய் என் குறையை சொல்லுவேன்.? சாமி....நீதான் கேட்கணும் "என்று வீட்டிற்கு மேற்குப் பக்கத்தில் இருந்த கோவிலைப் பார்த்துக் கையெடுத்துக்  கும்பிட்டார் அன்னப்பழம் பாட்டி. இந்தப் புலம்பல் இன்றுமட்டும் நடக்கவில்லை. கடந்த நாலு வருசமா பாட்டி இப்படித்தான் புலம்பி கிட்டு திரியிறாங்க. மருமகள்கள் ஏதும் சொல்லிவிட்டால் மகனிடம் போய் சொல்லுவார். மகன்" உனக்கு எதுக்கு வம்பு? வயசான காலத்துல வாயை வச்சுகிட்டு சும்மா கிடைக்கத் தெரியல என்றால் ஆளாளுக்குக் கேட்கத்தான் செய்வாளுங்க" என்று சொல்லிவிட்டால் போதும், "எனக்குப் பிறந்ததும் சரியில்ல...  வந்ததும் சரியில்ல "என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். பாட்டியின் புலம்பல் கடவுள் காதுக்குத்தான்  இன்னும் போய் சேரல... "என்ன அன்னப்பழம் சாப்பிட்டாச்சா...." கேட்டபடியே பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் பக்கத்துவீட்டு மாசானம் மனைவி மாடத்தி. ஏதோ நினைவில் இருந்த பாட்டிக்கு ஒன்ற...

நீரளவே ஆகும் நீராம்பல்

நீரளவே ஆகும் நீராம்பல்  ஔவை என்றதும் கையில் கோலூன்றிய பாட்டி ஒருவர் கண்முன் வந்து நிற்பார்.  முதல் வகுப்பில் படித்த" அறம் செய விரும்பு'" " ஆறுவது சினம்"  ...எல்லாம் மனதிற்குள் வரிசை கட்டி நின்று எட்டிப் பார்க்கும். "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் " "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று மனப்பாடம் செய்த பாடல் எல்லாம் ஓடி வந்து மறுபடி ஒருமுறை மனதிற்குள் ஒப்பித்துப் பார்க்க வைக்கும். மறுபடி  மறுபடி எனைப்படி எனத் தூண்ட வைக்கும். ஔவை என்ற இந்தப் பாட்டிக்குள் எங்கிருந்து வந்தது  இத்தனை பாடும் திறன் என வியக்க வைக்கும். இப்படிப் பார்த்து, படித்து மகிழ்ந்த பாடல்கள் எத்தனை எத்தனையோ உள்ளன. மூதுரையில் ஔவை எழுதிய முப்பது  பாடல்களும் நல்ல விழுமியங்களை சொல்லித் தருவனவாக இருக்கும். ஔவையின் இந்தப் பாடல்களைப் படிக்கப் படிக்க சில நுட்பமான உண்மைகள் தெரியவரும். அவற்றுள் மறுபடியும் என்னைப் படிக்க வைத்து , பாடலின் நுட்பத்தை அறிய வைத்து, மகிழ்வித்தப் பாடல் இதோ  உங்களுக்காக... " நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற  நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு _ மேலைத்  தவத்தளவே ஆகும...

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்  வாழ்க்கை வாழ்வதற்கே!   அந்த வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று அனைவரும்   ஒரு திட்டம் போட்டு வைத்திருப்போம்.  ஆனால் நாம் திட்டமிட்டது போல் எல்லாம் நடை பெறுகிறதா?              இடையில் எத்தனையோ குழப்பங்கள்... குளறுபடிகள். ஏறுக்குமாறான நிகழ்வுகள். தடுமாற்றங்கள் ‌. இப்படி நடக்கும் என்று  நினைக்கவில்லையே  என்று புலம்பியிருப்போம். இதற்குமேல் எதுவுமே நமக்கு  நல்லது நடக்காது என்று  ஒரு முடிவுரை எழுதி வைத்துவிட்டு  விரக்தியில் அமர்ந்திருப்போம். திடீர் திருப்பமாக எல்லாமே தலைகீழாக மாறி நம்மை மகிழ்ச்சியில் திக்குமுக்காட  வைத்து விடும்.  இதுதான் வாழ்க்கை. நாம் நினைப்பது போல ஒன்றும் நடப்பதில்லை.                பத்து மணிக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போக வேண்டும்.  இடையில் ஒரு அரசியல் போராட்ட கும்பல் வந்து சாலை மறியலில்  ஈடுபட, குறிப்பிட்ட நேரத்தில் நம்மால் தேர்...

