Posts

கருப்பும் சிவப்பும்

கருப்பும் சிவப்பும்  ஏல....ஏ...சின்னவள அந்த கருப்பி அக்கா கடையில போயி ஒரு தேங்காய் சில்லு வாங்கிட்டு வா" "நான் கருப்பி கடைக்கும் போகல்ல...சிகப்பி கடைக்கும் போகல....போம்மா" சொல்லிவிட்டு அங்கிருந்து சிட்டாக பறந்து ஓடிவிட்டாள் பரணி. "எம்மோ அவ என்ன சொல்லிட்டு போறா பார்த்தியளா? கருப்பி....சிகப்பி... நல்லா இருக்குல்ல..." என்று சொல்லி சிரித்தாள் அக்கா. இதுவரை  கருப்பி என்று சொன்னோமா?  கறுப்பி என்று சொன்னோமா?  குழப்பமாக இருக்கிறதல்லவா! எனக்கும் அதே குழப்பம்தான். நீங்கள் இதுவரை உச்சரித்து வந்தது கருப்பி என்பதுதான். வல்லின றகரம் போட்டு சொன்னீர்களா இல்லை இடையின ரகரம் போட்டு சொன்னீர்களா என்பது உச்சரிக்கும் போதே புரிந்திருக்கும். புரியவில்லை என்றால்  யரவவழள கசடதபற உச்சரிப்பு வேறுபாட்டை கவனித்துப் பாருங்கள். கருப்பியா? கறுப்பியா? என்பது புரியும். நாமும் இந்த கருப்பி ,சிகப்பி என்ற வார்த்தைகளை எத்தனை முறை பயன்படுத்தியிருப்போம். இப்படி உச்சரித்து எழுத்து வேறுபாட்டைக் கவனித்ததில்லையே என்று தோன்றுகிறதா?  சரி போகட்டும். விட்டுவிடுங்கள். கிராமப்புறங்களில் இருப்பவர்கள் இப்படிப்ப...

நிற்பதுவே நடப்பதுவே

நிற்பதுவே நடப்பதுவே... உலகில் இருப்பவை யாவும் பொய்யா? மெய்யா? எது உண்மை? எது பொய்? இருக்கிறது ஆனால் இல்லை. இப்படி ஒரு குழப்பமான கேள்விகள் நம் அனைவர் மனதிலும்  அவ்வப்போது வந்து போகும். அதற்கு விடை தெரியாது அப்படியே கடந்து வந்திருப்போம். அப்படி ஒரு கேள்வி பாரதியின் மனதிற்குள் எழ தன் உள்ளத்தில் தோன்றிய கேள்வியை உலகின் முன் வைக்கிறார் பாரதி. அவரே கேள்வி கேட்டு முடிவாகப் பதிலையும் தந்து விடுகிறார்.இப்படித்தான் உலகம் இருக்குமோ என்று நம்மையும் ஓர் ஆய்வுக் களத்தில் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார். பாரதி" உலகத்தை நோக்கி வினவுதல்" என்ற தலைப்பில் எழுதிய அந்தப் பாடல் உங்களுக்காக... நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந் தானா? பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே  கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உம்மில் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம்  கனவினைப்போற் புதைந்தழிந்ததே போனதால்  நானுமோர் கனவோ?-  இந்த  ஞாலமும் பொய்தானோ? காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் ப...

