Posts

மண்ணின் குடம் உடைந்தால் என்னாகும்

மண்ணின் குடம் உடைந்தால் என்னாகும் "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்று சொல்லித் தந்த ஔவைக்கு அத்தோடு நம்மை விட்டுவிட மனமில்லை. சங்கு எத்தனை பேருக்குத்  தெரியுமோ என்ற ஐயம் ஔவையின்  மனதில் எழுந்தது.  தெரிந்தவர்கள் நான் சொன்ன  உவமை மூலம் சொல்ல வந்த  கருத்தைப் புரிந்திருப்பார்கள். தெரியாதவர்களுக்கு   புரிய வைக்க வேண்டுமே!  அதற்கு என்ன செய்வது?  எல்லாருக்கும் புரியும்படியான  இன்னொரு பொருளைக் கையிலெடுத்து  விளங்கும்படியாகச் சொல்லி வைப்போம்.  அப்படியாவது புரிகிறதா என்று  பார்ப்போம் என்று நினைத்தார்   ஔவை.    நாமும் பல நேரங்களில்   புரிந்து போல தலையை ஆட்டுவோம்.  ஆனால் புரிந்திருக்காது.  சரி போகட்டும் என்று அப்படியே கடந்து  போய்விடுவோம்.    திரும்பத்திரும்ப சொல்லித்தரும் போதுதான் புரிந்து கொள்வோம். அல்லது சில நேரங்களில் வாசித்த மறுநிமிடமே மறந்துவிட்டு கண்டும் காணாமல் போய்விடுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக தெரிந்த உவமைகள் மூலம் விளக்கப்பட்டிருக்கு...

உப்புக்கும் புளிக்கும் பாடலா?

உப்புக்கும் புளிக்கும் பாடலா கூழுக்குப் பாடியவரைத் தெரியும். உப்புக்கும் புளிக்கும் பாடியவரைத் தெரியுமா? உப்புக்கும் புளிக்கும் பாடலா? ஐயோ பாவம்.... காசில்லாமல் போனால் கிடைத்ததற்குப் பாடல் பாடி விட்டுப் போக வேண்டியதுதான். சேர்ந்தே இருப்பது புலவரும் வறுமையுமல்லவா? வறுமை இருந்ததால் உப்புக்கும் புளிக்கும் பாடுவேன் என்கிறார் ஒரு புலவர். யார் அந்தப் புலவர்? புலமை இருக்கும் இடத்தில் வறுமை இருக்கத்தான் செய்யும்  வயிற்றுக்காகத்தானே இந்தப் பாடும் பாடலும். வயிற்றுப்பசி . வாழ்க்கைச் சக்கரம் ஓட வேண்டும். அதற்காகத்தான் வள்ளல்களை நாடி ஓடி பாடி பொருட்களைப் பெற்றனர் புலவர்கள். இந்தப் புலவர்மட்டும் உப்புக்கும்  பாடுவேன். கூடவே புளிக்கும் பாடுவேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். கூழாயிருந்தாலும் சற்று உப்பு இருந்தால்தானே குடிக்க முடியும். அதனால் அப்படி சொல்லி இருப்பாரோ? இருக்கலாம். சொல்லியவர் யார்? அறிந்து விடுவோம் வாருங்கள். அப்படி என்ன வறுமை? பாடுபவரிடம்  வறுமை இருக்கும். பாட்டில் ஒருபோதும் வறுமை இருந்ததில்லை. தன்மானம் இழந்ததில்லை. நின்னை நினைத்தோ தமிழை ஓதினேன் என்று முகத்...