உலக அமைதிக்காக

உலக அமைதிக்காக அமைதி இல்லா உலகில் நிம்மதி இல்லை. நிம்மதி இல்லா மனதில் மகிழ்ச்சி இல்லை. அமைதி இருக்குமிடத்தில்தான் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். அமைதி எப்போது வரும்? புயலுக்குப் பின்னர் வருவதுதான் அமைதி. அப்படியானால் பெரும் போராட்டத்திற்குப் பின் வருவது அமைதி. அல்லது போருக்குப் பின்னர் வருவது அமைதி என்றும் எடுத்துக் கொள்ளலாம். அமைதியை விரும்பாதோர் எவரேனும் உண்டோ! சாதிச் சண்டை .சமய இனக் கலவரங்கள். தனிமனிதப் போராட்டம். திரும்பிய பக்கம் எல்லாம் அமைதி இல்லாச் சூழ்நிலை. மக்களிடையே பகை. குடும்பங்களுக்கு இடையே பகைமை உணர்வு. நாளை என்ன நடைபெறுமோ என்ற அச்சம். இப்படி திகிலும் பயமும் திருப்பமுமாக நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன. மனம் எங்கே அமைதி....எங்கே அமைதி என்று ஏக்கத்தோடு ஒவ்வொரு நாளின் நகர்வுகளையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அமைதியைத் தேடி ஆன்மீகத் தலங்களை நோக்கி ஓட வைக்கிறது. யாராவது ஆறுதலாக நாலு வார்த்தை  சொல்லிவிட மாட்டார்களா என்று மனம் ஏங்கிக்கிடக்கிறது. மனம்  கலங்கிவிட்டால்... உடல் நலம் கெடும். தூக்கம் தொலைந்து போகும். நிம்மதி காணாமல் போய்விடும். உலகப் போரின் போ...

வந்தது வந்தது கூற்று

வந்தது வந்தது கூற்று இந்த வாழ்வு நிலையில்லாதது. நாம் நிரந்தரமாக இந்த உலகில்  வாழப் போகிறவர்கள் என்ற நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நேற்று இருந்தது இன்று நம்மிடம் இல்லை. நாளை என்ன நடக்குமோ நமக்குத் தெரியாது. இப்படித்தான் வாழ்வோம் என்று யாரும் முடிவு செய்ய முடியாது. இங்கு நிரந்தரம் என்று எதுவும் இல்லை. விருப்பம் போல் வாழ்வது வாழ்க்கையல்ல. வாழுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் வாழும்போதே அறக்காரியங்களைச் செய்து வாழுங்கள். இதுதான் பட்டறிவாளர்கள் நமக்குச் சொல்லித்தரும் பாடம்.  நல்லது செய்வதற்கு நாள் பார்க்கக் கூடாது. நாள் பார்த்து ,காலம் பார்த்து செய்வேன் என்று காத்திருந்தால் நல்லது நடைபெறாமலேயே போய்விடலாம். சிறிது காலம் கழித்து நல்ல காரியங்கள் செய்துவிட்டு வருகிறேன் என்று கூறினால் கூற்றுவன் உங்களுக்காகக் காத்திருக்கப் போவதில்லை. இதனை உணர்த்தும் அருமையான நாலடியார் பாடல் உங்களுக்காக. ‘ நின்றன நின்றன நில்லா’என உணர்ந்து,ஒன்றின ஒன்றின வல்லே, செயின், செய்க-சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்து, உடன்வந்தது வந்தது, கூற்று!           ...