வாழவிடு

வாழவிடு பட்டாம் பூச்சியைப் பார்க்கும்போது அதற்கு வண்ணம் தீட்டிய ஓவியனைப் பாராட்டாமல் இருக்க முடிவதில்லை. அதாவது படைத்தவனின் கைவண்ணத்தை வியக்காமல் கடந்து போகமுடியாது.      வண்ண வண்ண சேலை உடுத்தி பூக்களுக்குப் பூ பறந்து சென்று   "உன்னைவிட நான் ஒன்றும் அழகில் குறைச்சல் கிடையாது "என்று முன்னும் பின்னும் பறந்து அழகு காட்டும் .  தொடர்ந்து ஓரிடத்திலேயே இருக்காமல் அங்குமிங்கும் சுற்றி ஆனந்த கூத்தாடும்.   பட்டாம்பூச்சியைக் கண்டால் சிறுவர்களால் சும்மா இருக்க முடியாது.  அதைப் பிடிப்பதற்காக அதன் பின்னாலேயே ஓடுவர்.      பிடிபட்டேனா பார் என்று பட்டாம்பூச்சிகள் பறந்து பறந்து விளையாட்டுக் காட்டும்.      அதன் பின்னால் சுற்றுதில் இருக்கும் இன்பமே அலாதிதான்.      ஒருமுறை சிறுவன் ஒருவன் தன் அப்பாவோடு பூங்காவிற்குச் சென்றான்.      அங்கு வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கின.       கூடவே வண்ணத்துப்பூச்சிகளும் போட்டிப்போட்டு அழக...

முழு பூசனிக்காயைச் சோத்துக்குள் மறைத்த கதை

முழு பூசனிக்காயைச் சோத்துக்குள் மறைத்த கதை முழு பூசனிக்காயைச் சோத்துக்குள் மறைக்க முடியுமா?  அதெப்படி முடியும்? இந்தக் கதை எல்லாம் எங்களிடம் வேண்டாம். பொய்யைச் சொன்னாலும் கொஞ்சம் பொருந்தும்படியாகச் சொல்ல வேண்டாமா? என்று தானே கேட்கிறீர்கள். என் மனதிலும்  இதே கேள்விதான். ஆனால் இப்படியொரு பழமொழி ஏன் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிறது? ஒரு வேளை சின்ன பூசனிக்காயாக இருக்குமோ? அதெப்படி? ஒரு முட்டையை மறைத்து வைத்தாலே உள்ளேன் ஐயா என்று வெளியே பிதுங்கிக் கொண்டு வந்து நிற்கிறது. முட்டையைவிட சிறிய பூசனிக்காயை எங்கே போய் தேடுவது? ஆனாலும் பழமொழி பழக்கமொழி  அல்லவா?  பழக்கமொழி ,முதுமொழி எப்படி  பொய்மொழியாகும்.    இல்லாத ஒன்று எப்படி நம் காதுகளுக்கு  வந்து சேரும்.?  பொருள் மாறுபாடு உருட்டல்  பிரட்டலாக வந்து சேர்த்திருக்கலாம்.   ஆனால் பூசனிக்காய் இருந்ததென்னவோ  உண்மையாகத்தான் இருக்கும்.   இந்தப் பூசனிக்காயை எப்படியாவது பறித்துவந்து பொரியல் செய்து உங்கள் முன் படைத்துவிட வேண்டும் என்று  வெகு நாட்களாக ஆசை. அதற்கான தேடுதல் வேட்டையில் இறங்கின...

நா நெகிழ் சொற்றொடர்கள்

நா நெகிழ் சொற்றொடர்கள்  மொழி விளையாட்டு சொற்களைப்  பிழையின்றி உச்சரிக்கப் பயிற்சி தருவதாக இருக்கும்.    ழகர றகர லகர எழுத்துகள் சரியாக   உச்சரிக்கப்பட  சில சொற்றொடர்களைச்   சொல்லிச்சொல்லி   பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.   பள்ளிக் குழந்தைகள் விளையாட்டாக  இத்தகைய சொற்றொடர்களைச்    சொல்லி விளையாடுவர்.  அதுகூட நல்ல தமிழ் உச்சரிப்புக்கு   உதவுவதாக இருக்கும்.    இன்றும்கூட  ஒரு சில மாவட்டங்களைச்  சேர்ந்தோர் ள , ல , ழ வேறுபாடு  இல்லாமல் பேசுவதைக்   கேட்கும்போது தமிழ்   என்ன பாடுபடுகிறது என  வருந்துவதைத் தவிர  வேறுவழி தெரியாது.  படித்தவர்கள் புத்தகங்களில்  கண்டிப்பாக நல்ல தமிழ்ச் சொற்களை  மட்டுமே படித்திருப்பார்கள். அவர்கள் தவறாக உச்சரிக்கும்போது  வியப்பாக இருக்கும்.சரியான உச்சரிப்பு  இல்லை என்றால் பொருள் மாறிப் போகும். பிழைபட பேசுவது தவறாகாதா.?... பிழையில்லாமல் பேச பயிற்சி  எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ் மொழி என்பத...

