Posts

கண்ணதாசன் ஒரு காலக்கணிதம்

Image
கண்ணதாசன் ஒரு காலக்கணிதம் காலத்தை வென்ற கவிதைகளுக்கு என்றென்றும் நம் இதயத்தில் நிரந்தர இடமுண்டு. கண்ணதாசனின் அனைத்து  கவிதைகளுமே காலத்தை வென்றவைதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சில கவிதைகள் நம்மோடு நடக்கும். சில கவிதைகள் பேசும். சில கவிதைகள் சிந்தனையைத் தூண்டும். எண்ணவோட்டத்தில் இடைவிடாது வந்து இடையூறு செய்யும். எழும்பி ஓட வைக்கும். இதுதான் கவிதைக்கான உண்மையான ஆற்றல். ஈடுபாட்டோடு படிப்போர் அனைவரும் இந்த அனுபவங்களைக் கடந்துதான் வந்திருப்பர். அப்படி எனக்குள் திரும்பத்திரும்ப ஏதோ ஓர் உணர்வைத் தூண்டி வாசிக்க வைத்த கண்ணதாசனின் கவிதைகளுள் ஒன்று " கவிஞன் யானோர் காலக் கணிதம்." என்ற பாடல். இந்தக் கவிதையில் கண்ணதாசன் தன்னை எப்படி  அறிமுகப்படுத்திருக்கிறார் பாருங்கள்.! கவிஞன் யானோர் காலக் கணிதம். இல்லை...இல்லை...அவர் தன்னைக் காலக்கணிதமாகவே உருவகப்படுத்தி இருக்கிறார். காலத்தைக் கணிப்பவர் யார்? கவிஞராகிய யான். எவ்வளவு திடமான நம்பிக்கை. மனதில் பட்டதைப் பட்டென்று சொல்லும் பண்பு கொண்டவர் கண்ணதாசன். உள்ளதை உள்ளவாறு சொல்லுவார். தன்னைப்பற்றிய குறைகளையும் ஒத...

இலக்கியத்தில் உடன்போக்கு

Image
இலக்கியத்தில் உடன்போக்கு அன்றொருநாள்.... அதிகாலை வேளை.... கதிரவன் செம்முகம் காட்டித் தன் சிரிப்பலையைச்  சிந்திவிட சோம்பல் முறித்துப் படுக்கையிலிருந்து எழுந்தாள் செவிலித்தாய். கண்கள் அருகில் படுத்திருந்த  அழகு மகளைத் தேட...  அதிர்ச்சியுற்றாள்.  படுக்கை அப்படியே விரிந்து கிடக்க...  அறை  பதுமை இல்லாது  வெறுமையாய்க்   கிடந்தது. வீடு முழுக்கத் தேடினாள்.  வெளியில் போய் அக்கம்பக்கம் தேடினாள். அண்டை அயலாரிடம்  போய் கேட்டுப் பார்த்தாள். எல்லோரும் கையை விரித்தனர். அங்குமிங்கும் ஓடினாள். எங்கேயும் மகளைக் காணவில்லை. இப்போது முகத்தில் கூடுதலாக ஒரு கலக்கம் வந்து அப்பிக் கொண்டது. .... என்ன செய்வேன்?  அவள் அன்னைக்கு யாதுரைப்பேன் ? கலங்கிப்போனாள்...கலக்கத்தில் மனம் குழப்பமடையலானாள். குழப்பத்தில் கூடுதலாக என்னென்ன  எண்ணமெல்லாமோ வந்து எட்டிப் பார்த்தது. அவனோடு ஓடி இருப்பாளோ...? ஒருவேளை அப்படி செய்திருந்தால்... அப்படியாகத்தான் இருக்கும். தனியாக அவள் எங்கும் செல்ல வாய்ப்பே இல்லை இப்படியொரு ஐயம் வந்து தொற்றிக் கொள்ள காண்போரிடம் எல்ல...