ஒப்பில்லாத் தொழில் எது

ஒப்பில்லாத் தொழில் எது "வாழ ஆசை . ஆனால் முடியவில்லை. வாழ்க்கை எங்கெங்கோ கொண்டு  நிறுத்தி வேடிக்கை காட்டுகிறது. கையேந்தி நிற்க வைத்து கண்ணாமூச்சி விளையாடி கலங்க வைக்கிறது . என்னடா பொல்லாத வாழ்க்கை புலம்புகிறேன். புவியில் யாருக்கும்  கவலையில்லை.  எதைப்பற்றியும் புரிதலில்லை. யார் யாரெல்லாம் ஓ எப்படியெல்லாமோ வாழ்கிறார்கள். ஆனால் என்னால் அப்படி வாழ முடியவில்லை. உழைக்கும் பணம்  வயிற்றுக்குக்கூட போதுமானதாக இல்லை. இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று  சொல்வதில்லை என்று சொன்னார்கள். யார் இறைவன் என்று மட்டும்  சொல்லித் தரவில்லை  தந்திருந்தால் அவரிடம் மட்டும் கையேந்தியிருப்பேன் அவர் என்னை வாழ வைத்திருப்பார் யாரையெல்லாமோ கும்பிட்டுத் திரிந்தேன் யார் தொழத்தக்கவர் யார் என்று தெரியாமல்" என்று புலம்பினேன். "அட போடா.... யார் தொழத்தகக்கவர் என்று நான் சொல்லட்டுமா? யார் இந்த உலகில் வாழ்கிறாரோ  யார் பிறரை வாழ வைக்கிறாரோ அவர்தான் தொழத்தக்கவர்" என்ற குரலோடு வள்ளுவர் என்முன் வந்து நின்றார். "தானும் வாழ்ந்து  பிறரையும் வாழ வைக்கும்  நல்லுள்ளம் படைத்த மனிதர்...

கண்ணதாசனுக்கு வளையிட்டப் பாடல்

கண்ணதாசனுக்கு வளையிட்டப் பாடல் " பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளி வைத்த சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும்  வித்தாகவில்லை என்று பாடு"என்பார் கண்ணதாசன் இந்தப் பத்தாயிரம் மட்டும்தானா.? இன்னும் உண்டு சத்தானப் பாடல்கள். தனிப்பாடல் திரட்டிலிருந்து கம்பர் முத்தாக அள்ளி வைத்த பாடல்கள் பல உண்டு. அவற்றிலிருந்து  இதோ உங்களுக்காக ஒரே ஒரு பாடல். தன் மகள் காதல் வயப்பட்டு விட்டாள். அதனால் அவள்  உடல் மெலிந்தாள்.கைவளை கழன்று காணாமல் போனது. இதற்குக் காரணம் யார்? யாரைப் பார்த்தாள்? யார் மீது காதல் கொண்டாள்? வேறு எங்கும் செல்லவில்லையே...அப்படியானால்.... அப்படியானால்.... யாராக இருக்கும்? தாயின் மனம் கலக்கத்தில் கண்டபடி ஏதேதோ புலம்பத் தொடங்குகிறது. அன்றொருநாள் அவள் பார்த்த அவன் அவனேதான். அவன் ஆகத்தான் இருக்க வேண்டும் . யாராக இருக்க வேண்டும் என்கிறாள்? தாய் தன் மகளின் காதல் பற்றிச் சொல்கிறாள். கேளுங்கள். தவளை தத்திப் பாயும்போது  தவளையின் கால்கள் பூவில் பட்டு அதில் இருக்கு தேன் மழைபோல்   கீழே சொரியும் . அப்படிப்பட்ட வளமுடைய  பொன்னியாறு பாயும் வளநாடு.  அங்கு மாதத்தன் என்பவ...

நோவாவின் பேழை விடுகதை

நோவாவின் பேழை விடுகதை 1.  விண்ணை முட்டிய மலை        பேழை தட்டிய மலை        அது எந்த மலை?                   விடை : ஆரராத் மலை 2. வானில் வண்ணம் காட்டுவேன்     மழை நாள் கண்டு மகிழ்ந்து நிற்பேன்      உடன்படிக்கையின் அடையாளம்       நான்     என்றதும்      விண்ணில் பறப்பது போல் மகிழ்கிறேன்.      நான் யார் தெரியுமா?    விடை :  வானவில் 3.  சமாதானம் பேச வந்தேன்       என்னை அழைத்து       காலநிலை அறிந்து வர அனுப்பிவிட்டார்.       நான் யார்?     விடை :. புறா 4. கூடி உண்பேன்      பந்தியில் அல்ல;      தன்னந்தனியாய் வெளியேறினே...

