வஞ்சகப் புகழ்ச்சி அணி
வஞ்சகப் புகழ்ச்சி அணி புகழ்ச்சி தெரியும். இது என்ன...வஞ்சகப் புகழ்ச்சி! ஏதோ நெருடலாக இருக்கிறதே. வஞ்சகத்தோடு இருக்கும் ஒருவரால் புகழ்ந்து பேச முடியுமா ? பேச முடியும். நயவஞ்சகம் பற்றி தெரியுமல்லவா! நயமாகப் பேசி நம்மை நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள் இல்லையா? இந்த நயவஞ்சகத்திற்கும் வஞ்சகப்புகழ்ச்சிக்கும் பெரிய வேறுபாடு இல்லைங்க. ஒருவரைப் புகழ்வது போல பழிப்பது. பழிப்பது போல புகழ்வது. அதாவது எள்ளல். ஒருவரை எள்ளி நகையாடுவது பள்ளிப் பருவத்திலிருந்தே நமக்குக் கைவந்த கலைதான். அதுவும் அவர்களுக்கு வலிக்காதபடி பேசுவது ...ஒருவகையில் பொடி வைத்துப் பேசுவது என்றே வைத்துக் கொள்வோம். பேசுபவர் பேசிவிடுவார். மேலோட்டமாக பார்த்தால் பொருள் இருக்கும். உடனே நமக்குப் புரியாது. நாமும் சேர்ந்து சிரிப்போம். வீட்டிற்கு வந்த பின்னர்தான் எங்கோ பொறியில் தட்டுவதுபோல இருக்கும். அவன் என்னை நக்கலடித்திருக்கிறான். நானும் முட்டாள் மாதிரி சிரித்துவிட்டு வந்திருக்கிறேனே என்று நம்மையே நொந்து கொள்வோம். இது நம்மில் பலருக்கு ஏற்பட்ட அனுபவமாகத்தான் இருந்திருக்கும். இதைத்தான் வஞ்சகப் புகழ்ச்சி ...