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் வேண்டும்... வேண்டும் நல்ல எண்ணம் இருக்க வேண்டும். செயலில் நேர்மை இருக்க வேண்டும். பேச்சில் இனிமை இருக்க வேண்டும். பழகுவதில் உண்மை இருக்க வேண்டும். இப்படி எல்லாவற்றிலும் வேண்டும்..வேண்டும் என்று நேர்மறையான சொல்லே இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மைச் சுற்றி நடப்பவை யாவும் நன்மையானதாக நடக்கும் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம்.  ஒரு எதிர்மறை சொல் வாயிலிருந்து   வந்துவிடக் கூடாது என்று பார்த்துப் பார்த்துப் பேசுவோம். ஆனால் இலங்கியங்கள் இவை எல்லாவற்றிற்கும் நேர் மாறானவை. இனியவை நாற்பது உண்டு என்றால் ஒரு இன்னா நாற்பதும் உண்டு. இனியவை நாற்பதைவிட எந்தவிதத்திலும் குறைபடாத சொல்லாட்சி கருத்தாளுமை ஆகியவற்றை இன்னா நாற்பதிலும் காணலாம். தீ என்று சொல்வதால் நாக்கு வெந்துவிடப்போவதில்லை. சர்க்கரை என்று சொல்வதால்  நாக்கு இனித்துவிடப் போதில்லை. எது எப்படியோ சொல்லப்படும் கருத்து உயர்வானதாக இருந்தால் நாம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் அவை வேண்டும் வேண்டும் என்று நம்மோடு என்றும் நடைபயின்று கொண்டிருக்கும்.  வேண்டாம் என்ற சொல்லை வைத்தே ந...

குலோத்துங்கச் சோழனுக்குப் பாடம் சொன்ன ஔவை

குலோத்துங்கச் சோழனுக்குப் பாடம் சொன்ன ஔவை ஔவையின் மீது அரசர்களுக்கு எல்லாம் நல்ல மரியாதை உண்டு. ஔவையிடம் பேச தனிக்கவனம் வேண்டும். ஏடாகூடாவாக எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டு விழித்த கதைகள் ஏராளம் உண்டு. எந்தப் பக்கம் நின்று பேசினாலும் எதிர்ப்பக்கம் நின்று கோல் அடித்துவிட்டு போய்க் கொண்டே இருப்பார். படைப்பாளிகள் ,கலைஞர்கள் என்று எல்லா தரப்பினரிடமும் எப்போதும் ஏதோ ஒருவிதமான ஒரு போட்டி மனப்பான்மை இருந்துகொண்டே  இருக்கும். தங்களை விஞ்சிய ஆள் இருந்துவிடக்கூடாது என்ற மனநிலை இருக்கும். தங்கள் படைப்பின் மீது ஒரு கர்வம் இருக்கும். அனைவருமே தங்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் படைப்பாளிகள் அனைவருக்கும் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பான்மையான படைப்பாளிகளிடமிருந்து வரும் பதிலாக இருக்கும். அவர்கள் படைப்பில் தரம் இருக்கலாம். ஆனால் அவற்றை வெளியில் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் சரியாக இல்லாமையால் அவர்கள் திறமை உலகுக்குத் தெரியாமலேயே இருந்துவிடும். விளம்பரங்களும் விளம்பரப்படுத்த ஆட்களும் இருந்தால் மட்டுமே ஒருவரை அறிவாளி...

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

நந்தவனத்தில் ஓர் ஆண்டி..... சித்தர்கள் எப்போதுமே உடம்பு, ஆன்மா, நிலையாமை என்று சிந்தனைக்குரிய கருத்துக்களையே  கூறுவர். வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் போவதுபோல் இருக்கும். வேடிக்கையிலும் ஒரு உள்ளார்ந்த கருத்து இருக்கும். இப்படித்தான்சித்தர் ஒருவர் ஒருநாள் கால்போனபோக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். வழியில் ஒரு சுடுகாடு.அங்கே காணும் காட்சி...அவரை சிந்திக்க வைக்கிறது. இவ்வளவு சிறுவயதில் இப்படிப்பட்ட பரிதாபத்தைத் தேடிக் கொண்டானே என மனம் வருந்துகிறார். என்ன உலகம் இது? நேற்று இருந்தார். இன்று இல்லை. வாழும்வரை ஆடிய ஆட்டம் என்ன ? எனக்கு நிகர் யார் என்று அடித்தக் கொட்டம் என்ன ?  மூச்சுப் போச்சு என்றால் எல்லாம்  அடங்கிப் போச்சு. ஆனால் கிடைத்தற்கரிய பிறவியல்லவா இந்த மானிடப்பிறவி. இந்தப் பிறவியின் அருமையை எத்தனைபேர் உணர்ந்து வாழ்கிறார்கள்.? வரமாக வாங்கி வந்தப் பிறவி. அதன் அருமையை உணராமல் தாறுமாறாக வாழ்ந்து கொடுத்த காலத்திற்கு முன்பாகவே வாழ்க்கையை முடித்துக் கொண்டுவிட்டானே என்று நினைத்து அங்கேயே நின்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்.  இப்படி பொசுக்கென்று போய்ச் சேருவான்  என...