மியாவாக்கி காடுகள்

மியாவாக்கி காடுகள் பள்ளியில் செய்தி வாசிக்கும் நேரம். தான் குறித்து வைத்திருந்த நான்கைந்து தலைப்புச் செய்திகளை கடகடவென்று வாசித்துவிட்டு தன் இடத்தில் போய் நின்று கொண்டான் செய்தி வாசித்த மாணவன். ஆசிரியருக்குப் பயந்து செய்தியைக் கவனிப்பதுபோல  அனைத்து மாணவர்களும் நின்று கொண்டிருந்தனர் . எனக்கு எப்போதுமே செய்தியில் அதிக ஈடுபாடு உண்டு. அதனால் கவனமாக செய்தி வாசிக்கும்போது கேட்பேன். இன்று செய்தி வாசித்த மாணவன் பெரிய நகரங்களில் மியாவாக்கி காடு வளர்ப்பு  திட்டத்தைச் செயல்படுத்த  முதல்வர் ஒப்புதல் வழங்கினார் என்று ஒரு செய்தியையும் வாசித்தான். மியாவாக்கி காடுகளாக? புதுமையாக இருக்கிறதே! அது என்ன மியாவாக்கி காடுகள்? சதுப்பு நிலக் காடுகள், பசுமைமாறாக் காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகள்  படித்திருக்கிறோம். இந்த மியாவாக்கி காடுகளைப் பற்றி  கேள்விப்பட்டதாக என் நினைவில் இல்லை. ஒருவிதமான குழப்பமான மனநிலையில்  வகுப்பிற்குள் சென்றேன். "ஆசிரியரிடம் கேட்கலாமா? வேண்டாம். இதுகூட தெரியாதா?  இப்போ இதைத் தெரிந்து என்ன  செய்யப்போற? காடு வளர்க்கப் போகிறாயா? என்று தி...

நகையுள்ளும் இன்னா இகழ்ச்சி

நகையுள்ளும் இன்னா இகழ்ச்சி  கிண்டலும் கேலியும் நக்கலும் நையாண்டியும் செய்து பிறர் மனதைக் காயப்படுத்துவதற்கு என்றே ஒரு சிலர் இருப்பர். அவருக்கு அது விளையாட்டாக இருக்கலாம். ஒருவரைப் பார்த்து நாம் செய்யும் கிண்டலும் கேலியும் அவர் உள்ளத்தை எவ்வளவு காயப்படுத்தும் .அவர் உள்ளம் எப்படி கூனிக் குறுகிக் போகும் என்பது காயப்பட்ட வருக்குத்தான் தெரியும். " ஒரு சொல் வெல்லும் ஒருசொல் கொல்லும்" என்பார்கள். வெல்லும் சொல்லை விட்டுவிட்டு  கொல்லும் சொல்லைக் கையில் எடுத்துப் பேசுவதால் எத்தனை எத்தனை தற்கொலைகள் நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வாழ வழி இல்லையே எனத்  தற்கொலை செய்து கொள்ளுபவர்களைவிட என்னை அவமானப் படுத்திவிட்டார்களே என்று தற்கொலை  செய்பவர்கள்தான் உலகில்  அதிகம். நான் என்ன அப்படி பெரிசாக சொல்லி விட்டேன். இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டாரே என்பது சொல்லியவர்கள் தரப்பு வாதமாக இருக்கலாம். அவமானப்பட்டவர்களுக்கு அல்லவா தெரியும் அதன் வலியும் வேதனையும். அப்படியே நெஞ்சைப் பிடுங்கி வெளியே  வீசுவதுபோல் இருக்கும். உள்ளுக்குள்ளே கத்தியால் குடைந்து போல இருக்கும்.   பணம் இ...