நின்றன நின்றன...

இந்த வாழ்வு நிலையில்லாதது. நாம் நிரந்தரமாக இந்த உலகில்  வாழப் போகிறவர்கள் என்ற நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நேற்று இருந்தது இன்று நம்மிடம் இல்லை. நாளை என்ன நடக்குமோ நமக்குத் தெரியாது. இப்படித்தான் வாழ்வோம் என்று யாரும் முடிவு செய்ய முடியாது. இங்கு நிரந்தரம் என்று எதுவும் இல்லை. விருப்பம் போல் வாழ்வது வாழ்க்கையல்ல. வாழுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் வாழும்போதே அறக்காரியங்களைச் செய்து வாழுங்கள். இதுதான் பட்டறிவாளர்கள் நமக்குச் சொல்லித்தரும் பாடம்.  நல்லது செய்வதற்கு நாள் பார்க்கக் கூடாது. நாள் பார்த்து ,காலம் பார்த்து செய்வேன் என்று காத்திருந்தால் நல்லது நடைபெறாமலேயே போய்விடலாம். சிறிது காலம் கழித்து நல்ல காரியங்கள் செய்துவிட்டு வருகிறேன் என்று கூறினால் கூற்றுவன் உங்களுக்காகக் காத்திருக்கப் போவதில்லை. இதனை உணர்த்தும் அருமையான நாலடியார் பாடல் உங்களுக்காக. ‘நின்றன நின்றன நில்லா’என உணர்ந்து,ஒன்றின ஒன்றின வல்லே, செயின், செய்க-சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்து, உடன்வந்தது வந்தது, கூற்று!               ...

பழமுறத்தால் சாடினாள்

பழமுறத்தால் சாடினாள் ஒரு சமயம் ஔவையார் வழி நடந்த களைப்பு தீர ஓரிடத்தில்  அமர்ந்திருந்தார். அவ் வழியாக வந்த ஒருவன்  ஏதோ ஒரு வயதான அம்மா களைப்பாக இருப்பதைப் பார்த்து அருகில் வந்தான். அவர் நிலையைக் கண்டு மிக மனம் வருந்தினான். அவருடைய தோற்றம் அவன் உள்ளத்தை உருக்கியது. அவரிடம் "எங்கிருந்து வருகிறீர்கள் அம்மா? "என்று அன்போடு விசாரித்தான்.  ஔவையும், "தான் தொலை தூரத்திலிருந்து வருவதாகவும் நெடுநேரம் நடந்ததால் பசியாக இருக்கிறேன். சற்று அமர்ந்து விட்டு சென்றால் களைப்பு நீங்கிவிடும் என்று அமர்ந்திருக்கிறேன்" என்றார் சோர்வாக. அந்த அம்மாவின் நிலைமைக்காகப்  பரிதாபப்பட்டு, அவருடைய பசியைப் போக்க எண்ணி "அம்மா, தாங்கள் பசியோடு இங்கிருந்து செல்ல வேண்டாம். என் வீட்டிற்கு வந்து பசியாற்றிவிட்டு, அதன் பிறகு செல்லலாம்."என்று வருந்தி அழைத்தான். ஔவையும் அவன் அழைப்பை ஏற்று அவன் கூடவே அவன் வீட்டிற்குச் சென்றார். அதுவரை அவன் தன் மனைவியைப் பற்றி அடியோடு மறந்துவிட்டான். அவள் நினைவு அவனுக்கு அப்போதுதான் எழுந்தது.  அவள் ஔவையைப் பார்த்ததும் என்ன சொல்வாளோ என்று அவன் உள்ளம் கவலையுற்றது.  ஔவைய...