சோத்துக்கணக்கு

சோத்துக்கணக்கு "ஒரு மாசமா உங்க அம்மா  இங்கேயே இருக்குறாங்க... ஊருக்கு எப்ப போவாங்களாம்?" காலையிலேயே தன் கோபத்தை சுரேஷ் முன் கொட்டினாள் பாலா. "ஏன்...எங்க அம்ம இங்க இருப்பதுல உனக்கு என்ன கஷ்டம் " "நீங்க விடிஞ்சா போயிட்டு அடைஞ்சா வாரீங்க...உங்களுக்கு வீட்டில் என்ன நடக்கு யாது நடக்கு என்று என்ன தெரியும்?" "அப்படி எனக்குத் தெரியாம இங்க என்னதான் நடக்கு ....?" "ஒண்ணும் நடக்கல..." "காலையில் வேலைக்குப் போகும்போதே உன் புராணத்தை  தொடங்கிட்டியா?" "உங்களுக்கு எது சொன்னாலும் புராணமாத்தான் தெரியும்" ஒண்ணும் சொல்லல...கண்ணைக் கசக்கி கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள் பாலா. பாலா தாயம்ம பாட்டியின் இரண்டாவது மகன் சுரேஷின் மனைவி. சுரேஷ் நல்ல வேலையில் இருப்பதால் வசதியான குடும்பத்திலிருந்து பெண் பார்த்து திருமணம் முடித்து வைத்தார் தாயம்ம பாட்டி. பாலாவுக்கு சுரேஷ் குடும்பத்தைப் பார்த்தாலே ஆகாது. நாங்க பெரிய குடும்பம் .... நாங்க பெரிய குடும்பம் என்று எப்போதும் சிலுப்பிக் கொள்வாள்.  சந்தோசமாக தன் குடும்பதோடு இருப்பதற்கு சுரேஷ் குடும்பத்தினர் தடை...

தமிழ் மன்னர்கள் கற்றுத்தரும் போர் தர்மம்

தமிழ் மன்னர்கள் கற்றுத்தரும் போர் தர்மம்  "அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை" என்பார் வள்ளுவர். அறத்திற்கு மட்டுமே அன்பு வேண்டும் என்று சொல்பவர்கள் அறியாதவர்கள். மறத்திற்கும் அதாவது வீரத்தை வெளிப்படுத்தும் இடங்களிலும் அன்புதான் துணையாக நிற்கும். நிற்க வேண்டும். அதுதான் அறம். இதுதான் வள்ளுவர்  நமக்குச் சொல்லித் தந்த பாடம். வள்ளுவருக்கு என்ன? அவர்பாட்டுக்குச் சொல்லி விட்டுப் போய்விட்டார். போர் செய்யும் இடம்  எப்படி அன்பு காட்டும் இடமாக இருக்க முடியும்.? போர் செய்யும் இடத்தில் அன்புக்கோ மனிதாபிமானத்திற்கோ இடமளிக்கக்கூடாது. எதிரி என்றால் எதிரிநாட்டு உயிர்களும் எமக்கு எதிரிகள்தான். அதனால் யார் எவர் என்று பார்க்காதே. கண்ணிவெடி வைத்தோ ஏவுகணை வீசியோ எதிரி நாட்டை அழிக்க வேண்டும். அதுதான் எமது இலக்கு . இதில் யார் தொலைந்தால் என்ன? யார் மாய்ந்தால் என்ன? என்பதுதான் இன்றைய போர் தர்மம்...இல்லை....இல்லை.  போர் அதர்மம். இன்றைய போர்க்கள காட்சிகளும் நிகழ்வுகளும் நம்மை இப்படித்தான் நினைக்க வைக்கின்றன. மனம் வெம்பிப் பேச வைக்கின்றன. உக்ரைன் போரில் பெற்றோரை இழந்து அ...